உலக செய்திகள்

பெண்ணியம், ஓரிணச்சேர்க்கை,நாத்திகத்தை வலியுறுத்துபவர்கள் தீவிரவாதிகள் சவூதிஅரசு அதிரடி ?

advertisement by google

பெண்ணியம் , ஹோமோ, நாத்திகத்தை வலியுறுத்துபவர்கள் தீவிரவாதிகள்.. சவூதி அரசு அதிரடி.

advertisement by google

அரசு தெரிவித்துள்ளது. அரசின் பாதுகாப்பு மையம் சார்பில் வெளியிடப்பட்டுள்ள வீடியோ ஒன்றில் இந்தக் கருத்து வலியுறுத்தப்பட்டுள்ளது.

advertisement by google

சவுதியில் பெண்கள் கார் ஓட்ட கடந்த ஆண்டு அனுமதிக்கப்பட்ட நிலையில், தற்போது அதற்கு தடைவிதிக்கப்பட்டுள்ளது. இதற்கு சமூக ஆர்வலர்கள் உள்ளிட்ட பலரும் எதிர்ப்புகளையும் கண்டனங்களையும் பதிவு செய்து வருகின்றனர். இந்த நிலையில் தற்போது இந்த வீடியோ வெளியிடப்பட்டுள்ளது.
இஸ்லாமிய நாடான சவுதியில் வெளிநாட்டினரை ஈர்க்கும்வகையில் சகிப்புத்தன்மையை மேம்படுத்த பல்வேறு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டாலும் பெண்ணியம் உள்ளிட்ட கருத்துக்கள் தண்டனைக்குரிய குற்றங்களே என்று மேலும் கூறப்பட்டுள்ளது.
இதய மாற்று சிகிச்சைக்காக வந்த ஏழை நோயாளி.. தத்தெடுத்த நர்ஸ்.. ஜார்ஜியாவில் நெகிழ்ச்சி!

advertisement by google

கண்டித்த பெண்கள் கைது
சவுதிஅரேபியாவில் பெண்கள் கார் ஓட்ட தற்போது மீண்டும் அனுமதி மறுக்கப்பட்டுள்ள நிலையில், இதுகுறித்து கண்டனங்களை தெரிவித்த பெண்ணியவாதிகள் கைது செய்யப்பட்டுள்ளனர். இத்தகைய அனுமதிகள் குறித்து அரசின் முடிவே இறுதியானது என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

advertisement by google

சவுதிஅரேபியா அரசு திட்டவட்டம்
பெண்ணியம் குறித்த சிந்தனை மற்றும் கருத்துக்கள் தீவிரவாத கருத்தாகவே கொள்ளப்படும் என்று சவுதி அரேபியா தெரிவித்துள்ளது. இதுகுறித்து அரசு வெளியிட்டுள்ள அந்த வீடியோ பதிவில் பெண்ணியம், ஓரினச்சேர்க்கை மற்றும் நாத்திகம் குறித்த கருத்துக்கள் அனைத்தும் தண்டனைக்குரிய தீவிரவாதக் கருத்துக்களே என்று கூறப்பட்டுள்ளது.

advertisement by google

சகித்துக் கொள்ள முடியாது
பெண்ணியம், ஓரினச்சேர்க்கை மற்றும் நாத்திகம் உள்ளிட்டவை குறித்த கருத்துக்களை சகித்துக் கொள்ளவோ ஏற்றுக்கொள்ளவோ முடியாது என்று பாதுகாப்பு மைய தலைவர் வெளியிட்டுள்ள அந்த வீடியோவில் பதிவு செய்யப்பட்டுள்ளது. அளவுக்கதிகமாக வலியுறுத்தப்படும் எந்தக் கருத்துக்களும் தீவிரவாதக் கருத்துக்களே என்றும் மேலும் கூறப்பட்டுள்ளது.

advertisement by google

பயணிகள் விசா கட்டுப்பாடு
கச்சா எண்ணெயை மட்டுமே நம்பியுள்ள சவுதி அரேபியாவில் வெளிநாட்டு முதலீடுகளை ஈர்க்கும்வகையில் இளவரசர் முகமது பின் சல்மான், பல்வேறு வளர்ச்சி நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறார். பயணிகள் விசா முதலியவற்றில் இருந்த கட்டுப்பாடுகளை அவர் தளர்த்தியுள்ளார்.

advertisement by google

பெண்களும் கைது
ஆனால் அரசின் கொள்கைகள் மற்றும் நடவடிக்கைகளை எதிர்ப்பவர்களை தொடர்ந்து சவுதி அரேபிய அரசு கைது செய்து வருகிறது. அரசுக்கு எதிரான கருத்துக்களை கூறிய பல பெண்களும் கைது செய்யப்பட்டுள்ளனர். அங்கு கருத்து சுதந்திரம் இல்லாத சூழலையே இது காட்டுகிறது. எந்த விவகாரத்திலும் அரசின் முடிவே இறுதியானது என்ற கொள்கையை கொண்டதாக சவுதி அரேபியா விளங்கி வருகிறது.

நாத்திகம் பேசினாலும் தண்டனை
சவுதி அரேபியாவை பொறுத்தவரை ஓரினச்சேர்க்கை மற்றும் நாத்திகம் போன்ற செயல்பாடுகளை முன்னெடுப்பவர்கள் மீது சட்டம் உடனடியாக பாய்ந்து அவர்களுக்கு மரணதண்டனை அளிக்கவும் சட்டத்தில் இடமுள்ளது. இதுகுறித்து ஆதரவாக பேசிய அரசியல் கட்சிகள், இயக்கங்களுக்கு அங்கு தடை விதிக்கப்பட்டுள்ளது.

advertisement by google

Related Articles

Back to top button