தமிழகம்தமிழ்நாடு மாவட்டம்விவசாயம்

கோவில்பட்டியில் தமிழ் விவசாய சங்கத்தினர் பயிர்காப்பீட்டு தொகை முறையாக வழங்க கோரி ஆர்ப்பாட்டம்?

advertisement by google

பயிர்காப்பீட்டு தொகை முறையாக வழங்க வலியுறுத்தி தமிழ் விவசாயிகள் சங்கம் சார்பில் ஆர்ப்பாட்டம்

advertisement by google

தனியார் நிறுவங்களில் விற்பனையாகும் போலியான உரங்கள், பூச்சி மருந்துகளை கண்டுபிடித்து நடவடிக்கை எடுக்க வலியுறுத்தி கோவில்பட்டியில் தமிழ் விவசாயிகள் சங்கம் சார்பில் ஆர்ப்பாட்டம் நடந்தது.

advertisement by google

2017-18-ம் ஆண்டில் விடுபட்ட விவசாயிகளுக்கு நிலுவையில் உள்ள பயிர் காப்பீட்டை காலதாமதம் இல்லாமல் உடனே வழங்க வேண்டும். 2018-19க்கான பயிர் காப்பீட்டை மாவட்டத்தில் உள்ள அனைத்து விவசாயிகளுக்கும் ஒரே மாதிரியான தொகையை பாகுபாடின்றி முறையாக காலதாமதமின்றி வழங்க வேண்டும். பயிர் விதைப்பு செய்தவுடன் காப்பீடு செய்ய தமிழக அரசு அறிவிக்க வேண்டும்.

advertisement by google

உரம், பூச்சி மருந்துகள் அனைத்தும் வேளாண்மை துறை மூலமாக மானிய விலையில் வழங்க வேண்டும். தனியார் நிறுவங்களில் விற்பனையாகும் போலியான உரங்கள், பூச்சி மருந்துகளை கண்டுபிடித்து நடவடிக்கை எடுக்க வேண்டும். தமிழக அரசு விவசாயிகளுக்கு விதைப்பு காலத்தில் வட்டியில்லா கடனாக ரூ.2 லட்சம் வழங்க வேண்டும் என்பன உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி கோவில்பட்டி பயணியர் விடுதி முன்பு தமிழ் விவசாயிகள் சங்கம் சார்பில் ஆர்ப்பாட்டம் நடந்தது.

advertisement by google

தமிழ் விவசாயிகள் சங்க மாநில தலைவர் ஓ.ஏ.நாராயணசுவாமி தலைமை வகித்தார். மாநில துணைத்தலைவர் ஏ.நம்பிராஜன், மாவட்டத் தலைவர்கள் டி.எஸ்.நடராஜன், வெள்ளத்துரை, அவைத்தலைவர் ஜி.வெங்கடசாமி உள்ளிட்ட ஏராளமானோர் கலந்துகொண்டு கோரிக்கைகளை வலியுறுத்தி கோஷங்கள் முழங்கினர்.

advertisement by google

advertisement by google

advertisement by google
advertisement by google

Related Articles

Back to top button