t

இன்றைய சிந்தனை????

advertisement by google

??❤??❤??❤??❤இன்றைய சிந்தனை.. ( 08.09.2019)..
……………………………………………

advertisement by google

” நம்பிக்கை தான்”..
…………………………………….

advertisement by google

ஒவ்வொரு மனிதனும் தன்னால் இந்த செயலை செய்து முடிக்க முடியுமென்று முதலில் நம்ப வேண்டும்.

advertisement by google

அதைச் செயல்படுத்த திட்டமிடுவதும்,அதை நிறைவேற்ற முயற்சி செய்யும் போது தடைகளைக் கண்டு தளர்ந்து விடாமல், விடாமுயற்சியுடன் அந்த செயலைச் சாதிக்கும் திசை நோக்கி முன்னேறுவதும் தான் தன்னம்பிக்கை.

advertisement by google

தன் மீது உள்ள நம்பிக்கை தான் வாழ்க்கையின் முன்னேற்றத்துக்கு வழி காட்டும் ஒளிவிளக்கு.

advertisement by google

சீனாவை சேர்ந்த யீயீ சிறுவனாக இருந்த போதே கால்பந்து விளையாட்டின் மீது ஆர்வமும் திறமையும் கொண்டிருந்தார்.

advertisement by google

2008-ம் ஆண்டு, அவருடைய விளையாட்டைக் கண்டு ஆச்சரியமடைந்த பிரெஞ்சு நாட்டுக் கால்பந்து வீரர் ஒருவர், அவரது திறமையை மெருகூட்ட நினைத்தார்.

advertisement by google

அதற்கான பயிற்சிகளை மேற்கொள்ள பிரான்ஸுக்குச் செல்லத் தயாராக இருந்த நேரம், இடியாக இறங்கியது அந்த வலி!

யீயீக்கு தன் 12 வயதிலிருந்தே காலில் ‘ஆஸ்டியோசார் கோமா’ எனும் நோய் இருந்து வந்தது. அதாவது, கால் எலும்பில் ஏற்படும் வலி. பரிசோதித்துப் பார்த்ததில், அது எலும்புப் புற்றுநோய் என்று தெரிய வந்தது.

பிரான்ஸுக்குச் சென்று பயிற்சி பெற்று, கால்பந்தாட்ட வரலாற்றில் தடம் பதிக்கக் காத்திருந்த யீயீ, தனது இடது காலை இழக்க வேண்டிய நிலை ஏற்பட்டது.

‘கால் தானே போயிற்று. கால்கள் இல்லையே!’ என்று தன்னம்பிக்கையுடன் எழுந்து வந்தார் யீயீ.

கைகள் இரண்டிலும் ஊன்றுகோலின் உதவியுடன், மீண்டும் கால்பந்தாட்டப் பயிற்சிகளில் ஈடுபட்டார்.

அமெச்சூர்’ கால்பந்தாட்டப் போட்டிகளில் அவர் பங்கேற்றார். அந்தப் போட்டிகளில், இவர் மட்டும் தான் மாற்றுத் திறனாளி!

ஆரம்பத்தில், அவர் சந்தித்த அவமானங்கள் ஏராளம். ஆனால், மனம் தளராமல் பந்தைத் துரத்திக் கொண்டே இருக்கிறார் யீயீ.

“தப்பித் தவறி என்னுடைய ஊன்றுகோல்கள் இதர விளையாட்டு வீரர்களைக் காயப்படுத்தி விடக்கூடாது என்பதற்காகவே, நான் மலிவு விலை ஊன்று கோல்களைப் பயன்படுத்துகிறேன்.

அவருடைய ரசிகர்கள் ‘சிறகொடிந்த தேவதை’, ‘மேஜிக் பாய்’ என்றெல்லாம் புகழ்கிறார்கள்
.
ஆம்.,நண்பர்களே..

உள்ளத்தில் நம்பிக்கையும், அச்சமற்ற தன்மையும் இல்லாதவரை எதையும் அடையவோ, சாதிக்கவோ முடியாது.

உங்களைப் பற்றி நீங்கள் எப்படி எண்ணுகிறீர்களோ அப்படித் தான் ஆவீர்கள். நீங்களே உங்களை நீங்களே தாழ்த்திக் கொள்ளாதீர்கள்.

உங்களுடைய எண்ணங்கள் செயலற்றுப் போனால், அச்சம் சோர்வு போன்றவை உடலை கூனாக்கி உள்ளத்தை மண்ணாக்கி விடும்….????

advertisement by google

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button