உலக செய்திகள்கல்விகிரைம்பயனுள்ள தகவல்மருத்துவம்வரலாறுவரி விளம்பரங்கள்

தொற்றுநோயினால் மனிதன் பாதிக்கப்பட்டது எப்போது?பேய் ,பிசாசு, கடவுளின் சாபம் என்ற மூடநம்பிக்கை ஒழிந்தது எப்போது?கேள்விக்கு பதில் – விண்மீன் நியூஸ்

advertisement by google

அறிவியலின்வழியில்

தொற்றுநோயினால் மனித இனம் பாதிக்கப்படுவது இது முதல்முறை அல்ல! ஐந்தாயிரம் ஆண்டுகளுக்கு முன்பே மனித இனம் தொற்றுநோயை சந்தித்ததாக அகழ்வாராய்ச்சியாளர்கள் நம்புகிறார்கள். 

advertisement by google

வேட்டையாடி உணவை சேகரித்து நாடோடிகளாக வாழ்ந்து வந்த மனித இனம் விவசாயத்தை கண்டுபிடித்த பின்பு ஒரு இடத்தில் நிலையாக தங்கி வாழ தொடங்கியது. விவசாய உற்பத்தியினால் உணவு பாதுகாப்பும், நிரந்தர குடியிருப்பினால் விலங்குகளிடம் இருந்து பாதுகாப்பும் கிடைத்தது. நூறுக்கும் குறைவான நாடோடி குழுக்களாக வாழ்ந்து வந்த மனித இனம் விவசாய வளர்ச்சியினால் சில நூறு மக்கள் தொகை கொண்ட கிராமங்களானது. மேலும் வளர்ச்சி அடைந்து பல்லாயிரம் மக்கள் தொகை கொண்ட நகரங்களாக வளர்ச்சி பெற்றது. 

advertisement by google

இந்த வளர்ச்சி காரணமாக மக்கள் அனைவரும் நெருக்கமாக ஒரு இடத்தில் வாழ்ந்து வந்ததும், கால்நடை வளர்ப்பும் கழிவுகள் பெருக வழிவகுத்தது. இந்த கழிவுகளால் சுற்றுப்புறமும் நீரும் மாசடைந்து. தானியங்கள் சேமிப்பு பெருகும் போது கூடவே எலிகள் பூச்சிகள் பெருகியது. அத்தோடு கூடவே காலரா மற்றும் பிளேக் போன்ற நோய்களும் மக்கள் குடியிருப்புகளில் பெருகியது. 

advertisement by google

இந்த காலக்கட்டத்தில் பெரும்பங்கு மனித இனம் தொற்று நோயால் மாண்டது. தொற்றுநோயை முதல்முறையாக சந்தித்த மனித இனம் இதன் காரணம் தெரியாமல் அஞ்சி நடுங்கியது. இதற்கெல்லாம் காரணமாக மனிதக்கு அப்பாற்பட்ட ஏதே ஒரு சக்தி தான் என்று முடிவுக்கு வந்தது. அதை பேயாக, கடவுளின் சாபமாக, பில்லி சூனியமாக மக்கள் கருதினார். அதனால் கடவுளுக்கு சாபம் தீர பரிகாரம் செய்யவும், பேய்களை பில்லி சூனியம் பூசாரிகளை மக்கள் நாடவும் செய்தார்கள். 

advertisement by google

கலிலியோ பதினேழாம் நூற்றாண்டில் நுண்ணோக்கியை கண்டுபிடித்தார். 1858 ஆம் ஆண்டு லூயி பாஸ்டர் வெறும் கண்ணால் பார்க்க முடியாத நுண்ணுயிரிகள் நோய் உருவாக காரணம் என்று கண்டுபிடித்தார். நுண்ணுயிரியல் கண்டிபிடிப்பாளர் ராபர்ட் கோச்  (1830-1910) காலராவுக்கு காரணமான கிருமியை கண்டறிந்தார்.

advertisement by google

எலிகள் மூலம் பரவும் எர்சினியா பெசுட்டிசால் என்ற பாக்டீரியா தான் பிளேக் நோய்க்கு காரணம் என்று லெக்சாண்டர் எர்சினும், ஷிபாசாபுரோ கிடசாட்டோவும் கண்டறிந்தார். கி.பி 1928ல் சர் அலெக்சாண்டர் ஃபிளெமிங் பென்சிலினை கண்டறிந்தார். இந்த கண்டுபிடிப்புகள் பல்லாயிரம் மனித உயிர்கள் நோயின் இருந்து காப்பாற்றியது. 

advertisement by google

பல்லாயிரம் ஆண்டுகளாக காலரா, பிளேக் போன்ற தொற்றுநோய்களால் கொத்துகொத்தாக மாண்டு வந்த மனிதஇனம் சில நூறு ஆண்டுகளில் அறிவியலின் திசையில் பயணித்து அந்த நோய்களின் துயரை துடைத்தது. 

advertisement by google

அதேநேரம், கடவுளின் சாபம், பேய் பிசாசு போன்ற மூடநம்பிக்கைகளை ஒழிக்கவும் வழிவகுத்தது.✍?winmeenNews

advertisement by google

Related Articles

Back to top button