இந்தியாதமிழகம்தமிழ்நாடு மாவட்டம்

தமிழகத்தில் 4விதமான பதவிகள் பலலட்சம் பேர்?உள்ளாட்சி தேர்தலில் தெரிந்து கொள்ள வேண்டிய முக்கிய விஷயங்கள்?

advertisement by google

advertisement by google

தமிழகம்
4 விதமான பதவிகள்.. பல லட்சம் பேர்.. உள்ளாட்சி தேர்தலில் தெரிந்து கொள்ள வேண்டிய முக்கிய விஷயங்கள்!

advertisement by google

சென்னை: ஊரக உள்ளாட்சி தேர்தலில் மொத்தம் 91,975 பதவி இடங்களை நிரப்புவதற்காக தேர்தல் நடந்தது. இதற்கான வாக்கு எண்ணிக்கை இன்று நடைபெறுகிறது. மொத்தம் நான்கு விதமான பதவிகளுக்கு தேர்தல் நடந்தது குறிப்பிடத்தக்கது.

advertisement by google

தமிழகத்தில் பெரும் பரபரப்பிற்கும் இடைஞ்சலுக்கும் இடையில் உள்ளாட்சி தேர்தல் நடந்துள்ளது. ஆனால் அதிலும் கூட உள்ளாட்சி தேர்தல் முழுக்க நடைபெறவில்லை. ஊரக பகுதிகளுக்கு மட்டுமே தேர்தல் நடந்தது. மாநகராட்சி மற்றும் நகராட்சி பகுதிகளில் இனிதான் தேர்தல் நடத்த வேண்டும்.

advertisement by google

இந்த உள்ளாட்சி தேர்தல் குறித்து, அதில் முக்கியமாக தெரிந்து கொள்ள வேண்டிய விஷயங்கள் குறித்தும் இதில் பார்க்கலாம்.
மொத்தமாக உள்ளாட்சி தேர்தல் 27ம் தேதி மற்றும் 30ம் தேதி என்று டிசம்பர் மாதம் இரண்டு கட்டமாக நடந்தது.
27 மாவட்டங்களில் ஊரக உள்ளாட்சி அமைப்புகளுக்கு தேர்தல் நடந்தது.
தமிழகத்தில் புதிதாக உருவாக்கப்பட்ட 9 மாவட்டங்களுக்கு தேர்தல் நடக்கவில்லை.
முதற்கட்ட தேர்தலில் 76.19 % வாக்குகள் பதிவானது.
இரண்டாம் கட்ட தேர்தலில் 77.73% வாக்குகள் பதிவு.
முதல் கட்டமாக 156 ஊராட்சி ஒன்றியங்களுக்கு தேர்தல் நடந்தது.
இரண்டாம் கட்டமாக 158 ஊராட்சி ஒன்றியங்களுக்கு தேர்தல் நடந்தது.

advertisement by google

மொத்தம் 27 மாவட்டங்களில் உள்ள 515 மாவட்ட கவுன்சிலர் பதவிகளுக்கு தேர்தல் நடந்தது. நகராட்சி மற்றும் மாநகராட்சி பதவிகளுக்கு தேர்தல் நடக்கவில்லை.
இதில் ஊராட்சி தலைவர் தேர்தல் கட்சியை சார்பற்று தேர்தல் நடந்தது.அதேபோல் 5,090 ஒன்றிய கவுன்சிலர் மற்றும் 9,624 ஊராட்சி தலைவர் பதவிகளுக்கு தேர்தல் நடந்தது.

advertisement by google

மொத்தமாக 4 பதவிகளுக்கு தேர்தல் நடந்தது. இதனால் மக்கள் 4 வாக்குகளை தேர்தலின் போது பதவி செய்தார்கள்.
156 ஊராட்சி ஒன்றியங்களுக்கு உட்பட்ட 260 மாவட்ட ஊராட்சி வார்டு உறுப்பினர்கள், 2 ஆயிரத்து 546 ஊராட்சி ஒன்றிய வார்டு உறுப்பினர்கள் பதவிக்கு தேர்தல் நடந்தது.
அதேபோல் 37 ஆயிரத்து 830 கிராம ஊராட்சி வார்டு உறுப்பினர்கள், 4 ஆயிரத்து 700 கிராம ஊராட்சி தலைவர்கள் பதவிக்கும் தனியாக தேர்தல் நடந்தது.
இரணடாம் கட்ட தேர்தலில் 255 மாவட்ட ஊராட்சி வார்டு உறுப்பினர்கள், 2 ஆயிரத்து 544 ஊராட்சி ஒன்றிய வார்டு உறுப்பினர்கள், 38 ஆயிரத்து 916 கிராம ஊராட்சி வார்டு உறுப்பினர்கள் பதவிக்கு தேர்தல் நடந்தது.
4 ஆயிரத்து 924 கிராம ஊராட்சி தலைவர்கள் என மொத்தம் 46 ஆயிரத்து 639 பபதவிகளுக்கு தேர்தல் நடந்தது.
மொததமாக் ஊரக உள்ளாட்சி அமைப்புகளில் 91,975 பதவி இடங்களை நிரப்புவதற்காக தேர்தல் நடந்தது.
மொத்தம் இந்த தேர்தலில் 2 லட்சத்து 31 ஆயிரம் வேட்பாளர்கள் போட்டியிட்டனர்.
இந்த வாக்கு எண்ணிக்கைக்காக தமிழகம் முழுவதும் 315 வாக்கு எண்ணிக்கை மையங்கள் அமைக்கப்பட்டுள்ளன.

advertisement by google
advertisement by google

Related Articles

Back to top button