இந்தியாதமிழகம்தமிழ்நாடு மாவட்டம்

உள்ளாட்சி தேர்தலை 2வது கட்டமாக நடத்த மாநில தேர்தல் ஆணையம் திட்டம்?

advertisement by google

உள்ளாட்சி தேர்தலை 2 கட்டமாக நடத்த மாநில தேர்தல் ஆணையம் திட்டம்?

advertisement by google

உள்ளாட்சி தேர்தலை 2 கட்டமாக நடத்துவது குறித்து மாநில தேர்தல் ஆணையம் பரிசீலித்து வருவதாக தகவல் வெளியாகியுள்ளது.

advertisement by google

உள்ளாட்சி தேர்தல் தேதியை டிசம்பர் 2-ந் தேதி தெரிவிப்பதாக அண்மையில் மாநில தேர்தல் ஆணையம் உச்சநீதிமன்றத்தில் கூறியிருந்தது. உள்ளாட்சி தேர்தலை நடத்துவதற்கான பணியில் மாநில தேர்தல் ஆணையம் தீவிரமாக ஈடுபட்டுள்ளது.

advertisement by google

இதனிடையே, மாநகராட்சி மேயர், நகராட்சி தலைவர், மாவட்ட பஞ்சாயத்து தலைவர், பேரூராட்சி தலைவர், ஊராட்சி ஒன்றியக்குழு தலைவர் பதவிகளுக்கு மறைமுக தேர்தல் நடைபெறும் என்று தமிழக அரசு அறிவித்துள்ளது.

advertisement by google

எனவே, கிராமப்புறம் மற்றும் நகர்ப்புறங்களுக்கு தனித்தனியாக உள்ளாட்சி தேர்தலை நடத்தலாமா? என்று மாநில தேர்தல் ஆணையம் ஆலோசித்து வருவதாக சொல்லப்படுகிறது. 2 கட்ட தேர்தல் தொடர்பாக அதிகாரிகளுடன் மாநில தேர்தல் ஆணையர் பழனிசாமி ஆலோசனை நடத்தி வருவதாகவும், டிசம்பர் மாத இறுதியில் பஞ்சாயத்துகளுக்கான தேர்தலையும், ஜனவரி மாத தொடக்கத்தில் மாநகராட்சி மற்றும் நகராட்சிகளுக்கான தேர்தலையும் நடத்த பரிசீலனை செய்யப்பட்டு வருவதாக கூறப்படுகிறது.

advertisement by google

advertisement by google

advertisement by google
advertisement by google

Related Articles

Back to top button