சுங்கச்சாவடிகள் கட்டணம் உயர்வு வாகன ஓட்டிகள் கண்ணீர்? ஊரடங்கு காலத்திலும் மக்களுக்கு ஆப்பு?


சுங்கச்சாவடிகள் கட்டணம் உயர்வு… வாகன ஓட்டிகள் அதிர்ச்சி
சுங்கச்சாவடிகளில் 5 ரூபாய் முதல் 20 ரூபாய் வரை கட்டணம் உயர்த்தப்பட்டுள்ளது.
மதுரை கப்பலூர் உள்ளிட்ட தமிழகத்தின் 26 சுங்கச்சாவடியில் இன்று முதல் சுங்கச்சாவடி கட்டணம் உயர்த்தப்பட்டுள்ளது.
கொரோனா வைரஸை கட்டுப்படுத்த நாடு முழுவதும் மே 3-ம் தேதி ஊரடங்கு உத்தரவு பிறபிக்கப்பட்டுள்ளது. இன்று முதல் ஊரடங்கில் சில கட்டுப்பாடுகள் தளர்த்தப்படும் என்று மத்திய அரசு தெரிவித்திருந்தது.
இதை தொடர்ந்து திருமங்கலம் கப்பலூர் சுங்கச்சாவடியில் 144 தடை உத்தரவு தளர்த்தப்பட்டு சுங்கச்சாவடி கட்டணம் வசூலிக்கப்பட்டு வருகிறது.
ஏப்ரல் மாதம் வழக்கமாக சுங்கச்சாவடிகளில் புதிய கட்டணம் அமலுக்கு வரும். இந்த மாதம் ஊரடங்கு காரணமாக இன்று முதல் புதிய கட்டணம் வசூலிக்கப்படுகிறது. புதிய கட்டணத்தின் படி 5 ரூபாய் முதல் 20 ரூபாய் வரை கட்டணம் உயர்த்தப்பட்டுள்ளது.
ஊரடங்கு முழுமையாக தளர்த்தப்படாத இந்த தருணத்தில் சுங்கச்சாவடி கட்டணம் உயர்த்தப்பட்டுள்ளது வாகன ஒட்டிகள் இடையே அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.
தமிழகத்தில் உள்ள 48 சுங்கச்சாவடிகளில் 26 சுங்கச்சாவடிகளில் புதிய கட்டணம் வசூல் செய்யப்பட்டு வருகிறது