இந்தியாஉலக செய்திகள்தமிழகம்தமிழ்நாடு மாவட்டம்

மாலைநேர பரபரப்பு விரிவான செய்திகள்(15.9.2019)தமிழகம் to உலகம் வரை

advertisement by google

?????விண்மீண்நியூஸ்?????•┈┈•❀ ? WINMEENNEWS.COM?❀•┈┈•

advertisement by google

கோவையில், பாகிஸ்தான் முஜாகிதீன் என்ற வாட்ஸப் குழுவில் செயல்பட்டு வந்ததாக

advertisement by google

நகைப்பட்டறையில் பணியாற்றி வந்த வங்கதேச இளைஞர் பாரூக் கவுசீர் என்பவரை காவல்துறையினர் பிடித்து விசாரணை

advertisement by google

•┈┈• ❀ ? winmeennews.com ?❀ •┈┈•
[9/15, 1:07 PM] விண்மீண்நியூஸ்2: •┈┈•❀ ?? NEWS?❀•┈┈•

advertisement by google

பேரறிஞர் அண்ணாவின் 111வது பிறந்த நாளை முன்னிட்டு சென்னை வள்ளுவர் கோட்டத்தில் உள்ள அவரது திருஉருவ சிலைக்கு

advertisement by google

திமுக தலைவர் ஸ்டாலின் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார்

advertisement by google

•┈┈• ❀ ? winmeennews.com ?❀ •┈┈•
[9/15, 1:07 PM] விண்மீண்நியூஸ்2: •┈┈•❀ ?? NEWS?❀•┈┈•

advertisement by google

திருவள்ளூர் : கனிம வளத்துறை அதிகாரி சீனிவாசராவ் வீட்டில் 2-வது நாளாக சோதனை நடைபெற்றுவருகிறது – முக்கிய ஆவணங்கள் பறிமுதல்

•┈┈• ❀ ?winmeennews.com ?❀ •┈┈•
[9/15, 1:07 PM] விண்மீண்நியூஸ்2: ?அரசியல் சூழ்ச்சி ??

இன்றைய முக்கிய செய்திகள்

தமிழகத்தில் இருமொழிக் கொள்கையே தொடரும் என அமைச்சர்கள் ஜெயக்குமார், செங்கோட்டையன் உறுதி அளித்துள்ளனர். அதேசமயம் அமித் ஷாவின் கருத்து அதிர்ச்சி அளிப்பதாக மு.க.ஸ்டாலின் உள்ளிட்ட தலைவர்கள் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர்.

அனுமதியின்றி பேனர் வைத்தால் ஓராண்டு சிறைத் தண்டனை விதிக்கப்படும் என எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. சுபஸ்ரீ இறப்புக்கு காரணமான ஜெயகோபாலன் திடீரென மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

ரசிகர்கள் யாரும் பேனர் வைக்க வேண்டாம் என விஜய், சூர்யா வேண்டுகோள் விடுத்துள்ளனர். இனி பேனர் வைக்கப் போவதில்லை என அஜித் ரசிகர்களும் உறுதிமொழியேற்று செய்தி வெளியிட்டுள்ளனர்.

தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்களில் நேற்று பரவலாக மழை. இன்றும் பெய்ய வாய்ப்பிருப்பதாக, வானிலை ஆய்வு மையம் தகவல்.

ஒசாமா பின்லேடன் மகன் ஹம்சா லேடன் சுட்டுக் கொல்லப்பட்டார். இந்தத் தகவலை அமெரிக்க அதிபர் டொனால்ட் ட்ரம்ப் உறுதி செய்தார்.

ஆஷஸ் டெஸ்ட் கிரிக்கெட் போட்டியில் வலுவான நிலையில் இங்கிலாந்து அணி. மூன்றாம் நாள் ஆட்ட நேர முடிவில், 382 ரன்கள் முன்னிலைப் பெற்றது.
[9/15, 1:07 PM] விண்மீண்நியூஸ்2: •┈┈•❀ ?? NEWS?❀•┈┈•

பருவமழை முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளுக்கு ரூ.7.65 கோடி நிதி ஒதுக்கி தமிழக அரசு அரசாணை வெளியீடு

பருவ மழைக்கு முன்பாக அனைத்து பணிகளையும் முடிக்க உத்தரவு

•┈┈• ❀ ? winmeennews.com ?❀ •┈┈•
[9/15, 1:07 PM] விண்மீண்நியூஸ்2: •┈┈•❀ ?? NEWS?❀•┈┈•

வேலூர் : வாணியம்பாடி அருகே அரசு மருத்துவமனையின் கழிவறையில் இறந்த நிலையில் பெண் சிசு கண்டெடுப்பு – போலீசார் விசாரணை

•┈┈• ❀ ? winmeennews.com?❀ •┈┈•
[9/15, 1:07 PM] விண்மீண்நியூஸ்2: •┈┈•❀ ?? NEWS?❀•┈┈•

திருவாரூர் : ஓகை கிராமத்தில் கேட்பாரற்று கிடந்த காரில் ரூ.1 லட்சம் மதிப்புள்ள 1500 மதுபாட்டில்கள் பறிமுதல் – போலீசார் விசாரணை

•┈┈• ❀ ?winmeennews.com?❀ •┈┈•
[9/15, 1:07 PM] விண்மீண்நியூஸ்2: •┈┈•❀ ?? NEWS?❀•┈┈•

கரூர்: மாயனூர் கதவணைக்கு 17,770 கனஅடி நீர்வரத்து; கதவணையிலிருந்து 16,160 கனஅடி நீர் காவிரி ஆற்றில் வெளியேற்றம்

•┈┈• ❀ ?winmeennews ?❀ •┈┈•
[9/15, 1:07 PM] விண்மீண்நியூஸ்2: •┈┈•❀ ?? NEWS?❀•┈┈•

சென்னை : மாநில அறிவுரை கழக தலைவரும், ஓய்வுபெற்ற உயர்நீதிமன்ற நீதிபதியுமான ராமன்(82) காலமானார்

•┈┈• ❀winmeennews.com ?❀ •┈┈•
[9/15, 1:07 PM] விண்மீண்நியூஸ்2: ?அரசியல் சூழ்ச்சி ??

விபத்துக்களை குறைப்பது குறித்தும், போக்குவரத்தை மேம்படுத்துவது குறித்தும் அறிந்து கொள்வதற்காகவும் தமிழகத்தைச் சேர்ந்த ஐஏஎஸ் மற்றும் ஐபிஎஸ் அதிகாரிகள் குழுவினர் ஆஸ்திரேலியா சென்றுள்ளனர்.

தமிழகத்தில் சாலை விபத்துக்கள் பெருகி வருகிறது. தரமான நான்கு வழிச்சாலைகள் தமிழகத்தில் அதிகம் இருந்தும் விபத்துக்கள் இங்குதா மிக அதிகமாக இருக்கிறது. இதையடுத்து சாலை விபத்துக்களை குறைக்கவும் போக்குவரத்தை மேம்படுத்தவும் தமிழகத்தில் பல்வேறு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.குறிப்பாக சென்னையில் போக்குவரத்து கூடுதல் கமிஷ்னர் அருண் தலைமையில் விபத்து ஏற்படும் பகுதிகளை கண்டறிந்து அந்த பகுதியில் பல்வேறு தடுப்பு நடவடிக்கைகள் எடுக்கப்பட்டன. இதனால் காரணமாக சென்னையில் தற்போது விபத்துக்கள் ஓரளவு குறைந்துள்ளது. இதேபோல் மாநில அளவில் போக்குவரத்து கமிஷ்னர் சமயமூர்த்தி தலைமையில் செயல்திட்டங்கள் வகுக்கப்பட்டன. இதன்காரணமாக இந்த ஆண்டு தமிழகத்தில் விபத்துக்கள் ஓரளவுக்கு குறைந்துள்ளது. இந்நிலையில் தமிழகத்தில் போக்குவரத்தை மேம்படுத்தவும், விபத்துக்களை குறைக்கவும், விபத்துகள் நடந்தால் காயம் ஏற்பட்டவர்களை மீட்பது குறித்து ஆஸ்திரேலியாவிற்கு அதிகாரிகளை அனுப்பி ஆய்வு நடத்த தமிழக அரசு முடிவு செய்தது. ஏனெனில் ஆஸ்திரேலியாவின் விக்டோரியா மாகாணத்தில் தான் உலகிலேயே சாலை போக்குவரத்து திறம்பட செயல்படுத்தப்படுகிறது. எப்படி அங்கு செயல்படுத்துகிறார்கள் என்பதை அறிந்து அதனை தமிழகத்தில் செயல்படுத்துவதற்காக அதிகாரிகள் குழுவினை ஆஸ்திரேலியாவுக்கு அனுப்பி உள்ளது தமிழக அரசு. இதன்படி நெடுஞ்சாலைத்துறை செயலாளர் எஸ்.கே.பிரபாகர், சுகாதாரத்துறை செயலாளர் பீலா ராஜேஸ், சென்னை போக்குவரத்து போலீஸ் கூடுதல் கமிஷ்னர் அருண், சாலைத்துறை இயக்குனர் அருண் தம்புராஜ், சென்னை ராஜீவ் காந்தி மருத்துவமனை டீன் ஜெயந்தி ரங்கராஜன், நெடுஞ்சாலைத்துறை இயக்குனர் கீதா, சென்னை பெருநகர வளர்ச்சி குழு தலைமை திட்டமிடல் அதிகாரி பொன் செந்தில் நாதன் ஆகியோர் அடங்கிய அதிகாரிகள் குழுவினர் நேற்று இரவு ஆஸ்திரேலியாவில் உள்ள விக்டோரியா மாகாணத்திற்கு சென்றனர். அங்கு ஒரு வாரம் தங்கியிருந்து அந்நாட்டின் பல்வேறு துறை அதிகாரிகளை சந்தித்து ஆலோசனை நடத்த உள்ளனர்.முன்னதாக கடந்த ஆண்டு தமிழகம், ஆஸ்திரேலியாவின் விக்டோரியா மாகாணம் இடையே விபத்து மற்றும் அவசர சிகிச்சை மேம்பாடு குறித்த புரிந்துணர்வு ஒப்பந்தம் கையெழுத்தாகி இருந்தது.
[9/15, 1:07 PM] விண்மீண்நியூஸ்2: ???சுபஸ்ரீ உயிர் இழந்த அதே பகுதியில் பேனரை அகற்றும் போது மீண்டும் விபத்து

சென்னையில் சுபஸ்ரீ உயிர் இழந்த அதே பகுதியில், பேனரை அகற்றும் போது ஊழியர் ஒருவர் கீழே விழுந்து படுகாயமடைந்தார்.

சென்னை பள்ளிக்கரணையில் பேனர் விழுந்ததால் விபத்து ஏற்பட்டதில் சுபஸ்ரீ  உயிர் இழந்தார்.

இதனால் சாலையோரங்களில் உள்ள பேனர்கள் அகற்றும் பணி நடந்து வருகிறது.

இந்நிலையில், நேற்று இரவு பள்ளிக்கரணை ரேடியல் சாலையில் 60 அடி உயரம் உள்ள பேனரை அகற்றும் பணியில் ஊழியர்கள் ஈடுப்பட்டு வந்தனர்.

பேனரை அகற்றும் போது  ராஜேஷ் என்பவர் கீழே விழுந்தார்.

இதனையடுத்து, அவர் தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு உள்ளார்.

SRI??செய்திகுழுமம்
[9/15, 1:07 PM] விண்மீண்நியூஸ்2: ??????எல்லையை பார்வையிட்டார் ராணுவ தளபதி

ஜம்முவில் எல்லைக் கட்டுப்பாட்டு பகுதியில் உள்ள ராணுவ நிலைகளை தளபதி ரன்பீர் சிங் நேற்று பார்வையிட்டார்.

அப்போது, எதிரிகளின் சூழ்ச்சிகளை முறியடிக்கவும், எதிர்தாக்குதல் தொடுக்கவும் வீரர்கள் தயார் நிலையில் இருக்க வேண்டுமென்று அவர் அறிவுறுத்தினார்.

ஜம்முவில் உள்ள ரஜோரி, சுந்தர்பானி பகுதிகளில் எடுக்கப்பட்டுள்ள பாதுகாப்பு நடவடிக்கைகள், தயார்நிலை ஆகியவை குறித்து எல்லைக் கட்டுப்பாட்டு பகுதியில் உள்ள ராணுவ நிலைகளை அவர் பார்வையிட்டார்.

அவருடன் லெப்டினன்ட் ஜெனரல் பரம்ஜித் சிங் சங்கா உடன் இருந்தார்.

எல்லை நடவடிக்கைகள் பற்றி அவருக்கு அங்குள்ள அதிகாரிகள் விளக்கினர்.

SRI??செய்திகுழுமம்
[9/15, 1:07 PM] விண்மீண்நியூஸ்2: ???பாம்பனில் வெண்நுரை திட்டு

மன்னார் வளைகுடா தீவுகளை சுற்றியுள்ள கடல் பகுதி மற்றும் ராமநாதபுரம் மாவட்டம், பாம்பன் கடல் பகுதியில் ஏற்பட்டுள்ள நீலப்பச்சை பாசித்திரளால், கடந்த 3 நாட்களாக கடல்நீர் வெண்பச்சை நிறத்தில் காட்சியளிக்கிறது.

இந்நிலையில் பாம்பன் கடலில் குருசடைத்தீவு மற்றும் பூமரிச்சான் தீவு கால்வாய் பகுதியில் வேகமாக செல்லும் நீரோட்டங்கள் தீவுகளுக்கு அப்பால் ஒன்றாக சந்திக்கும் போது,

ஏற்படும் மோதலால் கடலில் ஏற்படும் வெண்நுரை திட்டு அதிகளவில் நேற்றும் மிதந்து சென்றது.

Winmeennews.com??செய்திகுழுமம்
[9/15, 1:07 PM] விண்மீண்நியூஸ்2: ???சென்ட்ரல்- உஜ்ஜைனி இடையே சிறப்பு கட்டண ரயில் Aஇயக்கம்: தெற்கு ரயில்வே அறிவிப்பு

சென்ட்ரல்- உஜ்ஜைனி இடையே சிறப்பு கட்டண ரயில் இயக்கப்படுவதாக தெற்கு ரயில்வே அறிவித்துள்ளது.

இதுகுறித்து தெற்கு ரயில்வே வெளியிட்ட அறிக்கை:

சென்ட்ரல்- உஜ்ஜைனி இடையே சிறப்பு கட்டண ரயில் இன்று காலை 10 மணிக்கு புறப்பட்டு மறுநாள் பிற்பகல் 2.30 மணிக்கு உஜ்ஜைனி சென்றடையும்.

இவ்வாறு அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.

Winmeennews.com??செய்திகுழுமம்
[9/15, 1:07 PM] விண்மீண்நியூஸ்2: ♨தமிழகத்தில் ஓரிரு இடங்களில் பலத்த மழைக்கு வாய்ப்பு

♦மேலடுக்கு சுழற்சி, வெப்பச்சலனம் ஆகியவை காரணமாக, தமிழகத்தில் 14 மாவட்டங்களில்  ஓரிரு இடங்களில் ஞாயிற்றுக்கிழமை இன்று (செப்.15) பலத்த மழை பெய்ய வாய்ப்பு உள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

♦இது குறித்து சென்னை வானிலை ஆய்வு மைய அதிகாரி சனிக்கிழமை கூறியது: வடதமிழகம் மற்றும் அதையொட்டிய பகுதிகளில் காணப்படும் வளிமண்டல மேலடுக்கு சுழற்சி, வெப்பச்சலனம் ஆகியவை காரணமாக, தமிழகத்தில் சில இடங்களில் ஞாயிற்றுக்கிழமை (செப்.15) லேசானது முதல் மிதமானது வரை மழை பெய்ய வாய்ப்பு உள்ளது.  

♦குறிப்பாக, தேனி, திண்டுக்கல், கன்னியாகுமரி, திருவாரூர், திருவள்ளூர், காஞ்சிபுரம், நாகப்பட்டினம், கரூர், நீலகிரி, நாமக்கல், விருதுநகர், ராமநாதபுரம், தருமபுரி, திருநெல்வேலி, புதுக்கோட்டை, சேலம், கடலூர், விழுப்புரம், அரியலூர், பெரம்பலூர், மதுரை, தஞ்சாவூர், சிவகங்கை ஆகிய மாவட்டங்களில்  சில இடங்களில் மிதமான மழை பெய்ய வாய்ப்பு உள்ளது.

♦தமிழகத்தில் மதுரை, விருதுநகர், புதுக்கோட்டை, சிவகங்கை, தஞ்சாவூர், அரியலூர், பெரம்பலூர், திருவண்ணாமலை, கடலூர், விழுப்புரம், ராமநாதபுரம், தூத்துக்குடி, சேலம், திருச்சி ஆகிய 14 மாவட்டங்களின் ஓரிரு இடங்களில் பலத்த மழை பெய்ய வாய்ப்பு உள்ளது.

♦சென்னையில் வானம் ஓரளவு மேகமூட்டமாக இருக்கும். சில இடங்களில் மாலை அல்லது இரவில்  இடியுடன் கூடிய மழை பெய்ய வாய்ப்பு உள்ளது என்றார்.

♦மழை அளவை பொறுத்த வரையில் சனிக்கிழமை காலை 8.30 மணி நிலவரப்படி, தஞ்சாவூர் மாவட்டம் திருவிடைமருதூர், அரியலூரில் தலா 150 மி.மீ., தஞ்சாவூர் மாவட்டம் கும்பகோணம், தருமபுரி மாவட்டம் அரூரில் 110 மி.மீ., சிவகங்கை மாவட்டம் திருப்பத்தூர், பெரம்பலூர் மாவட்டம் செட்டிகுளம், திருவாரூர் மாவட்டம் நன்னிலத்தில் தலா 70 மி.மீ. மழை பதிவானது.
 
[9/15, 1:07 PM] விண்மீண்நியூஸ்2: ?live news …

சிபிஐ அதிகாரிக்கு ரூ.2 கோடி லஞ்சம் கொடுக்க முயன்ற சென்னை கட்டுமான நிறுவன துணை தலைவர் அதிரடி கைது

?சிபிஐ உயரதிகாரிக்கு ரூ.2 கோடி லஞ்சம் கொடுக்க முயன்ற சென்னையை சேர்ந்த கட்டுமான நிறுவன நிர்வாகி கைது செய்யப்பட்டுள்ளார். சென்னை வானகரத்தில் செயல்பட்டு வரும் சோமா என்டர்பிரைசஸ் என்ற கட்டுமான நிறுவனத்தின் துணை தலைவர் ராமச்சந்திர ராவ் என்பவரே கைது செய்யப்பட்டவர். சிபிஐ வழக்கு ஒன்றில் சோமா என்டர்பிரைசஸ் நிறுவனத்திற்கு சாதகமாக நடவடிக்கை எடுப்பதற்காக சிபிஐ டிஐஜி அஸ்ரா கார்கிற்கு ராமச்சந்திர ராவ் ரூ.2 கோடி லஞ்சம் கொடுக்க முயன்றுள்ளார்.

?அஸ்ரா கார்க் கொடுத்த புகாரின் அடிப்படையில் சிபிஐ வழக்குப்பதிவு செய்து ராமச்சந்திர ராவை கைது செய்துள்ளனர். முன்னதாக லஞ்சம் கொடுக்க முயன்ற விவகாரத்தில் இடைத்தரகராக செயல்பட்ட உள்துறை அமைச்சகத்தில் பணிபுரியும் நீரஜ்குமார் சிங் மற்றும் தினேஷ் ஆகியோரையும் போலீசார் அதிரடியாக கைது செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
[9/15, 1:07 PM] விண்மீண்நியூஸ்2: ??????மதுவிலக்குப் பிரிவு ஐஜியாக ஜெயராம் நியமனம்

மதுவிலக்குப் பிரிவு ஐஜியாக ஜெயராம் நியமிக்கப்பட்டுள்ளார்.

இது குறித்து உள்துறைச் செயலாளர் நிரஞ்சன் மார்டி வெளியிட்டுள்ள அறிக்கையில், போலீஸ் துறையில் திட்டமிடுதல் பிரிவு ஐஜியாக இருந்த ஜெயராம், மதுவிலக்குப் பிரிவு ஐஜியாக நியமிக்கப்பட்டுள்ளார் என்று கூறப்பட்டுள்ளது.

Winmeennews.com??செய்திகுழுமம்
[9/15, 1:07 PM] விண்மீண்நியூஸ்2: ???பயங்கரவாதத்தை ஆதரிப்பதை நிறுத்தாவிட்டால் பாகிஸ்தான் தானாகவே துண்டுகளாக சிதறும் – ராஜ்நாத் சிங்

அண்டை நாடான பாகிஸ்தான் பயங்கரவாதத்தை ஊக்குவிப்பதை நிறுத்திக் கொள்ள வேண்டும் என பாதுகாப்புத்துறை மந்திரி ராஜ்நாத் சிங் எச்சரிக்கை விடுத்துள்ளார்.
[9/15, 1:07 PM] விண்மீண்நியூஸ்2: ???கோவையை சேர்ந்த ஒரு ரூபாய் இட்லி பாட்டிக்கு துணை ஜனாதிபதி வெங்கையா பாராட்டு

தமிழகத்தின் கோவை மாவட்டத்தில் தள்ளாத வயதிலும் இட்லிக்கடை நடத்தி வரும் ஒரு ரூபாய் இட்லிக்கடை பாட்டி கமலாத்தாளுக்கு துணை ஜனாதிபதி வெங்கையா பாராட்டு தெரிவித்துள்ளார்.
[9/15, 1:07 PM] விண்மீண்நியூஸ்2: ???சவுதி பெட்ரோல் சுத்திகரிப்பு தொழிற்சாலை மீது ஆளில்லா விமானம் தாக்குதல் – மைக் பாம்பியோ கண்டனம்

சவுதி அரேபியாவின் பெட்ரோல் சுத்திகரிப்பு தொழிற்சாலை மீது ஆளில்லா விமானத்தால் தாக்குதல் நடத்தப்பட்டதற்கு அமெரிக்க வெளியுறவு துறை மந்திரி மைக் பாம்பியோ கண்டனம் தெரிவித்துள்ளார்.
[9/15, 1:07 PM] விண்மீண்நியூஸ்2: ???பாபநாசம், சேர்வலாறு, மணிமுத்தாறு அணைகளில் இருந்து பாசனத்துக்கு தண்ணீர் திறப்பு

பாபநாசம், சேர்வலாறு, மணிமுத்தாறு அணைகளில் இருந்து பாசனத்துக்கு இன்று முதல் தண்ணீர் திறக்கப்படுகிறது.

அக்டோபர் 4-ம் தேதி வரை 20 நாட்களுக்கு பிசான பருவ முன்னேற்பாடு, குடிநீர் தேவைக்காக தண்ணீர் திறக்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

Winmeennews.com??செய்திகுழுமம்
[9/15, 1:07 PM] விண்மீண்நியூஸ்2: ♨இரண்டு பூஜைகள் செய்தால் எல்லாம் சரியாகிவிடும்-சாமியாரால் பெண்ணுக்கு நேர்ந்த விபரீத அனுபவம்

♦பெங்களூருவில் உள்ள பானஸ்வாடி பகுதியில்தான் இச்சம்பவம் நிகழ்ந்துள்ளது.

♦தனிப்பட்ட வாழ்வில்  ஏற்பட்ட பிரச்னைகளை சரிசெய்வதற்காக, குறிப்பிட்ட பெண், அந்த பூசாரியை நாடியுள்ளார். அவர், இதற்காக 2 சிறப்பு பூஜை செய்ய வேண்டும் எனக் கூறியுள்ளார்.

♦இதற்கு அந்த பெண் ஒப்புக் கொள்ளவே, முதல் பூஜையை வீட்டில் வைத்து, செய்த பின், 2வது பூஜை செய்வதற்காக, குக்கே சுப்பிரமணிய கோயிலுக்கு பூசாரி அவரை அழைத்துச் சென்றுள்ளார்.

♦அங்கு, திடீரென அந்த பெண்ணை பாலியல் ரீதியாக, பூசாரி தொல்லை செய்துள்ளார். தனது ஆசைக்கு இணங்கினால்தான் பூஜை நிறைவேறும் என்றும் அவர் கூறியுள்ளார்.

♦ஆனால், அவரிடம் இருந்து தப்பித்த, அப்பெண், போலீசில் இதுபற்றி புகார் அளித்தார். இதன்பேரில் போலீசார் வழக்குப் பதிந்து விசாரிக்கின்றனர்.

advertisement by google

Related Articles

Back to top button