தமிழகம்தமிழ்நாடு மாவட்டம்மருத்துவம்

டெங்குகொசு வளர்த்த அரசு அலுவலகத்திற்கு நோட்டீஸ்

advertisement by google

♦டெங்கு கொசு வளர்த்த அரசு அலுவலகத்துக்கு நோட்டீஸ்…

advertisement by google

?2000 டயர்களில், கொசு உற்பத்தியை ஊக்குவித்ததற்காக அரசுப் போக்குவரத்து மண்டல அலுவலகத்திற்கு மாவட்ட நிர்வாகம் அனுப்பி நடவடிக்கை மேற்கொண்டது.

advertisement by google

?தமிழகத்தில் பல்வேறு பகுதிகளில் டெங்கு காய்ச்சல் பொதுமக்களை அச்சுறுத்தி வருகின்றது. தமிழகம் முழுவதும் இதுவரை 20 க்கும் மேற்பட்டோர் கடந்த சில நாட்களில் டெங்கு காய்ச்சலால் பலியாகி உள்ளனர்.

advertisement by google

?அதே சமயம் வேலூர் மாவட்டத்தில் மட்டும் இன்றுவரை 6 பேர் காய்ச்சலுக்கு பலியாகி உள்ளனர். டெங்கு காய்ச்சல் வேகமாக பரவி வருவதால் இதனை தடுக்க முடியாமல் சுகாதாரத்துறை அதிகாரிகள் திணறி வருகின்றனர்.

advertisement by google

?அதிகாரிகள் மாநிலம் முழுவதும் ஆய்வு நடத்தி டெங்கு கொசு உற்பத்தியாகும் இடங்களுக்கு அபராதம் விதித்து வருகின்றனர்.

advertisement by google

?இதேபோல் வேலூரில் சிவக்குமார் ( வேலூர் மாநகராட்சி 2வது மண்டல சுகாதார அலுவலர் ) தலைமையிலான குழுவினர், ரங்காபுரம் சுற்று வட்டாரப் பகுதியில் இன்று ஆய்வு நடத்தினர்.

advertisement by google

?இந்நிலையில், அரசு போக்குவரத்து மண்டல அலுவலகத்தில் 2000 பஸ் டயர்கள் திறந்தவெளியில் வைக்கப்பட்டிருந்தன. இதில் தேங்கும் மழைநீரில் டெங்கு கொசு உற்பத்தியாவது கண்டறியப் பட்டது.

advertisement by google

?இதனையடுத்து போக்குவரத்துக் கழக அதிகாரிகளிடம் மாநகராட்சி அதிகாரிகள் நோட்டீஸ் வழங்கினர். மேலும் உடனடியாக அவற்றை சுத்தம் செய்து சுகாதார பணிகள் மேற்கொள்ளவும் அறிவுறுத்தப்பட்டது.

advertisement by google

Related Articles

Back to top button