இந்தியாஇன்றைய சிந்தனைதமிழகம்தமிழ்நாடு மாவட்டம்பயனுள்ள தகவல்மருத்துவம்

கோவில்பட்டியில் மாணவர்களின் குடும்பங்களுக்கு உதவிக்கரம் நீட்டிய அரசுப்பள்ளி ஆசிரியர்கள்? முழுவிவரம் – விண்மீன்நியூஸ்

advertisement by google

கோவில்பட்டி அருகே கொரோனா ஊரடங்கு காரணமாக வாழ்வாதரம் பாதிக்கப்பட்டுள்ள மாணவர்கள் குடும்பங்களுக்கு உதவிக்கரம் நீட்டிய அரசு பள்ளி ஆசிரியர்கள்

advertisement by google

கோவில்பட்டி அருகே கொரோனா ஊரடங்கினால் வாழ்வாதரம் பாதிக்கப்பட்டுள்ள தங்களது பள்ளி மாணவர்கள் குடும்பத்திற்கு உதவிக்கரம் நீட்டி அசத்தியுள்ளனர் அரசு பள்ளி ஆசிரியர்கள்.

advertisement by google

கோவில்பட்டி அருகேயுள்ள நாலாட்டின்புதூரில் கே.ஆர்.சாரதா அரசு மேல்நிலைப்பள்ளி உள்ளது. இந்த பள்ளியில் சுற்றுவட்டாரத்தில் உள்ள கிராமங்களை சேர்ந்த மாணவ-மாணவிகள் பயின்று வருகின்றனர். கொரோனா காரணமாக பல மாணவர்களின் குடும்பம் வாழ்வாதரம் இழுந்து தவித்து வருவதாக அப்பள்ளி தலைமை ஆசிரியர் சீனிக்கு தகவல் கிடைத்துள்ளது. இதனை தொடர்ந்து தலைமை ஆசிரியர், பள்ளியில் பணியாற்றும் சக ஆசிரியர்களுடன் கலந்து பேசி 100குடும்பங்களுக்கு தங்களால் முடிந்த உதவிகளை செய்ய முடிவு செய்தனர். இதனை தொடர்ந்து வறுமையில் வாடும் பள்ளி மாணவர்கள் குடும்பங்கள், தூய்மை பணியாளர்கள், மாற்றுத்திறனாளிகள் என 100 குடும்பங்களுக்கு 10கிலோ அரிசி, 500 மதிப்புள்ள மளிகை பொருள்கள், முககவசம் என 1லட்ச ரூபாய் மதிப்புள்ள பொருள்களை வழங்கினர். பள்ளி வளாகத்தில் நடைபெற்ற நிகழ்ச்சியில் நாலாட்டின்புதூர் காவல் நிலைய ஆய்வாளர் சுகாதேவி வழங்கினார். இதில் பள்ளி தலைமை ஆசிரியர், ஆசிரியர்கள் கலந்து கொண்டனர். நிகழ்ச்சியில் முடுக்குமீண்டான்பட்டி ஊராட்சி மன்ற தலைவர் கண்ணாயிரம், நாலாட்டின்புதூர் ஊராட்சி மன்ற தலைவர் கடல்ராணிஅந்தோணிராஜ், பள்ளி பெற்றோர் ஆசிரியர் கழக தலைவர் சுப்பாராஜ் மற்றும் பள்ளி ஆசிரியர்கள் , அலுவலக பணியாளர்கள் கலந்து கொண்டனர்.

advertisement by google

advertisement by google

advertisement by google

advertisement by google

advertisement by google
advertisement by google

Related Articles

Back to top button