இந்தியாதொழில்நுட்பம்

கேரளாவில் ஆன்லைனில் கேமரா ஆர்டர் செய்தவருக்கு டைல்ஸ் பார்சல்?

advertisement by google

♦கேரளாவில் ஆன்லைனில் கேமரா ஆர்டர் செய்தவருக்கு டைல்ஸ் பார்சல்

advertisement by google

?நாடு முழுவதும் அனைத்து பொருட்களும் ஆன்லைன் மூலம் விற்பனை செய்யப்பட்டு வருகிறது. கேரள மாநிலம் கண்ணூர் பகுதியைச் சேர்ந்த விஷ்ணு சுரேஷ் என்பவர் நவீன கேமரா வாங்க விரும்பினார். இதற்காக ஆன்லைன் மூலம் பிரபல நிறுவனத்தில் கேமரா கேட்டு பதிவு செய்தார்.

advertisement by google

?இதற்காக ரூ.27 ஆயிரத்து 500 பணமும் செலுத்தினார். விஷ்ணு சுரேசுக்கு ஒரு வாரத்தில் பார்சல் மூலம் கேமரா வந்து சேருமென நிறுவனம் தகவல் தெரிவித்தது. நிறுவனம் கூறியபடி, விஷ்ணுசுரேசுக்கு ஒரு வாரத்தில் கேமரா பார்சல் வந்தது. அதை திறந்து பார்த்த விஷ்ணு சுரேஷ், அதிர்ச்சி அடைந்தார்.

advertisement by google

?பார்சலுக்குள் கேமராவுக்கு பதில் டைல்ஸ் இருந்தது. இதுபற்றி விஷ்ணு சுரேஷ் உடனடியாக ஆன்லைன் நிறுவனத்தை தொடர்பு கொண்டு புகார் தெரிவித்தார்.

advertisement by google

?நிறுவனத்தினர் தவறுக்கு வருந்துவதாகவும், புதிய கேமரா பார்சலை அடுத்த ஒரு வாரத்திற்குள் அனுப்புவதாகவும் உறுதி கூறினர். வழக்கமாக இதுபோன்ற மோசடிகள் அவ்வப்போது நடப்பது உண்டு. இப்போது ஆன்லைன் விற்பனை அதிகரித்து ஏராளமானோர் ஆன்லைன் மூலமே பொருட்கள் வாங்க தொடங்கிய பின்பு இத்தகைய மோசடிகள் குறைந்திருந்தது.

advertisement by google

?இந்த நிலையில் மீண்டும் கேரளாவில் இதுபோன்ற பார்சல் மோசடி நடந்திருப்பது வாலிபர்கள், பெண்கள் மத்தியில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

advertisement by google

advertisement by google
advertisement by google

Related Articles

Back to top button