உலகநாடுகள் சீனாவுடன் வர்த்தகம் செய்யமுடியாத நிலைமை?இந்தியாவிற்கு சாதகமான காற்று வீசுமா? முழு விபரம் – விண்மீன்நியூஸ்


உலகம் இனி சீனாவுடன் வர்த்தகம் செய்ய விரும்பாத சூழல் உருவாகியிருப்பதாகவும்
இது இந்தியா தனது 5 டிரில்லயன் டாலர் பொருளாதார கனவை எட்டுவதற்கான சாத்தியத்தை அதிகரித்துள்ளது என்றும்
மத்திய அமைச்சர் நிதின் கட்கரி தெரிவித்துள்ளார்.
சிறு, குறுந்தொழில்கள், நடுத்தர வர்த்தக நிறுவனங்களை மீண்டும் செயல்பட வைக்கும் அரசின் திட்டங்கள் குறித்து செய்தியாளர்களுக்குப் பேட்டியளித்த நிதின்கட்கரி,
ஊரடங்கு தளர்வுக்குப் பின்னர் பொருளாதார மீட்பு நடவடிக்கைகள் குறித்தும் விவரித்தார்
ஒவ்வொரு நாடும் பொருளாதார ரீதியாக மிகவும் பாதிக்கப்பட்டுள்ளது. இதனால் சீனாவுடன் வர்த்தகம் செய்ய பல நாடுகள் தயங்குகின்றன என்று அவர் கூறினார்
இது ஒருவகையில் இந்தியாவுக்கு சாதகமான வரம் போல் அமைந்துவிட்டது என்று சுட்டிக்காட்டிய நிதின் கட்கரி, புலம் பெயர்ந்த பல லட்சம் தொழிலாளர்களை திரும்ப அழைக்க உகந்த நேரம் இது அல்ல என்றும் நிதின் கட்கரி தெரிவித்துள்ளார்.