இந்தியாதமிழகம்தமிழ்நாடு மாவட்டம்வரலாறு

தமிழக உள்ளாட்சி தேர்தலில் திமுக அமோக வெற்றி?மு.க.ஸ்டாலின் அறிக்கை?

advertisement by google

♦தமிழக உள்ளாட்சி தேர்தலில் திமுக கூட்டணி அமோக வெற்றி- மு.க.ஸ்டாலின் அறிக்கை

advertisement by google

?தமிழகத்தில் 27 மாவட்டங்களில் கடந்த 27,30-ந்தேதிகளில் 2 கட்டமாக உள்ளாட்சி தேர்தல் நடைபெற்றது.

advertisement by google

?சுமார் 77 சதவீதம் வாக்குகள் பதிவான நிலையில் நேற்று காலை ஓட்டு எண்ணிக்கை தொடங்கியது. வாக்கு எண்ணிக்கை இரண்டாவது நாளாக இன்றும் நீடிக்கிறது. இதில் திமுக அதிக இடங்களில் வெற்றி பெற்றுள்ளது.

advertisement by google

?பிற்பகல் நிலவரப்படி அ.தி.மு.க.வை பின்னுக்கு தள்ளி தி.மு.க. சார்பில் மாவட்ட கவுன்சிலர் பதவிக்கு போட்டியிட்டு 270 பேரும், ஒன்றிய கவுன்சிலர் பதவிக்கு போட்டியிட்டு 2,339 பேரும் வெற்றி பெற்றுள்ளனர்.

advertisement by google

?இந்நிலையில் உள்ளாட்சி தேர்தலில் பெற்ற வெற்றி தொடர்பாக தி.மு.க. தலைவர் மு.க.ஸ்டாலின் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:-

advertisement by google

?அ.தி.மு.க.வின் அதிகார துஷ்பிரயோகம், தேர்தல் ஆணையத்தின் ஒரு தலைபட்ச அணுகுமுறையை மீறி ஊரக உள்ளாட்சி தேர்தலில் தி.மு.க. கூட்டணி அமோக வெற்றி பெற்றுள்ளது.

advertisement by google

?எத்தகைய அராஜகத்தையும், அடாவடிகளையும் மீறி வெற்றி பெறும் வல்லமை மக்கள் சக்திக்கு உண்டு. ஆளுங்கட்சி மீது மக்கள் கொண்டுள்ள வெறுப்பு இதன் மூலம் வெளிச்சத்துக்கு வந்துள்ளது.

advertisement by google

?அமைச்சர்கள் மாவட்டங்களில் முகாமிட்டும், பணத்தை வாரியிறைத்தும் அ.தி.மு.க. பின்னடைவை சந்தித்துள்ளது நகர்ப்புற ஊராட்சி அமைப்புகளுக்கும் தேர்தல் நடத்தி இருந்தால் தி.மு.க. இன்னும் பெரிய வெற்றி பெற்றிருக்கும்.

?தமிழக வாக்காளர்கள் அனைவருக்கும் நன்றியைத் தெரிவித்துக் கொள்கிறேன்.இவ்வாறு அவர் கூறியுள்ளார். 

advertisement by google

Related Articles

Back to top button