இந்தியாதமிழகம்தமிழ்நாடு மாவட்டம்

தங்கத்திற்கு வரியா?பரபர செய்திகளுக்கு மத்தியநிதிதுறை விளக்கம் ?

advertisement by google

அப்படி எந்த திட்டமும் கிடையாது.. தங்கத்திற்கு வரியா? பரபர செய்திகளுக்கு மத்திய நிதித்துறை விளக்கம்!

advertisement by google

டெல்லி: வீட்டில் இருக்கும் கூடுதல் தங்கத்திற்கு வரி விதிக்கும் கோல்டு அம்னெஸ்டி (gold amnesty scheme) திட்டத்தை கொண்டு வரும் எண்ணம் இல்லை என்று மத்திய அரசு கூறியுள்ளது.

advertisement by google

இந்தியாவில் தங்கம் எப்போதும் உணர்வு ரீதியாக மக்களுடன் பிணைந்து இருப்பது. அந்த மஞ்சள் நிற உலோகம் மக்களுடன் மிகவும் நெருக்கமாக பல காலமாக இருந்து வந்துள்ளது. அதிலும் பெண்களுக்கு உணர்வு ரீதியாக தங்கம் மிக மிக நெருக்கமானது. இதனால் பல போர்கள் நடந்துள்ளது.
இந்தியாவின் பொருளாதாரம் அப்படியே சரிந்து நொறுங்காமல் இருக்க காரணம் உங்கள் அம்மாவும், மனைவியும், சகோதரிகளும் வீட்டில் வைத்து இருக்கும் தங்கம்தான் என்று கூட கூறலாம். தங்கம் அந்த அளவிற்கு இந்தியாவில் மிக முக்கியமானது.

advertisement by google

தங்கம் ஏன்?
அதேபோல் இன்னொரு பக்கம் தங்கம் கருப்பு பணத்தை சேமிக்கவும் உதவும். கணக்கில் வராத பணத்தை பலர் தங்கமாக மாற்றி வீட்டில் சேமித்து வைத்துக் கொள்வது வழக்கம். தங்கத்தில் முதலீடுதான் எப்போதும் பாதுகாப்பாக இருக்கும் என்றும் கூட பலர் சொல்வது உண்டு.

advertisement by google

தங்கம் எப்படி முக்கியம்
இந்த நிலையில்தான் தங்கத்தை வைத்திருப்பது தொடர்பாக மத்திய அரசு திட்டம் ஒன்றை கொண்டு வரப்போகிறது என்று நேற்று செய்திகள் வெளியானது. இந்த திட்டத்திற்கு ஆங்கிலத்தில் கோல்டு அம்னெஸ்டி ஸ்கீம் (gold amnesty scheme) என்ற பெயர். இந்த திட்டம் கிட்டத்தட்ட வருமான வரி திட்டம் போலதான்.

advertisement by google

வரி கட்டவேண்டும்
ஆம் நீங்கள் வைத்திருக்கும் தங்கத்திற்கு கணக்கு காட்ட வேண்டும். எல்லோரும் அவர்கள் வருமானத்திற்கு ஏற்றபடி ஒரு குறிப்பிட்ட அளவுதான் தங்கம் வைத்திருக்க முடியும். அதற்கு மேல் தங்கம் வைத்து இருந்தால் அதற்கு வரி கட்ட வேண்டும். உங்களிடம் பில் இல்லாமல் வாங்கிய தங்கம் இருந்தாலும் வரி கட்ட வேண்டும்.

advertisement by google

எவ்வளவு நகை
அதாவது உங்கள் அம்மா 20 பவுன் நகை வைத்து இருக்கிறார். அரசின் வரையறைப்படி அவர் 10 பவுன்தான் நகை வைத்திருக்க முடியும் என்றால், அதற்கு மேல் இருக்கும் கிராம் நகைக்கு எல்லாம் வரி கட்ட வேண்டும். எவ்வளவு வரி என்று பின்பு கூறப்படும் என்று செய்திகள் நேற்று வெளியானது.

advertisement by google

என்ன மாற்றம் வரும்
இதன் மூலம் கருப்பு பணம் ஒழியும் என்று பலரும் கூறினார்கள். அதேபோல் பணமதிப்பிழப்பு நடவடிக்கைக்கு பிறகு இந்த நடவடிக்கை மிக முக்கியமானதாக இருக்க போகிறது. இதனால் பெரிய பொருளாதார மாற்றம் நடக்கும் என்றும் கூறினார்கள்.

கடும் எதிர்ப்பு
இதற்கு பலரும் கடுமையாக எதிர்ப்பு தெரிவித்தனர். இந்தியாவில் 20000 டன் தங்கத்திற்கு மேல் இருக்கிறது. இதை எப்படி வரி போட்டு ஒழுங்குபடுத்துவார்கள். வீட்டில் உள்ள நகைக்கு, பரம்பரை நகைக்கு எல்லாம் எப்படி கணக்கு சொல்வது. பரம்பரை சீராக வரும் நகைக்கு யார் பில் கொடுப்பது என்று பலரும் கேள்வி எழுப்ப தொடங்கினார்கள்.

அறிவிப்பு
பெரும்பாலான மக்களின் வாழ்க்கையை இந்த அறிவிப்பு மொத்தமாக குலைக்கும் என்று கருத்துக்கள் வெளியானது. இந்த நிலையில் தற்போது மத்திய அரசு இது தொடர்பாக விளக்கம் கொடுத்துள்ளது. இப்படி எந்த திட்டத்தையும் கொண்டு வரும் நோக்கம் இல்லை என்று கூறியுள்ளது.

புரளியாம்
இது தொடர்பாக நிதித்துறை அளித்துள்ள விளக்கத்தில், எங்களுக்கு தங்கம் தொடர்பாக வரி விதிக்கும் திட்டம் கொண்டு வரும் எண்ணம் இல்லை. இது புரளி. பட்ஜெட் தாக்கல் விரைவில் நடக்க உள்ளதால் செய்திகளில் இப்படி பொய்யான செய்திகள் வெளிவந்த வண்ணம் இருக்கிறது என்று விளக்கம் அளிக்கப்பட்டு இருக்கிறது

advertisement by google

Related Articles

Back to top button