இந்தியாதமிழகம்தமிழ்நாடு மாவட்டம்

தமிழகம் முழுவதும் களமிறங்கும் திமுக சென்னையில் இன்று மு.க.ஸ்டாலின் மாபெரும் போராட்டம்?குடியுரிமை சட்டதிருத்ததிற்காக?

advertisement by google

குடியுரிமை சட்ட திருத்தம்.. சென்னையில் இன்று ஸ்டாலின் போராட்டம்.. தமிழகம் முழுக்க களமிறங்கும் திமுக.

advertisement by google

சென்னை: குடியுரிமை சட்ட திருத்தத்திற்கு எதிராக திமுக சார்பில் இன்று போராட்டம் நடத்தப்படும் என்று திமுக தலைவர் ஸ்டாலின் தெரிவித்துள்ளார். இதற்கான ஏற்பாடுகள் தீவிரமாக தயாராகி வருகிறது.

advertisement by google

குடியுரிமை சட்ட திருத்தத்திற்கு எதிராக நாடு முழுக்க போராட்டம் தீவிரம் அடைந்து வருகிறது. நேற்று முதல் நாளில் இருந்து போராட்டம் தீவிரம் அடைந்துள்ளது. இந்த விஷயத்தில் அமைதியாக இருந்த காங்கிரஸ் கட்சியும் தற்போது தீவிரமாக போராட்டம் செய்ய தொடங்கி விட்டது.
மிக முக்கியமாக வடகிழக்கு மாநிலங்கள், அசாம், மேற்கு வங்கம் ஆகிய பகுதிகளில் தீவிரமாக போராட்டம் நடந்து வருகிறது. இதற்கு எதிராக டெல்லியில் ஜாமியா மிலியா பல்கலைக் கழக மாணவர்கள் கடந்த ஒரு வாரமாக போராட்டம் நடத்தி வருகிறார்கள்.

advertisement by google

இந்த சட்டம் வந்தால் இஸ்லாமியர்கள் நாட்டை விட்டு வெளியேற்றப்படுவார்கள், அவர்களின் குடியுரிமை மறுக்கப்படும் என்று அவர்கள் அச்சத்தில் இருக்கிறார்கள். நாடு முழுக்க பல்வேறு பல்கலைக்கழக மாணவர்கள் இதற்கு எதிராக போராடி வருகிறார்.

advertisement by google

இந்த நிலையில் குடியுரிமை சட்ட திருத்தத்திற்கு எதிராக திமுக சார்பில் இன்று போராட்டம் நடத்தப்பட உள்ளது. சென்னையில் நடக்கும் போராட்டத்தில் குடியுரிமை சட்டத்தின் பின்னணியை திமுக வெளிப்படுத்த இருக்கிறது. ஏற்கனவே சென்னையில் உதயநிதி ஸ்டாலின் தலைமையில் திமுக இளைஞரணி உறுப்பினர்கள் போராட்டம் நடத்தினார்கள்.
குடியுரிமை சட்ட நகலை எரித்து திமுகவினர் போராட்டம் நடத்தினார்கள். இந்த நிலையில் தற்போது ஸ்டாலின் தலைமையில் பெரிய போராட்டம் நடக்க உள்ளது. மாநிலம் முழுக்க இருக்கும் செயலாளர்கள், மாவட்ட செயலாளர்கள் ஆகியோருக்கு போராட்டம் செய்வதற்கான உத்தரவு சென்று இருக்கிறது.
இதற்கான ஏற்பாடுகள் தீவிரமாக தயாராகி வருகிறது. இதனால் சென்னையில் பாதுகாப்பு கருதி அதிக அளவில் போலீசார் குவிக்கப்பட்டு இருக்கிறார்கள்.

advertisement by google

advertisement by google

advertisement by google
advertisement by google

Related Articles

Back to top button