இந்தியா

அயோத்தி ராமர் கோவில் தினமும் ஒரு மணி நேரம் அடைக்கப்படும், அக்கோவிலின் தலைமை அர்ச்சகர் தெரிவிப்பு

advertisement by google

அயோத்தி : அயோத்தி ராமர் கோவில், தினமும் நண்பகல் நேரத்தில் ஒரு மணி நேரம் அடைக்கப்படும் என, அக்கோவிலின் தலைமை அர்ச்சகர் தெரிவித்துள்ளார்.

advertisement by google

உத்தர பிரதேசம் மாநிலம் அயோத்தியில் பிரமாண்ட ராமர் கோவில் கட்டமைக்கப்பட்டு, கடந்த மாதம் 22ம் தேதி கும்பாபிஷேகம் நடந்தது. பக்தர்கள் தரிசனம் மேற்கொள்ளவும் அனுமதிக்கப் பட்டது.தினமும் ஆயிரக்கணக்கான பக்தர்கள் தரிசனம் செய்து வரும் நிலையில், கூட்டத்தை கட்டுப்படுத்த கோவில் வளாகத்தில் மத்திய படையினர் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்த பட்டு உள்ளனர்.

advertisement by google

உள்நாட்டில் மட்டுமின்றி வெளிநாடுகளில் இருந்தும் தரிசனம் மேற்கொள்ள ராமர் கோவிலுக்கு பக்தர்கள் வருகை புரிகின்றனர். பக்தர்கள் எண்ணிக்கை தொடர்ந்து அதிகரித்து வருவதை கருத்தில் வைத்து, தரிசன நேரத்தை காலை 6:00 மணி முதல் இரவு 10:00 மணி வரை, கோவில் நிர்வாகம் சமீபத்தில் அதிகரித்தது.இதற்கிடையே, அயோத்தி ராமர் கோவில் தினமும் நண்பகல் 12:30 மணி முதல் 01:30 மணி வரை, ஒரு மணி நேரம் அடைக்கப்படும் என அறிவிக்கப்பட்டு உள்ளது.

advertisement by google

இதுகுறித்து அக்கோவிலின் தலைமை அர்ச்சகர் சத்யேந்திர தாஸ் கூறுகையில், ”அயோத்தி கோவிலில் பிரதிஷ்டை செய்யப்பட்டுள்ள குழந்தை ராமருக்கு, 5 வயது தான் ஆகிறது.

advertisement by google

”எனவே, அவர் இளைப்பாறுவதற்காக சிறிது ஓய்வு தேவைப்படுகிறது. இதை கருத்தில் வைத்து, கோவில் நிர்வாகம் சார்பில் நண்பகலில் ஒரு மணி நேரம் அடைக்க உத்தரவிட்டுஉள்ளனர்,” என்றார்.

advertisement by google

advertisement by google

advertisement by google
advertisement by google

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button