இந்தியாஉலக செய்திகள்தமிழகம்தமிழ்நாடு மாவட்டம்

தோல்வி எதிரொலி இலங்கை பிரதமர் ரணில்விக்ரமசிங்கே ராஜினாமா பரபரப்பு திருப்பம்?

advertisement by google

தோல்வி எதிரொலி.. இலங்கை பிரதமர் ரணில் விக்கிரமசிங்கே ராஜினாமா.. பரபரப்பு திருப்பம்!

advertisement by google

கொழும்பு: இலங்கை பிரதமர் ரணில் விக்கிரமசிங்கே தனது பதவியில் இருந்து ராஜினாமா செய்துள்ளார். தேர்தல் தோல்வியை தொடர்ந்து அவர் அதிபர் கோத்தபய ராஜபக்சேவிடம் ராஜினாமா கடிதத்தை அளித்தார்.

advertisement by google

இலங்கை அதிபர் தேர்தலில் கோத்தபய ராஜபக்சே அபார வெற்றி பெற்றுள்ளார். கடந்த திங்கள் கிழமை இவர் அதிபராக பதவியேற்றார். இதனால் ராஜபக்சே குடும்பம் மீண்டும் அதிகார வட்டத்திற்குள் வந்துள்ளது.
கோத்தபய ராஜபக்சே ஶ்ரீலங்கா பொதுஜன பெரமுன கட்சியை சேர்ந்தவர். ஶ்ரீலங்கா பொதுஜன பெரமுன கட்சி ராஜபக்சேவின் குடும்பம் கட்சியாக பார்க்கப்படுகிறது என்பது குறிப்பிடத்தக்கது.
இந்தியாவிற்கு வாங்க.. அழைப்பு விடுத்த மோடி.. ஓகே சொன்ன கோத்தபய ராஜபக்சே.. அடுத்த வாரம் வருகிறார்!

advertisement by google

தோல்வி
இந்த அதிபர் தேர்தலில் ஐக்கிய தேசிய கட்சி தலைமையிலான கூட்டணியின் வேட்பாளர் சஜித் பிரேமதாச தோல்வி அடைந்துள்ளார். பிரதமர் ரணில் விக்கிரமசிங்கேவின் கூட்டணிதான் ஐக்கிய தேசிய கட்சி தலைமையிலான கூட்டணி என்பது குறிப்பிடத்தக்கது. அதனால் இந்த தேர்தல் ரணில் vs ராஜபக்சே என்று பார்க்கப்பட்டது.

advertisement by google

விலகல்
இந்த நிலையில் தேர்தல் தோல்வி காரணமாக பிரதமர் பதவியில் இருந்து ரணில் விக்கிரமசிங்கே பதவி விலக வேண்டும் என்று கோரிக்கை வைக்கப்பட்டு வந்தது. முன்னாள் அதிபர் ராஜபக்சே இது தொடர்பாக தினமும் கோரிக்கைகளை வைத்து வருகிறார். அதேபோல் ரணில் விக்கிரமசிங்கே கட்சியை சேர்ந்தவர்களும் இதே கோரிக்கையை வைத்து வந்தனர்.

advertisement by google

கடிதம்
இதையடுத்து இலங்கை பிரதமர் ரணில் விக்கிரமசிங்கே ராஜினாமா செய்தார். தேர்தல் தோல்வியை தொடர்ந்து அவர் அதிபர் கோத்தபய ராஜபக்சேவிடம் ராஜினாமா கடிதத்தை அளித்தார். அவரின் பதவி விலகலை அதிபர் கோத்தபய ராஜபக்சே ஏற்றுக்கொண்டார். மேலும் எதிர்க்கட்சித் தலைவராக சஜித் பிரேமதாசவை நியமிக்கவும் ஐதேக கூட்டணியில் ரணில் வலியுறுத்தி உள்ளார்.

advertisement by google

என்ன முடிவு
இதையடுத்து இலங்கையில் அமைச்சரவை மொத்தமாக கலைக்கப்படும். அதன்பின் மீண்டும் பிரதமர் பதவிக்கு தேர்தல் நடக்கும். ஆனால் அதுவரை இடைக்கால அரசு பதவி ஏற்கும் என்று தகவல்கள் வருகிறது. பெரும்பாலும் புதிய அரசை அமைக்க மகிந்த ராஜபக்சேவை கோத்தபாய ராஜபக்சே அழைக்க கூடும் என தகவல் வெளியாகி வருகிறது.

advertisement by google
advertisement by google

Related Articles

Back to top button