t

தமிழ்நாட்டிலுள்ள தென்னிந்திய நடிகர் சங்கக் கட்டடம் கட்ட : ரூ.40 கோடி கடன் பெறவும், நிதி திரட்ட தீர்மானம்

advertisement by google

நடிகர் சங்கக் கட்டடம் கட்டுவதற்கு ரூ.40 கோடி கடன் பெற தீர்மானம் நிறைவேற்றியுள்ளனர்.

advertisement by google

தென்னிந்திய நடிகர் சங்கத்தின் 67 வது பொதுக்குழு கூட்டம் தலைவர் நாசர் தலைமையில் சென்னை தேனாம்பேட்டை காமராஜர் அரங்க வளாகத்தில் இன்று நடைபெற்றது. பொதுச்செயலாளர் விஷால், பொருளாளர் கார்த்தி உள்ளிட்ட நடிகர் சங்க உறுப்பினர்கள் 1000க்கும் மேற்பட்டோர் பங்கேற்றனர்.

advertisement by google

கூட்டத்திற்கு பிறகு நாசர், விஷால், கார்த்தி உள்ளிட்டோர் கூட்டாக செய்தியாளர்களுக்கு அளித்த பேட்டியில், நடிகர் சங்கத் தேர்தல்லி நாங்கள் அளித்த பல வாக்குறுதிகளை நிறைவேற்றியுள்ளோம். நடிகர் சங்கக் கட்டடம் கட்ட பொதுக்குழுவில் ஒப்புதல் கொடுத்துள்ளார்கள்.

advertisement by google

நடிகர் சங்கக் கட்டடம் கட்டுவதற்கு ரூ.40 கோடி கடன் பெற தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது. நடிகர் சங்கத்தின் அடுத்த பொதுக்குழு புதிய கட்டடத்தில் நடைபெறும். நடிகர் சங்க கட்டடம் கட்ட சட்டரீதியாக எந்தத் தடையும் இல்லை. நடிகர் சங்கக் கட்டடம் கட்ட வங்கியில்தான் கடன் பெறவுள்ளோம்.

advertisement by google

கட்டடம் கட்ட பெரிய நடிகர்களிடம் நிதி கேட்க முடிவு செய்துள்ளோம். அடுத்த ஓராண்டுக்குள் கண்டிப்பாக நடிகர் சங்க கட்டிடம் கட்டப்படும் என நம்புகிறோம். இவ்வாறு அவர்கள் தெரிவித்தனர்.

advertisement by google

advertisement by google

advertisement by google
advertisement by google

Related Articles

Back to top button