இந்தியாதமிழகம்தமிழ்நாடு மாவட்டம்விளையாட்டு

தேசிய மற்றும் சர்வதேச விளையாட்டு போட்டிகளுக்கு பயிற்சி ? தூத்துக்குடி ஆட்சியர் சந்தீப் நந்தூரி தகவல்?முழுவிவரம் -விண்மீன்நியூஸ்

advertisement by google

தேசிய மற்றும் சர்வதேச
விளையாட்டு போட்டிகளுக்கு பயிற்சி – தூத்துக்குடி ஆட்சியர் தகவல்

advertisement by google

✍தூத்துக்குடி மாவட்டத்தில் அரசின் விதிமுறைகளின்படி, தேசிய மற்றும் சர்வதேச
விளையாட்டு போட்டிகளுக்கு தயாராகும் விளையாட்டு நபர்களுக்கு பயிற்சிகள்
வழங்கப்படவுள்ளது என மாவட்ட ஆட்சித்தலைவர் சந்தீப் நந்தூரி தெரிவித்துள்ளார்.

advertisement by google

✍சர்வதேச மற்றும் தேசிய அளவிலான விளையாட்டு போட்டிகளுக்கு தயாராகும்
விளையாட்டு நபர்களின் பயிற்சி நடவடிக்கைகளை விதிமுறைகளுடன் மேற்கொள்வதற்கு
தமிழக அரசு அனுமதி அளித்துள்ளது. அதன் அடிப்படையில் தூத்துக்குடி மாவட்ட
விளையாட்டரங்கில் பயிற்சிகள் வழங்கப்படவுள்ளது. 15 வயது முதல் 50 வயதிற்குட்பட்ட வீரர்,
வீராங்கனைகளுக்கு பயிற்சிகள் மேற்கொள்ள அனுமதி வழங்கப்படும்.
தடகளம், வளைகோல்பந்து, கைப்பந்து, கையூந்துப்பந்து, கூடைப்பந்து இறகுப்பந்து,
டென்னிஸ் ஆகிய விளையாட்டுகளுக்கு சமூக இடைவெளியுடன் பயிற்சிகள் மேற்கொள்ள
அனுமதி வழங்கப்படும், டேக் வாண்டோ, ஜூடோ, கபாடி, கராத்தே குத்துச்சண்டை, மல்யுத்தம்
ஆகிய விளையாட்டுகளுக்கு உடற்பயிற்சிகள் மட்டும் அனுமதி வழங்கப்படும்.

advertisement by google

✍குழு
விளையாட்டில் தனிப்பட்ட விளையாட்டு நுணுக்கங்களை கற்றுக்கொள்ள குறைந்த நபர்களுடன்
சமூக இடைவெளியுடன் பயிற்சிகள் வழங்கப்படும்.
பயிற்சியில் கலந்துகொள்ள வரும் வீரர்கள், வீராங்கனைகளுக்கு உடலின் வெப்பநிலை
பரிசோதனை மேற்கொள்ளப்படும். அனைவரும் முககவசம் கட்டாயம் அணிந்து வரவேண்டும்
வீரர், வீராங்கனைகள் தனித்தனியாக உபகரணங்களை பயன்படுத்த வேண்டும். விளையாட்டு
உபகரணங்களை பகிர்ந்து கொள்ளகூடாது. பயிற்சிக்கு முன்பும் ,பின்பும் கிருமி நாசினி மூலம்
கைகளை நன்றாக கழுவ வேண்டும். மேலும் வீரர்கள், வீராங்கனைகள் மற்றும் பயிற்சி
அளிப்பவார்கள் ஆரோக்கிய சேது செயலியை பயன்படுத்திட வேண்டும்.

advertisement by google

✍அரசின் மறு உத்தரவு வரும் வரை உடற்பயிற்சிகூடம் மற்றும் நீச்சல்குளம்
திறக்கப்படமாட்டாது. பயிற்சிகள் மேற்கொள்பவர்கள் அதற்கான படிவத்தை மாவட்ட
விளையாட்டு (ம) இளைஞர் நலன் அலுவலர் அவர்களிடமிருந்து பெற்று பூர்த்தி செய்து
சமர்ப்பிக்க வேண்டும் அரசின் விதிமுறைகளின்படி standard operating procedure பயிற்சிகள்
மேற்கொள்ளப்படும் என மாவட்ட ஆட்சித்தலைவர் சந்தீப் நந்தூரி
தெரிவித்துள்ளார்.

advertisement by google

advertisement by google

advertisement by google
advertisement by google

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button