இந்தியாதமிழகம்தமிழ்நாடு மாவட்டம்பயனுள்ள தகவல்மருத்துவம்வரலாறுவரி விளம்பரங்கள்

போலீஸ் டிரெயினிங்கில் இருக்கும் பயிற்சி காவலர்கள் உடனடியாக பணியில் சேர தமிழகரசு உத்தரவு?முழுவிபரம் – விண்மீன்நியூஸ்

advertisement by google

தேர்வாகி பயிற்சியில் இருக்கும் காவலர்கள் உடனடியாக பணியில் சேர தமிழக அரசு உத்தரவு.!
தேர்வாகி பயிற்சியில் இருக்கும் 8538 பேரும் மே 3ம் தேதிக்குள் பணியில் சேர வேண்டும் என்று தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது.

advertisement by google

கொரோனா வைரஸ் தாக்கம் நாடு முழுவதும் தீவிரமடைந்து வருவதால் நாளுக்கு நாள் பாதிப்பு, உயிரிழப்பு அதிகரித்த வண்ணம் உள்ளது. இதனால் நிறைவடைய இருந்த ஊரடங்கு மே 3 ஆம் தேதி வரை நீடிக்கப்படுவதாக பிரதமர் மோடி அறிவித்திருந்தார். அதன்படி தமிழகத்தில் மே 3 ஆம் தேதி வரை ஊரடங்கு உத்தரவு அமலில் உள்ளது. இதனால் மக்கள் வீடுகளிலேயே முடங்கி இருக்கும் நிலை ஏற்பட்டுள்ளது. அப்படி இருந்தாலும் கொரோனா பாதிப்பு தினந்தோறும் அதிகரித்துக்கொண்டே இருக்கிறது. ஆனால் குணமடைந்தவர்களின் எண்ணிக்கையும் ஒருபக்கம் உயர்ந்து கொண்டே செல்கிறது
தமிழகத்தில் இதுவரை பாதித்தவர்களின் எண்ணிக்கை 1,937 ஆகவும், குணமடைந்தவர்களின் எண்ணிக்கை 1101 ஆகவும் உள்ளது. பின்னர் ஊரடங்கு நீட்டிக்கப்படுமா அல்லது தளர்வு செய்யப்படுமா என்று மே 3 க்கு பிறகு அறிவிக்கப்படும் என்று அரசு தரப்பில் தெரிவித்துள்ளனர்.

advertisement by google

இந்நிலையில், ஊரடங்கு காலத்தில் காவல்துறை இரவு, பகலாக பணிபுரிந்து பொதுமக்கள் தேவையில்லாமல் வெளியில் சுற்றுவதை கண்டித்து விழிப்புணர்வை ஏற்படுத்தி வருகின்றன. இதனால் காவல்துறைக்கு போதுமான ஓய்வு கிடைப்பதில்லை, நேரத்துக்கு உணவு கிடைப்பதில்லை. காவலர்கள் மக்களுக்காக மிக கடுமையாக நேரங்களிலும் பணிபுரிந்து வருகின்றன. இந்த நிலையில் தமிழகத்தில் காவலர்களை அதிகப்படுத்த அரசு ஒரு அறிவிப்பை வெளியிட்டுள்ளது. அதாவது தேர்வாகி பயிற்சியில் இருக்கும் காவலர்கள் உடனடியாக பணியில் சேர தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது. பயிற்சியில் இருக்கும் 8538 பேரும் மே 3ம் தேதிக்குள் பணியில் சேர வேண்டும் என்றும் உத்தரவு பிறப்பித்துள்ளது. ஊரடங்கு உத்தரவை அமல்படுத்தும் பணிகளுக்காக புதிய காவலர்கள் நியமிக்கப்பட உள்ளனர் என்று தமிழக அரசு தெரிவித்துள்ளது.

advertisement by google

advertisement by google

advertisement by google

advertisement by google

advertisement by google
advertisement by google

Related Articles

Back to top button