தொழில்நுட்பம்

ரியல்மியின் நார்சோ10 ஸ்மார்ட் போன்கள் விற்பனை துவங்கிய சில நொடிகளில் 70 ஆயிரம் யூனிட்கள் விற்பனை கடந்தது சாதனை?முழுவிவரம் – விண்மீன் நியூஸ்

advertisement by google

ரியல்மியின் நார்சோ 10 ஸ்மார்ட்போன்கள் விற்பனை துவங்கிய சில நொடிகளில் 70 ஆயிரம் யூனிட்கள் விற்பனையை கடந்துள்ளது.

advertisement by google

நொடிகளில் 70 ஆயிரம் யூனிட்கள்

advertisement by google

இந்தியாவில் விற்பனைக்கு வந்த நார்சோ 10 ஸ்மார்ட்போன்கள் விற்பனை துவங்கிய 128 நொடிகளில் 70 ஆயிரம் யூனிட்கள் விற்பனையை கடந்துள்ளது. இதனை ரியல்மி இந்தியா தலைமை செயல் அதிகாரி மாதவ் சேத் தனது அதிகாரப்பூர்வ ட்விட்டர் அக்கவுண்ட்டில் தெரிவித்து இருக்கிறார்.

advertisement by google

சமீபத்தில் அறிமுகமான நார்சோ 10 ஸ்மார்ட்போனின் முதல் விற்பனை மே 18 ஆம் தேதி நடைபெற்றது. நார்சோ 10 ஸ்மார்ட்போன் ரியல்மி 6ஐ மாடலின் ரீபிராண்டு செய்யப்பட்ட மாடல் ஆகும். சிறப்பம்சங்களை பொருத்தவரை நார்சோ 10 மாடலில் 6.5 இன்ச் டிஸ்ப்ளே, மீடியாடெக் ஹீலியோ ஜி80 பிராசஸர், 5000 எம்ஏஹெச் பேட்டரி உள்ளிட்டவை வழங்கப்பட்டுள்ளது.

advertisement by google

ட்விட்டர் ஸ்கிரீன்ஷாட்

advertisement by google

இந்திய சந்தையில் நார்சோ 10 ஸ்மார்ட்போனின் 4 ஜிபி ரேம், 128 ஜிபி மெமரி மாடல் விலை ரூ. 11,999 என நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. இதன் விற்பனை ரியல்மி அதிகாரப்பூர்வ வலைதளம் மற்றும் ப்ளிப்கார்ட் தளத்தில் நடைபெறுகிறது. நார்சோ 10 மாடலின் அடுத்த விற்பனை தேதி விரைவில் அறிவிக்கப்பட இருக்கிறது.

advertisement by google

ரியல்மி நார்சோ 10 சிறப்பம்சங்கள்

advertisement by google
  • 6.5 இன்ச் 1600×720 பிக்சல் HD+ 20:9 மினி டிராப் டிஸ்ப்ளே
  • கார்னிங் கொரில்லா கிளாஸ் 3+ பாதுகாப்பு
  • ஆக்டாகோர் மீடியாடெக் ஹீலியோ ஜி80 பிராசஸர்
  • ARM மாலி-G52 2EEMC2 GPU
  • 4 ஜிபி LPDDR4x ரேம்
  • 128 ஜிபி eMMC 5.1 மெமரி
  • மெமரியை கூடுதலாக நீட்டிக்கும் வசதி
  • டூயல் சிம் ஸ்லாட்
  • ரியல்மி யுஐ சார்ந்த ஆண்ட்ராய்டு 10
  • 48 எம்பி பிரைமரி கேமரா, f/1.8, எல்இடி ஃபிளாஷ், PDAF
  • 8 எம்பி 119° அல்ட்ரா வைடு சென்சார்
  • 2 எம்பி 4செமீ மேக்ரோ லென்ஸ்
  • 2 எம்பி B&W டெப்த் சென்சார், f/2.4
  • 16 எம்பி செல்ஃபி கேமரா, f/2.0, 1μm பிக்சல்
  • கைரேகை சென்சார்
  • 3.5 எம்எம் ஆடியோ ஜாக், எஃப்எம் ரேடியோ
  • டூயல் 4ஜி வோல்ட்இ, வைபை, ப்ளூடூத் 5
  • யுஎஸ்பி டைப்-சி
  • 5000 எம்ஏஹெச் பேட்டரி
  • 18 வாட் சார்ஜிங்

ரியல்மி

advertisement by google

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button