இந்தியாஉலக செய்திகள்

அமெரிக்க அதிபர் ட்ரம்பின் நெகிழ்ச்சி உரை? “மோடி என் நண்பன்” டிரம்ப் செம்ம ஹேப்பி?

advertisement by google

advertisement by google

5 மாதங்களுக்கு முன்னர் அமெரிக்காவில் டெக்சாஸில் நடந்த மிகப் பெரிய ஃபுட்பால் ஸ்டேடியத்திற்கு பிரதமர் நரேந்திர மோடியை அழைத்தோம்

advertisement by google

.
ஆனால் இன்று அகமதாபாத்தில் உள்ள உலகின் மிகப் பெரிய கிரிக்கெட் ஸ்டேடியத்திற்கு இந்தியா அமெரிக்காவை அழைத்துள்ளது என அமெரிக்கா அதிபர் டொனால்ட் டிரம்ப் தெரிவித்தார்.

advertisement by google

இந்தியாவுக்கு வருகை தந்துள்ள அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் சபர்மதி ஆசிரமத்திற்கு சென்றுவிட்டு அங்கிருந்து சர்தார் வல்லபாய் படேல் மைதானத்தில் அமைக்கப்பட்டுள்ள மோடேரா ஸ்டேடியத்திற்கு வருகை தந்தார்.

advertisement by google

இதுதான் கை ராட்டை.. இது காந்தியோட குரங்கு பொம்மை..”மோடி என் நண்பன்”.. டிரம்ப் செம ஹேப்பி!

advertisement by google

உலகின் மிகப் பெரிய கிரிக்கெட் ஸ்டேடியமான இங்கு 1 லட்சத்திற்கும் மேற்பட்டோர் அமரும் அளவுக்கு பெரியதாகும். இங்கு நமஸ்தே டிரம்ப் நிகழ்ச்சிக்கு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

advertisement by google

இந்த நிகழ்ச்சியில் பிரதமர் நரேந்திர மோடி பேசினார்.

advertisement by google

இதைத் தொடர்ந்து அமெரிக்க டொனால்ட் டிரம்ப் தனது உரையை நமஸ்தே என கூறி தொடங்கினார்

அவர் பேசுகையில்

இந்தியாவுக்காக இரவு பகலாக எனது நண்பர் பிரதமர் மோடி உழைத்து வருகிறார். சிறப்பான வரவேற்பு அளித்த எனது நண்பர் மோடிக்கு நன்றி கூறுகிறேன். இந்தியாவுக்கு எப்போதும் உண்மையுடனும் இந்தியாவின் உண்மையான நட்பு நாடாக அமெரிக்கா விளங்கும்.

இந்தியாவை அமெரிக்கா நேசிக்கிறது; இந்தியா மீது அமெரிக்கா மதிப்பு கொள்கிறது.

5மாதங்களுக்கு முன்னர் டெக்சாஸில் நடந்த மிகப் பெரிய ஃபுட்பால் ஸ்டேடியத்திற்கு பிரதமர் நரேந்திர மோடியை அழைத்தோம். ஆனால் இன்று அகமதாபாத்தில் உள்ள உலகின் மிகப் பெரிய கிரிக்கெட் ஸ்டேடியத்திற்கு இந்தியா அமெரிக்காவை அழைத்துள்ளது.

இந்த விருந்தோம்பல் எங்கள் நினைவில் நீங்கா இடம் பிடித்திருக்கும். டீ விற்பவராக தனது பணியை தொடங்கினார் பிரதமர் மோடி. இன்று அவரை அனைவரும் விரும்புகிறார்கள். பிரதமர் மோடி குஜராத்திற்கு மட்டும் பெருமிதம் அல்ல. கடின உழைப்பால் எதையும் சாதிக்க முடியும் என்பதற்கு சிறந்த உதாரணம் மோடி. மனித குலத்திற்கே நம்பிக்கையளிக்கிறது இந்தியா. இந்தியாவின் சிறந்த தலைவர் பிரதமர் மோடிக்கு எங்களது நன்றி.. என்றென்றும் இந்த பயணம் எங்கள் நினைவில் இருக்கும். பிரதமர் மோடியின் தலைமையில் இந்தியாவின் ஒவ்வொரு கிராமமும் மின்சார வசதியைப் பெற்றுள்ளது. மோடியின் தலைமையில் இந்தியா எந்த சாதனையையும் நிகழ்த்தும். ஜனநாயகத்தின் ஒரு அற்புதமாக இந்தியா திகழ்கிறது. இந்தியாவின் இந்த ஒற்றுமை உலகிற்கே ஊக்கமளிக்கிறது. 70 ஆண்டுகளில் இந்தியா பொருளாதார வல்லரசாக மாறியுள்ளது என கூறிய டிரம்ப் தனது உரையில் சுவாமி விவேகானந்தரை மேற்கோள்காட்டினார். டெண்டுல்கர், கோஹ்லி பெயரை குறிப்பிட்டும் டிரம்ப் உரையாற்றினார்.அமெரிக்காவின் வளர்ச்சிக்கு பங்களிக்கும் குஜராத்தியர்களுக்கு எனது நன்றி. அமெரிக்காவில் வேலையின்மை குறைந்துள்ளது. உலகம் முழுவதும் வாழும் நடுத்தர வர்க்க மக்களின் தாயகமாக இந்தியா உருவெடுக்கும்.

advertisement by google

Related Articles

Back to top button