இந்தியாஉலக செய்திகள்கிரைம்தமிழகம்தமிழ்நாடு மாவட்டம்தொழில்நுட்பம்பயனுள்ள தகவல்மருத்துவம்வரலாறுவரி விளம்பரங்கள்

சீனா அனுப்பிய டுபாக்கூர் ரேபிட் கிட் டெஸ்ட் கருவிகள் 94% தவறான ரிசல்ட்?2 நாளைக்கு ரேபிட் கிட் டெஸ்ட் வேண்டாம் -ஐசிஎம்ஆர் அதிரடி – முழு விபரம் – விண்மீன் நியூஸ்

advertisement by google

94% தவறான ரிசல்ட்தான் வருது……

advertisement by google

2 நாளைக்கு ரேபிட் கிட் டெஸ்ட் வேண்டாம்……

advertisement by google

ஐசிஎம்ஆர் அதிரடி அறிவிப்பு

advertisement by google

அடுத்த இரண்டு நாட்களுக்கு ரேபிட் டெஸ்ட் கிட் பயன்படுத்த வேண்டாம் என்று, அனைத்து மாநிலங்களையும், ஐசிஎம்ஆர் கேட்டுக் கொண்டு இருக்கிறது.

advertisement by google

கொரோனா வைரஸ் பாதிப்பு உள்ளவர்களை துரிதமாக கண்டறிவதற்கு சீனாவில் இருந்து கொள்முதல் செய்யப்பட்டது ரேபிட் டெஸ்ட் கிட் உபகரணம்.

advertisement by google

ஆனால் அது தவறுதலாக ரிசல்ட் காட்டுகிறது என்று மேற்கு வங்க அரசு ஏற்கனவே குற்றம் சாட்டியிருந்தது.

advertisement by google

இன்று ராஜஸ்தான் அரசும் இதே போன்ற ஒரு குற்றச்சாட்டை முன்வைத்து,

advertisement by google

ஐசிஎம்ஆருக்கு கடிதம் எழுதியிருந்தது.

பெருசா எதிர்பார்த்த ரேபிட் டெஸ்ட் கிட் சொதப்பல்.. தப்பு தப்பா ரிசல்ட்.. சோதனையை நிறுத்திய ராஜஸ்தான்அமைச்சர்ராஜஸ்தான் மாநில சுகாதாரத்துறை அமைச்சர் ரகு ஷர்மா, இது பற்றி கூறுகையில்,

இந்த கிட்ஸ், துல்லியத்தன்மை வெறும், 5.4 சதவீதம் மட்டுமே. 90% அளவுக்காவது சரியான ரிசல்ட் கொடுக்கும் என்பதுதான் உறுதி மொழியாக இருந்தது.

ஆனால் அது நடக்கவில்லை. பெரும்பாலும் தப்பான ரிசல்ட்தான் வருகிறது.

குழு கண்டுபிடிப்புஇந்த கருவியின் துல்லிய தன்மை பற்றி ஆய்வு செய்வதற்காக அரசு மருத்துவக் கல்லூரி மருந்தியல் மற்றும் மைக்ரோபயாலஜி துறையை சேர்ந்த நிபுணர்கள் அடங்கிய ஒரு குழு அமைக்கப்பட்டு இருந்தது.

அந்த குழு ஆய்வு செய்தபோது தான் இந்த தகவல் தெரியவந்தது.

அந்த கமிட்டி கொடுத்த பரிந்துரையை அடுத்து நாங்கள் உடனடியாக ரேபிட் கிட் மூலமாக பரிசோதனை செய்வதை நிறுத்தி விட்டோம் என்று தெரிவித்தார்

2 நாட்கள் வேண்டாம்இந்த நிலையில்தான் அடுத்த இரண்டு நாட்களுக்கு எந்த மாநிலமும் துரித பரிசோதனை கருவிகளை பயன்படுத்த வேண்டாம் என்று ஐசிஎம்ஆர் சார்பில் கங்காதர் இன்றைய செய்தியாளர் சந்திப்பில் தெரிவித்தார்

இந்த கருவியை 20 டிகிரி செல்சியஸுக்கும் குறைவாக வெப்பநிலை உள்ள பகுதியில் வைத்து பாதுகாக்க வேண்டும். வெப்பம் அதிகமாக உள்ள இடத்தில் வைத்திருந்தால் சரியாக முடிவுகளை காட்டாது என்பது போன்ற சில நிபந்தனைகளை ஐசிஎம்ஆர் தெரிவித்து இருந்தது.

தமிழகமும் நிறுத்தம்மாநிலங்களில் இதுபோன்ற நிபந்தனைகளைப் பின்பற்றி சோதனை நடத்தினார்களா, இல்லையா என்பதுபற்றி ஐசிஎம்ஆர் அடுத்த இரண்டு நாட்கள் ஆலோசனை நடத்தும் என்று தெரிகிறது

இந்த ஆய்வுக்கு பிறகு அடுத்தகட்ட நடவடிக்கையை ஐசிசிஎம் அறிவிக்கும். தமிழகத்திலும் ரேபிட் டெஸ்ட் கிட் பரிசோதனை கருவிகளை கொண்டு சோதனைகள் நடத்தப்பட்டு வருகிறது.

இதுவும் அடுத்த இரண்டு நாட்களுக்கு நிறுத்தப்படும் என்று தெரிகிறது

advertisement by google

Related Articles

Back to top button