தமிழகம்தமிழ்நாடு மாவட்டம்

கோவில்பட்டி உள்ளாட்சி தேர்தலில் போட்டியிடும்அதிமுக வேட்பாளர்கள் அமைச்சர் கடம்பூர் ராஜுவிடம் வாழ்த்து பெற்றனர்?

advertisement by google

அதிமுக மக்களை நம்புகிறது ,திமுக மக்களை நம்ப வில்லை அமைச்சர் கடம்பூர் செ. ராஜீ

advertisement by google

தமிழகத்தில் ஊரக உள்ளாட்சி தேர்தலுக்கான வேட்புமனு தாக்கல் செய்ய இன்றே கடைசி அதிமுக திமுக உள்ளிட்ட முக்கிய கட்சியினர் இன்று வேட்பு மனுக்களை தாக்கல் செய்தனர். தூத்துக்குடி மாவட்டம் கோவில்பட்டி, கயத்தார், விளாத்திகுளம், புதூர் ஊராட்சி ஒன்றிய அலுவலகங்களில் அதிமுக மற்றும் கூட்டணி கட்சியினர் இன்று தங்களது வேட்புமனுக்களை தாக்கல் செய்யதனர். இதற்கு முன்பாக அதிமுக வடக்கு மாவட்ட செயலாளரும் தமிழக செய்தி மற்றும் விளம்பரத்துறை அமைச்சருமான கடம்பூர் செ ராஜுவிடம், அதிமுக வேட்பாளர்கள் வாழ்த்து பெற்றனர். வேட்பாளர்களை வாழ்த்திய பின்பு, அமைச்சர் கடம்பூர் செ. ராஜு செய்தியாளர்களிடம் பேசுகையில் எங்களை பொறுத்தவரை வாக்களிக்கும் மக்கள் தான் எஜமானர்கள்,கார்பரேட் நிறுவனங்கள் தேர்தலை நிர்ணயம் செய்வதில் எங்களுக்கு நம்பிக்கை இல்லை,திமுக கார்பரேட்டை நோக்கி செல்வதாக கூறி பழம்பெரும் அரசியல்வாதி, முன்னாள் எம்.எல்.ஏ.பழ.கருப்பையா அக்கட்சியில் இருந்து விலகி உள்ளார்.நாங்கள் மக்களை நம்புகிறோம், ஆனால் திமுக மக்கள் மன்றத்தினை நம்பமால், நீதிமன்றம் சென்று உள்ளாட்சி தேர்தலை நிறுத்த கடைசிவரை போராடினார்கள், நீதிமன்ற உத்தரவின்படி மாநில தேர்தல் ஆணையம் வார்டு மறுவரையறை செய்த போதிலும், திமுக தேர்தலை நிறுத்த போராடியது என்றால் மக்களை சந்திக்க அவர்களுக்கு பயம்,திமுகவிற்கு மக்கள் மீது நம்பிக்கை இல்லை,எல்லா தடைகளை தாண்டி உள்ளாட்சி தேர்தல் நிறைவு கட்டத்தினை எட்டியுள்ளது, கூட்டுறவு சங்க தேர்தலில் அதிமுக எப்படி அதிக இடங்களில் வெற்றி பெற்றது போன்று உள்ளாட்சி தேர்தலில் 90 சதவீத்திற்கு மேல் இடங்களை அதிமுக கூட்டணி கைப்பற்றும் என்றும், குடியுரிமை சட்டத்தினை அதிமுக ஆதரித்தாலும், ஈழதமிழர்களுக்கு இரட்டை குடியுரிமை வழங்க வேண்டும் என்ற கருத்தினை தெரிவித்துள்ளோம், எந்த சட்டமும் இயற்றப்படும் போது சில மாறுபட்ட கருத்துக்கள் வரும், பின்னர் அச்சட்டத்தில் சில ஷரத்க்கள் சேர்க்கப்படுவது இயற்கை,குடியுரிமை சட்டத்தினால் ஈழத்தமிழர்களுக்கு பாதிப்பு வரும் என்ற நிலை வந்தாலும் கூட அவர்களுக்கு இரட்டை குடியுரிமை வழங்க வேண்டும் என்ற கருத்தினை முன் வைத்துள்ளோம்,வரும் 19 ந்தேதி பிரதமரை, தமிழக முதல்வர் சந்திக்கும் போது ஈழத்தமிழர்களுக்கு இரட்டை குடியுரிமை வழங்குவது குறித்து வலியுறுத்த வாய்ப்பு உள்ளது.ஜி.எஸ்.டி வரி சட்டத்தில் அறிவிக்கப்பட்ட பின்பும் பல மாற்றங்கள் செய்யப்பட்டுள்ளது.அது போன்று குடியுரிமை சட்டத்தில் மாற்றம் வரும் போது, ஈழத்தமிழர்களுக்கு இரட்டை குடியுரிமை குறித்து தமிழக அரசு வலியுறுத்தும் என்றும்,தீப்பெட்டி தொழிலுக்கு விதிக்கப்பட்டுள்ள 18சதவீத ஜி.எஸ்.டி வரியை 12சதவீதமாக குறைக்க வேண்டும் என்று மத்திய அமைச்சர் நிர்மலா சீத்தராமனிடம் கோரிக்கை வைக்கப்பட்டுள்ளது. அவரும் பரீசிலனை செய்வதாக தெரிவித்துள்ளதாக கூறினார்

advertisement by google

advertisement by google

advertisement by google

advertisement by google

advertisement by google

advertisement by google
advertisement by google

Related Articles

Back to top button