இந்தியாஉலக செய்திகள்மருத்துவம்

சீனாவிலிருந்து திட்டமிட்டு அனுப்பபட்ட பூனை? அதிரவைக்கும் பரபரப்பு தகவல்கள்?

advertisement by google

எல்லாத்துக்கும் காரணம் அந்த பூனைதான்.. சீனாவிலிருந்து திட்டமிட்டு அனுப்பி.. அதிர வைக்கும் பரபர தகவல்

advertisement by google

சென்னை: இது எல்லாத்துக்கும் காரணம் அந்த பூனைதான்.. சீனாவிலிருந்து வந்த கப்பலில் திட்டமிட்டே பூனையை கூண்டுக்குள் அடைத்து இந்தியாவுக்கு அனுப்பப்பட்டுள்ளது என்று அதிர்ச்சிகரமான தகவல் வெளியாகி உள்ளது!

advertisement by google

சீனாவில் இருந்து மர்மமான முறையில் சென்னை வந்த பூனை

advertisement by google

சென்ற மாதம் கொரோனா வைரஸின் பீதி உச்சத்தில் இருந்தது.. அந்த சமயத்தில்தான், அதாவது 18ம் தேதி
சென்னை துறைமுகத்துக்கு சீனாவில் இருந்து ஒரு கப்பல் வந்தது.
அந்த கப்பலில் கண்டெய்னரின் ஒரு ஓரத்தில் கூண்டில் அடைக்கப்பட்ட நிலையில், ஒரு பூனை இருந்தது. இதை பார்த்ததும் அதிகாரிகள் பதறிபோய், விலங்கு நல அதிகாரிகளுக்கு தகவல் தந்தனர்.. இந்த அச்சத்துக்கு காரணம் அந்த கப்பல் சீனாவில் இருந்து வந்தது என்பதுதான்!!!

advertisement by google

பூனை
முதல் வேலையாக, அந்த பூனைக்கு கொரோனா வைரஸ் நோய் பாதிப்பு இருக்கிறதா என்று சோதனை செய்யப்பட்டது.. முதல்கட்டமாக வைரஸ் எதுவும் பூனையை தாக்கவில்லை என்று தெரிந்தது. இருந்தாலும் அந்த பூனையை தனியாக வைத்து கண்காணித்தனர்.. மேலும் அந்த பூனையை யார் ஏற்றினார்கள், எதற்காக ஒரு பூனையை மட்டும் கூண்டுக்குள் அடைத்து கப்பலில் ஏற்றி அனுப்ப வேண்டும் என்ற சந்தேகமும் எழுந்தது.

advertisement by google

கூண்டுக்கள்
இன்னொரு பக்கம் 15 நாட்களுக்கும் மேலாக சாப்பாடு, தண்ணி இல்லாமல் பூனை எப்படி உயிருடன் இருக்க முடியும் என்ற சந்தேகம் எழுந்தது… அதேசமயம், தெரியாமல் வழியில் ஏறியிருக்கவும் வாய்ப்பில்லை, ஏனென்றால் கூண்டுக்குள் அடைப்பட்ட நிலையில் கிடந்தது.. இப்படி பூனை பற்றின நித்தம் ஒரு சந்தேகம் எழுந்து கொண்டே இருந்தாலும் மர்மம் மட்டும் விலகாமல் இருந்தது.

advertisement by google

நடவடிக்கை
இதனிடையேதான், கொரோனோ வைரஸின் பீதி இந்தியாவில் தலைதூக்க தொடங்கியது.. மத்திய அரசு பரபரப்பாகிவிட்டது.. சீனாவில் ‘கோவிட்-19′ வைரஸ் காய்ச்சல் பரவிவருவதால், அங்கிருந்து இந்தியாவுக்கு வருபவர்கள் தீவிரமாக கண்காணிக்கப்பட்டு வருகின்றனர். ஏர்போர்ட்கள், துறைமுகங்களில் கண்காணிப்பு தீவிரப்படுத்தப்பட்டுள்ளது. மேலும் தடுப்பு நடவடிக்கை, முன்னெச்சரிக்கைகளை கையில் எடுத்துள்ளது.. சில நாடுகளுக்கு தற்காலிகமாக விசா நிறுத்தி வைத்துள்ளது.

advertisement by google

விலங்குகள்
இந்த சமயத்தில் பூனையை கூண்டில் அடைத்து திட்டமிட்டு கண்டெய்னரில் சீனா அனுப்பி வைத்திருப்பது விசாரணையில் தெரியவந்துள்ளதாக தகவல்கள் கூறுகின்றன. அதிகாரிகள் இதை பற்றி சொல்லும்போது, “கன்டெய்னரில் ஏறிவிடும் விலங்குகள் இப்படி வேறு நாடுகளுக்கு வந்துவிடுவது உண்டு… உணவு பொட்டலங்கள் வந்த கன்டெய்னருக்குள் பாம்புகளைக்கூட நாங்கள் பார்த்திருக்கிறோம்.. ஆனால் இப்போது பீட்டா அமைப்பினர் சொல்வதை பார்த்தால், பூனை தானாக கன்டெய்னரில் ஏறவில்லை… வேண்டுமென்றே யாரோ கூண்டுக்குள் அடைத்து கன்டெய்னரில் வைத்துள்ளனர்.. அதாவது திட்டமிட்டே அதை இந்தியாவுக்கு அனுப்பியுள்ளனர்.

பராமரிப்பு
துறைமுக விதிமுறைப்படி, வெளிநாடுகளில் இருந்து வரும் கன்டெய்னரில் உயிருடன் ஏதாவது விலங்குகள் இருந்தால், அதை விலங்குகள் பராமரிப்பு மையத்துக்கு உடனே அனுப்ப வேண்டும்… 3 நாட்கள் அங்கு வைத்திருந்து, சம்பந்தப்பட்ட யாரும் உரிமை கோராவிட்டால், அந்த விலங்கை திரும்பவும் அதே நாட்டுக்கு அனுப்பி விட வேண்டும்.. அதனால் அந்தபூனை இன்னும் சில நாட்களில் சீனாவுக்கே திருப்பி அனுப்பப்படும். அதற்கு தேவையான நடவடிக்கைகள் எடுத்து வருகிறோம்” என்றனர்.

சீன பூனை
இதனிடையே, கன்டெய்னரில் சீன பூனை இந்தியாவுக்கு வந்த தகவல், அந்த பூனையின் போட்டோக்கள் வெளியானது தொடர்பாக துறைமுக அதிகாரிகள் தீவிரமாக விசாரணை நடத்தினர். முதன்முதலில் துறைமுகத்தில் பணியாற்றும் தனியார் காவலாளி மூலம்தான் அந்த தகவல் வெளியானது தெரியவந்தது. அதனால் அவரை டிஸ்மிஸ் செய்துள்ளனராம்!
ஒரு பூனையை திட்டமிட்டே இந்தியாவுக்கு அனுப்பி வைத்த இந்த சம்பவம் பெருத்த அதிர்ச்சியை ஏற்படுத்தி வருகிறது.

advertisement by google

Related Articles

Back to top button