இந்தியாதமிழகம்தமிழ்நாடு மாவட்டம்

நிர்மலாதேவி பேயாட்டம்? வீட்டுபொருட்களையும்,கார்கண்ணாடியையும் உடைத்தார் பரபரப்பு

advertisement by google

advertisement by google

தன் வீட்டில் இருக்கும் பொருட்களை எல்லாம் தூக்கி தெருவில் எறிந்தார் நிர்மலாதேவி.. அக்கம் பக்கத்து வீட்டு கார் கண்ணாடிகளையும் அடித்து நொறுக்கிவிட்டு.. வீட்டுக்குள் போய் கதவை உள்பக்கமாக தாழ்ப்பாள் போட்டுக் கொண்டுள்ளார்

advertisement by google

இதையடுத்து அங்கு பரபரப்பு ஏற்பட்டுள்ளது.

advertisement by google

கல்லூரி மாணவிகளை தவறான பாதைக்கு அழைத்ததாக தொடரப்பட்ட வழக்கு ஸ்ரீவில்லிபுத்தூர் கோர்ட்டில் நடந்து வருகிறது. இது சம்பந்தமாக நிர்மலாதேவி ஜாமீனில் வெளியே வந்தாலும், வழக்கு விசாரணைக்காக அவ்வப்போது ஸ்ரீவில்லிப்புத்தூர் கோர்ட்டில் ஆஜராகி வருகிறார்.சில சமயங்களில் திடீரென தனக்கு தானே பேசி கொண்டார்… தலைமுடியை வெட்டி கீழேபோட்டார்.. தலைவிரி கோலமாக தர்காவுக்குள் நுழைந்து உளறி கொட்டினார்.. இதையடுத்து இவருக்கு மனநல பாதிப்பு உள்ளதாக கூறப்பட்டு, அதற்கான நெல்லையில் ஒரு தனியார் ஆஸ்பத்திரியில் சிகிச்சையும் அளிக்கப்பட்டு வருவதாக இவரது வக்கீல் தெரிவித்திருந்தார். இதனிடையே ஜாமீனில் நிர்மலாதேவி வெளியே வந்தாலும், அவரை குடும்பத்தினர் கைவிட்டுவிட்டனர். அதனால்தான், அருப்புக்கோட்டை அருகே உள்ள ஆத்திப்பட்டி காவியன் நகரில் ஒரு வீடு எடுத்து இவர் தனியாக வசித்து வருகிறார்.இந்நிலையில், இன்று காலை திடீரென மனநலம் பாதிக்கப்பட்டது போல் இருந்திருக்கிறார் நிர்மலாதேவி, சிறிதுநேரத்தில் வீட்டில் இருந்த பாத்திரங்களை தூக்கி ரோட்டி வீசினார். அதேபோல, சேர்களையும் எடுத்து வீசினார். தெருவில் வந்து அங்கிருந்து கற்களை எடுத்து, எதிர்வீட்டுக்காரரின் கார் கண்ணாடி மீது தூக்கி போட்டார். இதில், கார் கண்ணாடி சுக்குநூறாக உடைந்து நொறுங்கியது. தெருவுக்குள் டமால், டிமீல் என்று சத்தம் கேட்ட அக்கம்பக்கத்தினர் விரைந்து வந்து பார்த்தபோதுதான் நிர்மலாதேவி ஆவேசத்தின் உச்சத்தில் இருந்தது தெரியவந்தது. இதை கண்டு அதிர்ச்சி அடைந்த அவர்கள், உடனே தாலுகா போலீசாருக்கு தகவலை சொல்லவும் அவர்கள் விரைந்து வந்து விசாரணை நடத்தினர்.இதையடுத்து, நிர்மலாதேவியின் அண்ணனுக்கு தகவல் தெரிவிக்கப்பட்டு அவரும் வந்தார். பிறகு, போலீசாரும், நிர்மலாதேவியின் அண்ணனும் வீட்டிற்குள் இருந்த நிர்மலாதேவியை அழைத்தனர். ஆனால் கதவை அவர் திறக்கவே இல்லை. தங்கையை ரொம்ப நேரமாக கூப்பிட்டு கூப்பிட்டு பார்த்த அண்ணன், அவர் வராததால் திரும்பி சென்றுவிட்டார்.இப்போது வீட்டின் முன்பு போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது. இருந்தாலும் என்ன, ஏதென்று விசாரிக்கலாம் என்றால்கூட நிர்மலாதேவி கதவை திறந்து கொண்டு வெளியே வந்தால்தான் முடியும் என்கிறார்கள்.

advertisement by google

advertisement by google

advertisement by google

advertisement by google
advertisement by google

Related Articles

Back to top button