தமிழகம்

வெள்ளத்தில் சிக்கிய 50 ஆம்னி பஸ்கள்?குழந்தைகளுடன் உணவு இல்லாமல் தவித்தோம்-குலசேகபட்டினம் பெண் பயணி நந்தினி கருத்து

advertisement by google

ஆம்னி பஸ்சில் சிக்கி தவித்த பெண் பயணி நந்தினி கூறியதாவது:-நான் கடந்த 18-ந் தேதி சென்னையில் இருந்து எனது 2 குழந்தைகளுடன் ஆம்னி பஸ்கள் சொந்த ஊரான குலசேகரபட்டினத்திற்கு புறப்பட்டு சென்றேன். 19-ந் தேதி காலை தூத்துக்குடி வந்தபோது மழை வெள்ளத்தால் ஊரே தத்தளித்து கொண்டிருந்தது. வெள்ளத்தில் மிதந்தபடி நாங்கள் வந்த பஸ் சிரமத்திற்கு இடையே மாற்று வழியில் ஏரல் அருகே உள்ள தென் திருப்பேரை வந்தது. அங்கு வெள்ளப்பெருக்கு ஏற்பட்டதால் பஸ் போக்கு வரத்து நிறுத்தப்பட்டது. எங்களை பின் தொடர்ந்து வந்த சுமார் 25 ஆம்னி பஸ்கள் வரிசையாக அங்கேயே நிறுத்தப்பட்டன. சுமார் 500 பேர் என்ன செய்வதென்று தெரியாமல் குழந்தைகளுடன் பரிதவித்தோம். 19-ந் தேதி மதியம் தென் திருப்பேரை பேரூராட்சியில் உணவு கொடுத்தனர். பின்னர் யாரும் கண்டு கொள்ளவில்லை. சாப்பாடு மற்றும் செல்போன் இணைப்பு கிடைக்காமல் மின்சாரமும் இல்லாத இடத்தில் இரவு முழுவதும் தவித்து வந்தோம். யாரையும் தொடர்பு கொள்ள முடியவில்லை. நேற்று (20-ந் தேதி) தகவலறிந்து ஹெலிகாப்டர் மூலம் எங்களுக்கு உணவு பொட்டலங்களை வீசினர். அதில் பொட்டலங்கள் மழை வெள்ளத்தில் விழுந்தன. என்ன செய்வதென்று தெரியாமல் எப்போது சொந்த ஊருக்கு செல்வோம் என வெள்ளத்தில் காத்திருத்தோம். வெள்ளம் வடிந்து வரும் நிலையில் இன்று காலை 7 மணிக்கு சில பஸ்களில் அனைவரையும் ஒன்றாக ஏற்றி நாசரேத்துக்கு அழைத்து வந்தனர். பின்னர் அங்கிருந்து அவரவர் சொந்த ஊர்களுக்கு வந்து சேர்ந்தோம். 3 நாட்களுக்கு பிறகு உயிர் தப்பி விட்டோம் என்ற நிம்மதியும் மகிழ்ச்சியும் உள்ளது என்று அவர் கூறினார்.

advertisement by google

advertisement by google

advertisement by google

advertisement by google

advertisement by google

advertisement by google

advertisement by google
advertisement by google

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button