இந்தியாமருத்துவம்

கொரோனா நோயை, லோக்சபா எம்பிகளுக்கு பார்டிகளின் மூலம் பரப்பியதாக பாலிவுட் பாடகி கனிகாகபூர் மீது அச்சம்?

advertisement by google

advertisement by google

advertisement by google

கொரோனா மூலம் பாதிக்கப்பட்டு இருக்கும் பாலிவுட் பாடகி கனிகா கபூர் பல்வேறு லோக்சபா எம்பிக்கள், பிரபலங்கள் உடன் நெருக்கமாக இருந்திருக்க வாய்ப்புள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளது.

advertisement by google

இவர் யாரை எல்லாம் தொடர்பு கொண்டார் என்ற விவரங்கள் வெளியாகி உள்ளது.

advertisement by google

பாலிவுட் பாடகி கனிகா கபூர் கொரோனா மூலம் பாதிக்கப்பட்டது இந்தியாவை உலுக்கி உள்ளது.

advertisement by google

இதற்கு பின் மிக முக்கியமான காரணம் உள்ளது. லண்டனில் இருந்து இந்தியா வந்த கனிகா கபூருக்கு கடந்த 16ம் தேதி கொரோனா உறுதி செய்யப்பட்டது.

advertisement by google

இதற்கு முன் கனிகா கபூர் கலந்து கொண்ட பல்வேறு பார்ட்டிகளில் மத்திய பாஜக தலைவர்கள், லோக்சபா எம்பிக்கள் பலர் கலந்து கொண்டு இருக்கிறார்கள்.

advertisement by google

இதனால் அவர்களுக்கும் கொரோனா ஏற்பட்டு இருக்கலாம் என்று அஞ்சப்படுகிறது.

கனிகா கபூர் கொரோனா சோதனையில் தப்பியது எப்படி?

கொரோனா சர்ச்சையை பின் வரும் வகையில் சுருக்கமாக விளக்கலாம்

மார்ச் 9 கனிகா கபூர் லண்டனில் இருந்து மும்பை வந்துள்ளார். அப்போதே இவருக்கு கொரோனா இருந்துள்ளது. மார்ச் 11ல் கனிகா கபூர் லக்னோ சென்றுள்ளார். மார்ச் 13,14,15 தேதிகளில் இவர் லக்னோவில் பார்ட்டிகளில் கலந்து கொண்டுள்ளார். இதில் 14ம் தேதியில் கலந்து கொண்ட பார்டியில்தான் பாஜக எம்பிக்கள் பலர் உடன் இருந்துள்ளனர்.

மார்ச் 16 கனிகா கபூருக்கு கொரோனா இருப்பது உறுதி செய்யப்பட்டது.யார் எல்லாம்கனிகா கபூர் கலந்து கொண்ட பார்டிகளில் மொத்தம் 300 பேர் கலந்து கொண்டுள்ளனர். இரண்டாது பாரிடியில் மட்டும் 35 பேர் இருந்துள்ளனர். இதில் பாஜக மூத்த தலைவரான வசுந்தரா ராஜே, அவரது மகனும் லோக்சபா எம்.பி.யுமான துஷ்யந்த், திரிணாமுல் காங்கிரஸ் எம்பி டெரிக் ஓ பிரைன், பாஜக எம்பி அனுபிரியா பட்டேல் ஆகியோர் குறிப்பிட தகுந்தவர்கள்.

இவர்கள் எல்லாம் தற்போது தனியாக வீட்டில் இருக்கிறார்கள். தங்கள் தனிமைப்படுத்தி உள்ளனர்.யாருக்கு பரவியதுஇந்த நிலையில் இந்த பார்ட்டியில் வேறு யாரெல்லாம் கலந்து கொண்டனர் என்ற விவரம் வெளியாகி உள்ளது .

அதன்படி இந்த பார்டியில் மத்திய பாஜக அமைச்சர்கள் ராஜ்வர்தன் ரத்தோர், பாஜக எம்பி மதுரா ஹேமா மாலினி, மத்திய அமைச்சர் அர்ஜுன் ராம், காங்கிரஸ் மூத்த உறுப்பினர் குமாரி செல்ஜா, குத்துசண்டை வீரர் எம்பி மேரி கோம் ஆகியோர் கலந்து கொண்டு உள்ளனர் .

வேறு யார்அதேபோல் ஆம் ஆத்மி கட்சியின் மூத்த உறுப்பினர் சஞ்சய் சிங், காங்கிரஸ் மூத்த தலைவர் திபேந்தர் ஹூடா , ஜிதின் பிரசதா ஆகியோர் இதில் கலந்து கொண்டுள்ளனர். இவர்கள் மூவரும் தற்போது தங்களை தனிமைப்படுத்திக் கொண்டு உள்ளனர். இன்னொரு பக்கம் லோக்சபா எம்.பி துஷ்யந்த் இரண்டு நாட்களுக்கு முன் குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்தை சந்தித்தார்.பாலிவுட் பிரபலம்இதனால் சந்தேகத்தின் பெயரில் குடியரசுத் தலைவருக்கு கொரோனா சோதனை செய்யப்பட்டுள்ளது. இதன் முடிவு வெளியாகவில்லை. இவரின் அனைத்து அப்பாய்ண்ட்மெண்டும் ரத்து செய்யப்பட்டுள்ளது. ராஷ்டிரியபதி பவனில் இதற்காக தீவிர சோதனை நடந்து வருகிறது. காண்டாக்ட் டிரெஸ் முறை மூலம் கனிகா யாரை எல்லாம் சந்தித்தார். அவர்கள் யாரை எல்லாம் சந்தித்தார்கள் என்ற விவரம் வெளியாகி உள்ளது.

யாரைஇவர் 14ம் தேதி நடந்த விழாவில் பாஜகவின் முன்னாள் முதல்வர் வசுந்தரா ராஜே, அவரது மகனும் லோக்சபா எம்.பி.யுமான துஷ்யந்த், பாஜக உத்தர பிரதேச அமைச்சர் ஜெய் பிரதாப் சிங், காங்கிரஸ் மூத்த தலைவர் ஜிதின் சிங் ஆகியோரை சந்தித்துள்ளார். துஷ்யந்த் சிங் கனிகாவை சந்தித்துவிட்டு, அதன்பின் குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்த், ஸ்மிரிதி இராணி, ராஜ்நாத் சிங் ஆகியோரை சந்தித்துள்ளார்.என்ன அதிகாரிகள்அதேபோல் துஷ்யந்த் சிங் ரயில்வேத்துறை, போக்குவரத்துறை துறை அதிகாரிங்கள் உடன் ஆலோசனை கூட்டம் நடத்தி உள்ளார். இதில் பல ஐஏஎஸ் அதிகாரிகள் கலந்து கொண்டுள்ளனர். அதேபோல் துஷ்யந்த் பாஜகவின் வருண் காந்தி, தீபக் ஹூடா ஆகியோரை 15ம் தேதிசந்தித்துள்ளார். கனிகா கபூரை சந்தித்த பாஜக உத்தர பிரதேச அமைச்சர் ஜெய் பிரதாப் சிங் அதன்பின் உத்தர பிரதேசத்தில் அமைச்சரவை மீட்டிங்கில் கலந்து கொண்டுள்ளார்.என்ன முறைஅதில் இவர் உத்தர பிரதேச முதல்வர் யோகி ஆதித்யநாத், அமைச்சர்கள் கேசவ் மவுரியா, தினேஷ் சர்மா ஆகியோரை சந்தித்து இருக்கிறார்.

14ம் தேதி நடந்த விழாவில் கிரிக்கெட் வீரர் ஒருவரும், பாலிவுட், கோலிவுட் பிரபலங்கள் சிலரும் கலந்து கொண்டதாக கூறப்படுகிறது. இதில் முழுக்க முழுக்க பிரபலங்கள் மட்டுமே கலந்து கொண்டனர். இதனால் பிரபலங்கள் மத்தியில் தற்போது கொரோனா அச்சம் எழுந்துள்ளது

advertisement by google

Related Articles

Back to top button