இந்தியா

சோனியாகாந்தியை செத்த எலியுடன் ஒப்பிட்டு பேசிய அரியானாமுதல்வர் மனோகர்லால்கட்டார்

advertisement by google

சோனியா காந்தியை செத்த எலியுடன் ஒப்பிட்டு பேசிய அரியானா முதல் மந்திரி மன்னிப்பு கேட்க வேண்டும் என காங்கிரஸ் கட்சி வலியுறுத்தியுள்ளது

advertisement by google

அரியானாவில் முதல் மந்திரி மனோகர் லால் கட்டார் தலைமையிலான பா.ஜ.க. ஆட்சி நடந்து வருகிறது. அங்கு வருகிற 21ந்தேதி சட்டசபை தேர்தல் நடைபெற உள்ளது. அதன் வாக்கு எண்ணிக்கை 24ந்தேதி நடைபெறும்.தேர்தலை முன்னிட்டு அரசியல் கட்சிகள் பிரசாரங்களில் ஈடுபட்டு வருகின்றன. இதில் சோனிபத் நகர் அருகே கர்கோடா என்ற இடத்தில் நடந்த பேரணி ஒன்றில் கட்டார் கலந்து கொண்டார். அவர் பேசும்பொழுது, எதிர்க்கட்சி தலைவர் பதவியில் இருந்து ராகுல் காந்தி விலகிய பின், கட்சிக்கு வெளியே இருந்து வேறு ஒருவரை தேர்வு செய்ய அக்கட்சி 3 மாதங்கள் முயன்றது.வாரிசு அரசியலில் இருந்து அவர்கள் விலகுகின்றனர். இது ஒரு நல்ல விசயம் என நாங்கள் நினைத்தோம். ஆனால் இறுதியில் காங்கிரஸ் கட்சி சோனியா காந்தியை தேர்வு செய்தது என பேசினார்.அக்கட்சியின் இடைக்கால தலைவராக சோனியா காந்தி நியமிக்கப்பட்ட விசயத்தினை குறிப்பிடும் வகையில் கட்டார் பேசியுள்ளார்.அதே காந்தி குடும்பம் மீண்டும் வந்துள்ளது என பேசிய அவர், பெரிய முயற்சி ஆனால் சிறிய லாபம் என்று அர்த்தம் வரும் வகையில் இந்தியில், கோடா பஹத், நிக்லீ சுஹியா என்ற பழமொழியை கூறினார்.இதற்கு, ஒரு மலையை தோண்டியதில், அங்கு எலி கிடைத்துள்ளது என சரியாக பொருள்படும். தொடர்ந்து அவர், அதுவும் இறந்த ஒன்று என செத்த எலியை குறிப்பிடும் வகையில் கூறினார்.அவரது இந்த பேச்சு காங்கிரஸ் கட்சியினரிடையே சர்ச்சையை ஏற்படுத்தி உள்ளது. இதற்கு கண்டனம் தெரிவித்ததுடன், உடனடியாக மன்னிப்பு கேட்க வேண்டும் என்று காங்கிரஸ் கட்சி வலியுறுத்தி உள்ளது.முதல் மந்திரி கட்டாரின் பெண்களை பாதுகாப்போம் என்ற கோஷம் தோல்வி அடைந்து உள்ளது. நாட்டில் அதிக குற்றங்கள் நடக்கும் 4வது நகரம் என்ற இடத்தில் அரியானா உள்ளது என்று குற்றச்சாட்டு தெரிவித்து உள்ளது.ஒரு முதல் மந்திரியின் இந்த பேச்சு முறையற்றது. பா.ஜ.க.வின் பெண்களுக்கு எதிரான போக்கையே இது காட்டுகிறது என்றும் டுவிட்டரில் அவரை சாடியுள்ளது.

advertisement by google

advertisement by google

advertisement by google

advertisement by google

advertisement by google

advertisement by google
advertisement by google

Related Articles

Back to top button