இந்தியா

பணமதிப்பிழப்பு ஜிஎஸ்டி குளறுபடியால் தீபாவளி களையிழந்தது சிவசேனா கட்சி குற்றச்சாட்டு

advertisement by google

பணமதிப்பிழப்பு மற்றும் ஜிஎஸ்டி குளறுபடி போன்ற காரணங்களால் தீபாவளிப் பண்டிகை களையிழந்துக் காணப்பட்டதாக சிவசேனா கட்சி தெரிவித்துள்ளது.

advertisement by google

அக்கட்சியின் அதிகாரபூர்வ நாளேட்டில் வெளியான கட்டுரையில் இவ்வாறு கூறப்பட்டுள்ளது.

advertisement by google

பொருளாதார மந்தநிலை நாடு முழுவதும் காணப்படுவதாக சிவசேனா சுட்டிக் காட்டியுள்ளது.

advertisement by google

பட்டாசுகள் வாங்குவதற்கு காணப்படும் உற்சாகம் கடைகளில் இல்லை என்று அக்கட்சி தெரிவித்துள்ளது.

advertisement by google

பொருளாதாரம் மந்தம் அடைந்ததால் சந்தையில் 40% வரை விற்பனை குறைந்து காணப்பட்டதாக சிவசேனா கூறியுள்ளது. 

advertisement by google

மராட்டியத் தேர்தல் களம்  கூட உற்சாகமின்றி இருந்ததாக அக்கட்சி தெரிவித்துள்ளது. இது போன்று அனைத்திலும் உற்சாகம் குறைந்து அமைதி நிலவி வருவதாக அக்கட்சி தெரிவித்துள்ளது.  மத்தியில் ஆளும் பாரதிய ஜனதா கூட்டணி தவறான கொள்கை முடிவு எடுத்ததே பிரச்சனைக்குக் காரணம் என்பதை சிவசேனா மறைமுகமாகக் கூறியுள்ளது. மராட்டியத்தில் ஆட்சி அமைப்பதில் இழுபறி நீடிக்கும் நிலையில், பாரதிய ஜனதாவை விமர்சித்து சிவசேனா கட்சி கட்டுரை வெளியிட்டு இருப்பது  அரசியல் அரங்குகளில் சலசலப்பை ஏற்படுத்தியுள்ளது. 

advertisement by google

advertisement by google
advertisement by google

Related Articles

Back to top button