இந்தியாதமிழகம்தமிழ்நாடு மாவட்டம்பயனுள்ள தகவல்வரலாறு

நாம் மறந்துபோன கிராமத்து “வண்ணார்கள்”

advertisement by google

நாம் மறந்து போன அந்தக் காலக் கிராமத்து வண்ணார்கள்..!

advertisement by google

அந்தக் காலத்தில் சில நாட்களுக்கு ஒருமுறை வண்ணார் வீடு வீடாக வந்து ‘அழுக்கு துணிகளை’ எடுத்துக் கொண்டு போவார்கள்.

advertisement by google

துணிகளையெல்லாம் மூட்டைகளாகக் கட்டி..
கழுதை மேல் சுமத்தி குளத்துக்கோ.. கால்வாய்க்கோ..
ஆற்றுக்கோ வெளுக்க எடுத்துக் கொண்டு போவார்கள்..

advertisement by google

சவக்காரம் போட்டு..
உவர் மண் போட்டு வெள்ளாவி வைத்து வெளுத்து.. வெள்ளைத் துணிகளுக்கு நீலம் முக்கி.. வெயிலில் காயப் போட்டு..

advertisement by google

எல்லா ஜாதி மதத்துக்காரர் துணிகளையும் அள்ளிக் கட்டி கழுதை மேல் வைத்து வீட்டிற்கு எடுத்துக் கொண்டு போவார்கள்..

advertisement by google

அதன் பின் அந்தந்த வீட்டுத் துணிகளை அவற்றில் தான் சோரங்கொட்டை சாற்றால் தயாரித்த..

advertisement by google

‘வண்ணார் மை’யைக் கொண்டு போட்ட குறியைப் பார்த்து
(ஒவ்வொரு வீட்டுத் துணிக்கும் ஒவ்வொரு விதமாகக் குறியீடு போடுவதற்கே ஒரு தனி கோர்ஸ் நடத்தலாம்) தனித்தனியாகப் பிரித்து..
இஸ்திரி போட்டு.. கட்டி.. வீடுகளுக்குப் போய் கொடுப்பார்கள்..

advertisement by google

அதிலும் சில துணிகள் வீடு மாறிப் போனாலும்..
முத்தம்மா இது கவுண்டர் சட்டை..
இது நம்ம தேவர் துணி, இது நாாடார் சட்டை என்று திருப்பி அனுப்புவதும் உண்டு..

இதற்குக் கூலியாக சில வீடுகளில் காசு கொடுப்பார்கள்.. சிலர் தானியம் கொடுப்பார்கள்.. இன்னும் சிலர் வருடத்திற்கு இரண்டு அல்லது மூன்று முறை வரும் விளைச்சலில் இருந்து நெல்.. சோளம்..
பயறு வகைகளைக் கொடுப்பார்கள்..

அந்தக் காலத்தில் கொலைக் குற்றவாளிகள்.. கொலை செய்யப்பட்டவர்கள்..
விபத்தில் இறந்தவர்கள் போன்றவர்களை அடையாளம் காண..
அவர்கள் அணிந்திருக்கும் துணிகளில் இருந்த ‘வண்ணான் குறி’ பயன்பட்டது..

வீடுகளில் ‘வண்ணார் கணக்கு’ எழுதுவதற்கென்றே பழைய நோட்டு ஒன்னு இருக்கும்..

வெள்ளாவி வைத்து வெளுத்த துணிகளுக்கு ஒரு தனி வாசனை உண்டு..

புது புத்தகங்களை உள் பக்கத்தில் முகர்ந்து பார்ப்பதில் கிடைக்கும் ரம்மியமான உணர்வு வெளுத்தத் துணியை உடுத்திருக்கும் போதும் கிடைக்கும்…

இப்போது அந்த வாசனையை இழந்து விட்டோம்..

வீட்டில் சுக துக்கம் எது நடந்தாலும் முதல் ஆளாக இருப்பது நம் வண்ணார்கள் தான்..

சில திருமணங்கள் இவர்கள் பார்த்துத் தான் முடிந்திருக்கும்..

பல வருடப் பகையும் தீர்த்து வைக்கும் நாட்டாமையும் இவர்கள் தான்..

அந்த வீட்டில் கொடுத்த திண்பண்டங்களை இந்த வீட்டுக் குழந்தை பெரியோர்களுக்கு கொடுக்கும் பேருபகாரிகள்..

முக்கியமான விஷயம்..
எப்பேர்ப்பட்ட கோடீஸ்வர
குழந்தைக்கும் முதல் சோறே வண்ணாத்தி பாத்திரச் சோறு தான்..

இதையெல்லாம் தாண்டி..
முத்தாய்ப்பாக..
அந்தந்த ஊர் பெரியவர்கள் வண்டி பூட்டிக் கிளம்பும் போது..

அந்த வீட்டு வண்ணார் தான் தோளில் போடும் துண்டைப் பெரியவர் கையில் கொடுப்பார்..

வெளுக்க வைத்து வெளுக்க வைத்து
வெள்ளை மனம் படைத்த மனிதர் அவரிடம் துண்டு வாங்கிப் போட்டுச் சென்றால் அதிர்ஷ்டம்..
காரிய ஜெயம் என்று ஏட்டில் எழுதாத நம்பிக்கை..!

மொத்தத்தில் நான் சுவாசித்த எனக்கு பிடித்த மறக்க முடியாத மாமனிதர்கள் உறவுகளே..!

advertisement by google

Related Articles

Back to top button