இந்தியாதமிழகம்தமிழ்நாடு மாவட்டம்மருத்துவம்வரி விளம்பரங்கள்

எட்டயபுரத்தில் மகாராஷ்டிர மாநிலத்திலிருந்து வந்த 42 பேரை தனிமைப்படுத்தி கண்கானிப்பு? முழு விவரம்-விண்மீன்நியூஸ்

advertisement by google

மகாராஷ்டிர மாநிலத்தில்இருந்த வந்த தமிழகத்தைச் சேர்ந்த 42 பேர் எட்டயபுரத்தில் உள்ள பாலிடெக்னிக் கல்லூரியில் தனிமைப்படுத்தப்பட்டு கண்காணிப்பு

advertisement by google

தமிழகத்தினை சேர்ந்தவர்கள் பல்வேறு மாநிலங்களில் பணிபுரிந்து வருகின்றனர். கொரோனா ஊரடங்கு காரணமாக அவர்கள் வாழ்வாதரம் பாதிக்கப்பட்டுள்ளனர்.இதனை தொடர்ந்து வெளிமாநிலங்களில் பணிபுரிந்து வரும் தமிழகத்தினை சேர்ந்தவர்களை தமிழகத்திற்கு கொண்டு வர தமிழக அரசு நடவடிக்கை எடுத்துள்ளது.அதன் ஒரு பகுதியாக மகாராஷ்டிரா மாநிலம் மும்பை பகுதியில் உள்ள பணிபுரிந்து வந்த தமிழகத்தினை சேர்ந்தவர்கள் சேலம் அழைத்து வரப்பட்டனர். அங்கிருந்து அவர்கள் சம்பந்தப்பட்ட மாவட்டங்களுக்கு அரசு ஏற்பாடு செய்த பேருந்து மூலமாக அனுப்பி வைக்கப்பட்டனர். அதன் படி மும்பை பகுதியில் பணியாற்றிய தூத்துக்குடி மாவட்டத்தினை சேர்ந்த 42 பேர் பேருந்து மூலம் எட்டயபுரத்திற்கு அழைத்து வரப்பட்டனர். அங்குள்ள பாரதியார் நூற்றாண்டு நினைவு அரசு மகளிர் பாலிடெக்னிக் கல்லூரியில் தனிமைப்படுத்தப்பட்டுள்ளனர். 42 பேருக்கும் மருத்துவ பரிசோதனை செய்யப்பட்டு எவ்வித தொற்று இல்லை என்று முடிவு வந்த பின்னர், அவர்களின் சொந்த ஊர்களுக்கு அனுப்பி வைக்கப்படுவர்கள் என்று அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். எட்டயபுரம் தாசில்தார் அழகர், எட்டயபுரம் காவல் நிலைய ஆய்வாளர் கலா மற்றும் சுகாதாரத் துறை, வருவாய்த் துறை அதிகாரிகள் அங்கு உள்ளவர்களுக்கு தேவையான ஏற்பாடுகளை செய்து வருகின்றனர்.

advertisement by google

advertisement by google

advertisement by google

advertisement by google

advertisement by google

advertisement by google
advertisement by google

Related Articles

Back to top button