இந்தியாஉலக செய்திகள்

போலீஸ்3முறை அழைத்தும் மதிக்கவில்லை ,போன் சுவிட்ச் ஆப்? தலைமறைவானார் ஜேஎன் யூஏபிவிபி உறுப்பினர்?

advertisement by google

போன் சுவிட்ச் ஆப்.. போலீஸ் 3 முறை அழைத்தும் மதிக்கவில்லை.. தலைமறைவானார் ஜேஎன்யூ ஏபிவிபி உறுப்பினர்!

advertisement by google

டெல்லி: ஜேஎன்யூவில் கலவரம் செய்ததில் முக்கிய பங்கு வகித்ததாக கருதப்படும் ஏபிவிபி அமைப்பை சேர்ந்த மாணவர் அக்சத் அவாஸ்தி தற்போது தலைமறைவாகி உள்ளார். போலீஸ் இவரை தீவிரமாக தேடி வருகிறார்கள்.

advertisement by google

டெல்லி ஜேஎன்யூ பல்கலையில் நடந்த தாக்குதல் குறித்து நாளுக்கு நாள் புதிய தகவல்கள், உண்மைகள் வெளியாகி வருகிறது. அங்கு கடந்த வாரம் மர்ம நபர்கள் விடுதிக்குள் புகுந்து மாணவர்கள் மீது கொலைவெறி தாக்குதல் நடத்தினார்கள்.
ஆர்எஸ்எஸ் அமைப்பின் மாணவர் பிரிவான ஏபிவிபி இதை நடத்தியதற்கான ஆதாரங்கள் வெளியாகி வருகிறது. நிறைய வீடியோ, புகைப்பட ஆதாரங்கள் தற்போது வரை வெளியாகி உள்ளது அங்கு இடதுசாரி மாணவர்கள் தாக்கப்பட்டது தொடர்பாக இந்தியா டுடே ஸ்டிங் ஆபரேஷன் நடத்தி முக்கிய ஆதாரங்களை வெளியிட்டுள்ளது.
ஜேஎன்யு வன்முறையில் திருப்பம்.. டேட்டாவை கேட்டு வழக்கு.. வாட்ஸ்அப் கூகுளுக்கு ஹைகோர்ட் நோட்டீஸ்

advertisement by google

யார் இவர்கள்
அதன்படி ஜேஎன்யூவில் மாணவர்களை தாக்கியது ஆர்எஸ்எஸ் அமைப்பின் மாணவர் பிரிவான ஏபிவிபியை சேர்ந்தவர்கள்தான். இது தொடர்பான வீடியோ ஆதாரங்களை இந்தியா டுடே ஸ்டிங் ஆபரேஷன் மூலம் வெளியிட்டது. அதேபோல் அங்கு மாணவர்கள் மீது தாக்குதல் நடத்திய பெண் பெயர் கோமல் சர்மா. இவர் டெல்லி பல்கலையில் படிக்கிறார். இவரும் ஏபிவிபி அமைப்பை சேர்ந்தவர் என்பது குறிப்பிடத்தக்கது.

advertisement by google

யார் முக்கியம்
ஏபிவிபி அமைப்பை சேர்ந்த முதலாம் ஆண்டு ஜேஎன்யூ மாணவர் அக்சத் அவாஸ்தி இந்த தாக்குதலில் முக்கியமானவர். இந்த ஸ்டிங் ஆபரேஷனில் முதலில் சிக்கியது இவர்தான். அங்கு நடந்த அனைத்தையும் இவர்தான் செய்தியாளர்களிடம் உளறிக்கொட்டியது. இவர்தான் அந்த தாக்குதல் சம்பவம் குறித்து முழுவதுமாக வீடியோவில் விளக்கினார்.

advertisement by google

ஓட்டம்
தற்போது இவர் எங்கள் அமைப்பே கிடையாது. அக்சத் அவாஸ்தி, யார் என்றே தெரியாது என்று ஏபிவிபி தெரிவித்துள்ளது. இந்த வீடியோ வெளியானதன் காரணமாக அக்சத் அவாஸ்தியை விசாரிக்க டெல்லி போலீஸ் அழைப்பு விடுத்தது. ஆனால் அக்சத் அவாஸ்தி மூன்று முறை அழைத்தும் டெல்லி போலீசை சந்திக்கவில்லை.

advertisement by google

போன் சுவிட்ச் ஆப்
தற்போது அக்சத் அவருடைய வீட்டிலும் இல்லை. அவருடைய நண்பர்கள் வீட்டிலும் இல்லை. அவர் தற்போது எங்கே சென்று இருக்கிறார் என்று போலீசுக்கும் தெரியவில்லை. அவரை விசாரிக்க போலீஸ் சம்மன் அனுப்பி இருந்தது. ஆனால் அக்சாத் அவாஸ்தி போலீஸ் ஸ்டேஷனுக்கு செல்லவில்லை. அவரும் போனும் சுவிட்ச் ஆபில் உள்ளது.

advertisement by google

தப்பி ஓட்டம்
இதன் மூலம் அக்சத் தலைமறைவாகி உள்ளார் என்று போலீசார் தரப்பு தெரிவிக்கிறது. அதே சமயம் அவர் எங்கே இருக்கிறார் என்று போலீசுக்கு தெரியும். ஆனால் அழுத்தம் காரணமாக போலீசார் அவரை கைது செய்யவில்லை என்று இடதுசாரி மாணவர் அமைப்புகள் தெரிவித்துள்ளது.

advertisement by google

Related Articles

Back to top button