இந்தியாஉலக செய்திகள்

இந்தியர்களின் தகவல்கள் திருட்டு? கூகுள் அதிர்ச்சி தகவல்?பல நாடுகளில் அரசு ஆதரவுடன் திருட்டு?

advertisement by google

ஹேக்கர்கள் செயல்பாட்டால் அனைவரும் இணையதளத்தில் கவனமாக செயல்பட வேண்டும் எனவும் குறிப்பாக பெண்கள் பாதுகாப்புடன் இணையத்தை பயன்படுத்த வேண்டும் எனவும் பல்வேறு தரப்பினரும் எச்சரிக்கை விடுத்து வருகின்றனர். இந்த நிலையில் கூகுள் வெளியிட்ட அறிக்கை அனைவருக்கும் கவலை அளிக்கும் விதமாக இருக்கிறது.

advertisement by google

12,000 பயனர்கள் அரசு ஆதரவுடன் ஹேக்
சமீபத்தில், கூகிளின் அச்சுறுத்தல் பகுப்பாய்வுக் குழு (TAG) உலகெங்கிலும் உள்ள 12,000 க்கும் மேற்பட்ட பயனர்கள், அரசாங்க ஆதரவுடைய தரவு ஹேக் செய்திருப்பதாக எச்சரித்துள்ளது.

advertisement by google

இந்தியாவில் 500 பேர் ஹேக்
இதில் கவனிக்க வேண்டியது என்னவென்றால் இந்தியாவில் 500 பேர் அதில் இடம்பெற்றுள்ளனர். இந்த ஆண்டு ஜூலை முதல் செப்டம்பர் வரையிலான கணக்குகளில் மட்டும் 500 இந்தியர்களின் ரகசிய தகவல் திருடப்பட்டிருப்பதாக தெரிவித்துள்ளது.

advertisement by google

149 மேற்பட்ட நாடுகளில் உள்ளவர்கள் ஹேக்
அரசாங்க ஆதரவுடன் ஃபிஷிங் முயற்சியால் 149-க்கும் மேற்பட்ட நாடுகளில் உள்ளவர்களின் விவரங்கள் திருடப்பட்டிருப்பதாகவும் இந்த அறிக்கை தெரிவித்துள்ளது. இதன் முதன்மை நோக்கம் தனிப்பட்ட தரவு, அறிவுசார் சொத்துக்கள், அரசாங்கத்திற்கு எதிராக நிற்க முயற்சிக்கும் நபர்களை குறிவைத்து ஹேக் செய்யப்பட்டுள்ளது.

advertisement by google

அனைவரும் அரசு உதவியுடன் ஹேக்கிங்:
அதேபோல் 149 நாடுகளில் உள்ள அரசு உதவியுடன் ஹேக் செய்யப்பட்டிருப்பதாக அறிக்கை தெரிவித்துள்ளது. மேலும் இந்த அறிக்கையில், பாதிப்புக்கு உள்ளானவர்கள் அந்த நாட்டு அரசினாலே ஹேக் செய்யப்பட்டார்களா அல்லது வேறு நாட்டு அரசால் ஹேக் செய்யப்பட்டார்கள் என்பது தெரியவில்லை என கூகுள் குறிப்பிட்டுள்ளது.

advertisement by google

யார்யாரெல்லாம் ஹேக் செய்யப்படுகிறார்கள்
ஊடகவியலாளர்கள், மனித உரிமை ஆர்வலர்கள் மற்றும் அரசியல் பிரச்சாரங்கள் போன்ற பயனர்களை தங்களது ஏபிபி-ல் சேர வேண்டும் பரிந்துரைக்கப்படுகிறது. இது ஃபிஷிங்கிற்கு எதிராக கிடைக்கக்கூடிய வலுவான பாதுகாப்புகளை வழங்குகிறது. இதில் 90 சதவீதத்திற்கும் அதிகமானோர்கள் ஃபிஷிங் மின்னஞ்சல் மூலம் ஹேக் செய்யப்பட்டுள்ளார்கள்.

advertisement by google

ஃபிஷிங் என்றால் என்ன
ஃபிஷிங் என்பது ஒருவரின் தனிப்பட்ட தகவல்களை யாரோ ஒருவர் போன் திருடுவதாகும். அதாவது யாரோ ஒருவர் தங்களது மெயில் ஐடிக்கு மெயில் அனுப்பப்படும் அதன்மூலம் தங்களது தரவுகள் ஹேக் செய்யப்பட்டு அதற்கான வேலை முழுவதும் தொடங்கிவிடும்.

advertisement by google

அறிவிப்பில்லாத இணையப்போர் தொடக்கமா?
ஹேக்கர்கள் தனிநபர் தரவை டார்க் வெப்பில் விற்று பணம் சம்பாதிக்கவும், அல்லது ஒரு பயணரை தொந்தரவு செய்வதற்கும், இதுபோன்ற செயலில் ஈடுபடுகிறார்கள். ஆனால் இப்போது தேசிய அரசுகளின் ஆதரவுடன் ஹேக்கர்கள், அறிவிப்பில்லாத இணையப் போரை நடத்தி வருகின்றனர்.

advertisement by google

Related Articles

Back to top button