பயனுள்ள தகவல்மருத்துவம்

குடி மற்றும் போதை பழக்கத்திலிருந்து எப்படி வெளிவருவது? கேள்விக்கு பதில்?விண்மீன் நியூஸ்

advertisement by google

கேள்வி எண் : குடி மற்றும் போதை பழக்கத்தில் இருந்து எப்படி வெளிவருவது?

advertisement by google

குடி / புகை / கஞ்சா மற்றும் பல்வேறு போதைப் பழக்கங்களிலிருந்து வெளியே வருவதற்காக உலகம் முழுவதும் ஒரு இயக்கம் இலவசமாக வகுப்புகள் நடத்துகிறார்கள்.

advertisement by google

அந்த இயக்கத்துக்கு பெயர் ” AA ” ( alcoholics anonymous) ( ஆல்கஹாலிக்ஸ் அனானிமஸ் )

advertisement by google

இந்த இயக்கம் பில் வில்சன் மற்றும் பாப் ஷ்மித் என்ற இரு குடிநோயாளிகள் ஒன்று சேர்ந்து, தங்களது குடியை நிறுத்த முயற்சி எடுத்து, அதற்கான வழிமுறைகளை கண்டறிந்து, அதில் வெற்றி கண்டு, திருந்தியவர்கள்.

advertisement by google

அவர்களைப்போலவே உலகில் உள்ள அனைவரும் குடியை மறந்து வாழ வேண்டும் என்ற நல்லெண்ணத்தில் அவர்களால் உருவாக்கப்பட்ட ஒரு இயக்கமே இந்த ஏஏ இயக்கம்.

advertisement by google

இந்த இயக்கம் 1935 ஆம் வருடம் அமெரிக்காவில் உருவாக்கப்பட்டு கடந்த 84 வருடங்களாக 180 நாடுகளில் செயல்பட்டு 2 மில்லியன் குடிநோயாளிகளை திருத்தி ஒரு லட்சத்து 18 ஆயிரம் குழுக்கள் உடையது.

advertisement by google

இந்த இயக்கத்தில் குடிநோயை குணப்படுத்துவதற்கு எந்த ஒரு கட்டணமும் வசூலிப்பதில்லை. முற்றிலும் இலவசம்.

advertisement by google

இந்த இயக்கம் மீடியாவில் விளம்பரம் செய்யக் கூடாது என்ற கொள்கை இருப்பதால் இதுவரை பலருக்கும் தெரியாத இயக்கமாகவே நடந்து வருகிறது.

இந்த இயக்கம் பற்றி எனக்கு ஒரு அன்பு உள்ளம் கொண்ட தோழி விளக்கமாக கூறினார்.

இந்த இயக்கத்தில் கலந்து கொள்பவர்களின் பெயர்களும் , இது சம்பந்தப்பட்ட நபர்களின் பெயர்களும் வெளியே குறிப்பிடக் கூடாது என்ற கொள்கை இந்த இயக்கத்தில் உள்ளதால் நான் அந்த தோழியின் பெயரை கூறவில்லை.

இந்த இயக்கம் தமிழ்நாட்டில் அனைத்து ஊர்களிலும் இருக்கிறது.

இந்த இயக்கம் இந்தியாவில் அனைத்து மாநிலத்திலும் இருக்கிறது.

இந்த இயக்கம் உலகில் 180 நாடுகளில் உள்ளது.

அனைத்து ஊர்களின் தொடர்பு எண்ணையும் உங்களுக்கு இந்த கட்டுரையின் முடிவில் கொடுக்கப்பட்டுள்ளது.

இந்த வகுப்புகள் பல ஊர்களில் கிறிஸ்தவ தேவாலயங்களில் நடப்பதால் , இது ஒரு மதம் மாற்றும் இயக்கம் என்று சந்தேகப்பட்டேன்.

இதை கண்டுபிடிப்பதற்காக நானே பல ஊர்களில் குடி நோயாளி என்று பொய் சொல்லி வகுப்புகளில் கலந்து கொண்டேன்.

இந்த வகுப்பில் பலரும் நான் யார் என்று தெரியாமல் குடிநோயாளி என்று நினைத்துக்கொண்டு எனக்கு அன்பாக அதிலிருந்து வெளிவரும் விதிகளையும், யோசனைகளையும் கற்றுக் கொடுத்தார்கள்.

சில ஊர்களில் நான் யார் என்பதைக் கண்டு கொண்டார்கள்.

இந்த இயக்கத்தில் யார் பேசினாலும் வகுப்பு எடுத்தாலும் இறைவன் என்ற பெயரை மட்டுமே உச்சரிக்க வேண்டும் என்று ஒரு கொள்கை இருக்கிறது. எந்த ஒரு மதம் சார்ந்த பெயரையும் பயன்படுத்தக் கூடாது என்று விதி உள்ளது.

இந்த இயக்கத்தில் குடிநோயாளிகளை மோசமானவர்கள், கெட்டவர்கள் என்று கூறாமல் குடிநோயாளிகள் என்று கூறுகிறார்கள்.

மற்ற நோய்களைப் போல் குடியும் ஒரு நோயாக பார்த்தால் மட்டுமே இதற்கு தீர்வு காண முடியும் என்பது இவர்களின் கொள்கை.

குடி நோயாளிகளுக்கு என்று பல புத்தகங்கள் இருக்கிறது. அனைத்து புத்தகத்திலும் எந்த ஒரு ஜாதி மதம் பெயர் இல்லாமல் பொதுவாக இருக்கிறது மேலும் இறைவன் என்ற பெயர் மட்டுமே இருக்கிறது.

மேலும் மதம் மாற்ற நினைக்கும் நண்பர்களை விட மாறும் நண்பர்களை நினைத்துத்தான் எனக்கு பாவமாகவும், வருத்தமாகவும் இருக்கும்.

நான் சென்று பார்த்த வரை அங்கே மதம் மாற்றும் வேலை நடக்கவில்லை.

ஒருவேளை நடந்தால் எனக்கு தெரியப்படுத்துங்கள் நாம் அதற்கான மாற்று வழியை யோசிப்போம்.

இந்த வகுப்பு பல ஊர்களில் கல்லூரிகள், பள்ளிக்கூடங்கள், இந்துமத கோயில்களிலும், கிறிஸ்தவ தேவாலயங்களிலும் நடந்துவருகிறது.

மேலும், குடிநோயாளிகளுக்கு இயக்கம் நடப்பதைப்போல, குடி நோயாளிகளின் குடும்பத்தாருக்கும் நண்பர்களுக்கும் என தனி இயக்கம் நடந்து வருகிறது அதன் பெயர் –
” Al – Anon ” . ( ஆல் – அனான் ) . இந்த இயக்கம் உலகத்தில் 133 நாடுகளில் உள்ளது.

இந்த இயக்கத்தில் குடிநோயாளிகளின் குடும்பத்தாருக்கும் நண்பர்களுக்கும் பயிற்சி வகுப்புகள் நடக்கிறது . அதில் குடிநோயாளிகளை எப்படி அணுக வேண்டும்? குடும்பத்தினர் குடியின் தாக்கத்திலிருந்து தங்களையும் குழந்தைகளையும் எப்படி காப்பாற்றிக் கொள்ள வேண்டும்? அவர்களால் உடல் மற்றும் மன நலம் கெட்டுப் போகாமல் இருக்க என்ன செய்ய வேண்டும்? செல்ப் கேர் ( SELF CARE ) எனப்படும் நமக்கு நாமே அக்கறை கொள்ளும் முறையையும் கற்றுக் கொடுக்கிறார்கள்.

மேலும் குடி நோயாளிகளின் குடும்பத்தில் இருக்கும் குழந்தைகளுக்கு தனி வகுப்பு நடந்து கொண்டிருக்கிறது அந்த இயக்கத்தின் பெயர்
” Alateen ” ( ஆலடீன் )

இந்த இயக்கத்தில் குடி நோயாளிகளின் குழந்தைகள் மனநிலை எவ்வாறு பாதிக்கிறது, அதிலிருந்து குழந்தைகள் எப்படி வெளியே வரவேண்டும், இவர்கள் நாளை பெரியவர்களாகி இதே போன்ற போதைப் பழக்கத்தில் மாட்டிக் கொள்ளாமல் இருக்க என்ன செய்ய வேண்டும் என்பதை கற்றுக் கொடுக்கிறார்கள்.

இப்படி மொத்தம் மூன்று இயக்கங்கள் நடந்து கொண்டிருக்கின்றன

advertisement by google

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button