உலக செய்திகள்

அமெரிக்க அதிபர் டிரம்பை பதவி விலக ஜனநாயகக் கட்சி கோரிக்கை? தொலைக்காட்சி விவாதம் தொடங்கியது?

advertisement by google

அமெரிக்கஅதிபர் டிரம்பை பதவி விலக ஜனநாயக் கட்சி கோரிக்கை.

advertisement by google

முன்னாள் துணை அதிபரை அவதூறாகப் பேசிய வழக்கில் அமெரிக்க அதிபர் டிரம்பை பதவி நீக்கம் செய்ய வேண்டும் என கோரிக்கை வலுத்து வருகிறது. இதையடுத்து அவரை பதவி நீக்கக் கோரும் தொலைக்காட்சி விவாதம் தொடங்கியுள்ளது.

advertisement by google

அமெரிக்காவில் அடுத்தாண்டு நடைபெறும் அதிபர் தேர்தலில் தற்போதைய அதிபர் டிரம்ப்பை எதிர்த்து, ஜனநாயகக் கட்சி சார்பில் முன்னாள் துணை அதிபர் ஜோ பிடன் போட்டியிடுகிறார். இவரது மகன் ஹன்டர் பிடென் உக்ரைனில் உள்ள இயற்கை எரிவாயு நிறுவனத்தில் முக்கியப் பொறுப்பில் உள்ளார்.

advertisement by google

இந்த எரிவாயு நிறுவனத்தில் எழுந்த ஊழல் குற்றச்சாட்டு குறித்து விசாரித்த அரசு வழக்கறிஞரை பணி நீக்கம் செய்ய வேண்டும் என அந்நாட்டு அதிபரிடம் ஜோ பிடன் வலியுறுத்தியதாக அமெரிக்க அதிபர் டிரம்ப் குற்றம் சாட்டினார்.

advertisement by google

இது தொடர்பாக விசாரணை நடத்தும்படி அவர் உக்ரைன் அதிபர் ஜெலன்ஸ்கி யுடன் தொலைபேசி மூலம் கடந்த ஜூலை 25ஆம் தேதி கூறியுள்ளார். இந்த நிலையில் ஜோ பிடன் பெயருக்கு களங்கம் ஏற்படுத்தும் வகையில் டிரம்ப் செயல்பட்டதாக தகவல்கள் வெளியாகி உள்ளன.

advertisement by google

ஜோ பிடன் மற்றும் அவரது மகன் ஹன்ட்டர் குறித்து அவதூறு செய்திகளைப் பரப்ப உதவுமாறு உக்ரைன் அதிபர் விளாடிமிர் ஜெலன்ஸ்கிக்கு நெருக்கடி கொடுத்ததாக டிரம்ப் மீது குற்றச்சாட்டு எழுந்தது. இதற்காக உக்ரைனுக்கு வழங்கவேண்டிய 400 மில்லியன் டாலர் ராணுவ உதவியையும் டிரம்ப் நிறுத்தி வைத்ததாக புகார் கூறப்பட்டது.

advertisement by google

இதையடுத்து டிரம்ப்புக்கு எதிராக ஜனநாயக கட்சி கொண்டு வந்த கண்டன தீர்மானத்தை, பாராளுமன்ற உளவு கமிட்டி விசாரிக்கத் தொடங்கியது.நாடாளுமன்றத்தில் ஜனநாயக கட்சிக்கு பெரும்பான்மை ஆதரவு உள்ளதால், அந்தக் கட்சி, அதிபர் டிரம்ப் மீது பதவி நீக்க தீர்மானம் கொண்டு வந்தது.

advertisement by google

இந்த விசாரணையின் போது அமெரிக்க, உக்ரைன் நாட்டு உயரதிகாரிகளான வில்லியம் டைலர் மற்றும் ஜார்ஜ் கென்ட் ஆகியோரிடமும் விசாரிக்கப்பட்டது.

advertisement by google

Related Articles

Back to top button