கல்விதமிழகம்தமிழ்நாடு மாவட்டம்

பல்வேறு வடிவம் கொண்ட பணம் வெளியீட்டு விழா ?

advertisement by google

பல்வேறு வடிவம் கொண்ட பணம் ஆங்கில நூல் வெளியீட்டு விழா

advertisement by google

நவ10-திருச்சிராப்பள்ளி பணத்தாள்கள் சேகரிப்போர் சங்கம் சார்பில் பல்வேறு வடிவங்களைக் கொண்ட பணம் ஆங்கில நூல் வெளியீட்டு விழா திருச்சியில் நடைபெற்றது. திருச்சிராப்பள்ளி பணத்தாள்கள் சேகரிப்போர் சங்க தலைவர் விஜயகுமார் நூலினை வெளியிட சந்திரசேகரன் பெற்றுக்கொண்டார். பல்வேறு வடிவங்களிலான பணம் குறித்து சந்திரசேகரன் பேசுகையில்,
நவீன நாணய அமைப்புகளில், உண்மையான பயன்பாட்டில் பல்வேறு வகையான பணம் உள்ளன.உலோக பணம், காகித பணம், கடன் பணம், டோக்கன் பணம் என உள்ளன.
முதல் இரண்டு வகையான பணம் நாணயப் பணத்தின் வடிவத்திலும், கடைசியாக கடன் அல்லது வங்கி பணம் உள்ளன.
உலோகப் பணத்தில்
தங்கம், வெள்ளி, வெண்கலம், நிக்கல் போன்ற பல்வேறு உலோகங்களால் ஆன நாணயங்களைக் குறிக்கிறது.
காகிதப் பணம் மாநில கருவூலம் அல்லது நாட்டின் மத்திய வங்கி வழங்கிய நாணயக் குறிப்புகளைக் கொண்டுள்ளது.
கடன் பணமானது
நவீன பொருளாதார சமூகங்களில், வங்கிச் செயல்பாட்டின் வளர்ச்சியுடன், காகிதப் பணத்துடன், மாற்றத்தக்க பணத்தின் மற்றொரு வடிவம் கடன் பணம் அல்லது வங்கி பணம் வடிவிலும் கடன் அட்டைகளாகவும் உருவாகியுள்ளது. டோக்கன் பணமானது பால், காபி, போன், பஸ், டிரெயின், விளையாட்டு என பல்வேறு வகையிலான டோக்கனும் உபயோகத்தில் உள்ளது என்றார். லிங்கராஜன், முகமது சுபேர், யோகேஷ், சந்திரசேகரன், சுவாமிநாதன், கமலக்கண்ணன், முஹம்மது இஸ்மாயில், இளங்கோவன், வழக்கறிஞர் சித்ரா விஜயகுமார் உட்பட பலர் நிகழ்ச்சியில் பங்கேற்றார்கள். முன்னதாக செயலர் குணசேகரன் வரவேற்க, பொருளாளர் அப்துல் அஜீஸ் நன்றி கூறினார்.

advertisement by google

advertisement by google

advertisement by google

advertisement by google

advertisement by google

advertisement by google
advertisement by google

Related Articles

Back to top button