தமிழகம்தமிழ்நாடு மாவட்டம்பயனுள்ள தகவல்மருத்துவம்

கோவில்பட்டி கடலையூரில் தூயபவுலின் ஆலயத்தில் மளிகைப்பொருட்கள் காய்கறிகள் வழங்கள்

advertisement by google

கோவில்பட்டி அருகே கடலையூரில் உணவு பொருள்கள் வழங்கல்

advertisement by google

கொரோனா வைரஸ் தொற்று பரவாமல் தடுக்க ஏற்படுத்தப்பட்டுள்ள 144 ஊரடங்கு உத்தரவால், வருமானம் இன்றி தவிக்கும் ஏழை எளிய குடும்பங்களுக்கு கோவில்பட்டி அருகே கடலையூர் தூய பவுலின் ஆலயத்தில் வைத்து அரிசி பருப்பு மற்றும் காய்கறிகள் அடங்கிய தொகுப்பு வழங்கப்பட்டது. நிகழ்ச்சிக்கு, கோவில்பட்டி ஊராட்சி ஒன்றிய அலுவலர் மாணிக்கவாசகம் தலைமை வகித்தார். ஆலய சேகர தலைவர் ஏசுவடியான் துரைசாமி மற்றும் ஞானதுரை ஆகியோர் முன்னிலை வகித்தனர். ஆலய செயலாளர் ஜேக்கப் ராஜாமணி, எபனேசர் கிருபாகரன், ஐசக் அருள்ராஜ், ஊராட்சி ஒன்றிய முன்னாள் துணை தலைவர் சுப்புராஜ், பஞ்., தலைவர் திராவிட செல்வி மாரிச்சாமி, ஒன்றிய கவுன்சிலர் பரமேஸ்வரி பாலமுருகன், ஓய்வு பெற்ற தலைமையாசிரியர் ஆபிரகாம், தமிழ் மாநில காங்கிரஸ் இளைஞர் அணி கனி, உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர். நிகழ்ச்சியில் நூற்றுக்கும் மேற்பட்ட பயனாளிகள் சமூக இடைவெளி விட்டு கலந்து கொண்டு உதவிகளை பெற்று பயன் பெற்றனர். ஏற்பாடுகளை தூய பவுலின் ஆலய ஆண்கள் ஐக்கிய சங்க பொருளாளர் ஜான் ஜெபராஜ், செயலாளர் லிவிங்ஸ்டன் தங்கையா ஆகியோர் செய்திருந்தனர். தொடர்ந்து கிராமம் முழுவதும் கிருமிநாசினி தெளிக்கப்பட்டது.

advertisement by google

advertisement by google

advertisement by google

advertisement by google

advertisement by google

advertisement by google
advertisement by google

Related Articles

Back to top button