t

நீதி வென்றுள்ளது..! ராகுல் காந்தியின் தண்டனை நிறுத்தி வைப்புக்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வரவேற்பு, ராகுல்காந்திக்கு மீண்டும் மக்களவை உறுப்பினர் பதவி: சபாநாயகரிடம் காங்கிரஸ் தலைவர் வலியுறுத்தல்

advertisement by google

காங்கிரஸ் கட்சியின் முன்னாள் தலைவரும், முன்னாள் எம்.பி.யுமான ராகுல் காந்தி தேர்தல் பிரசாரத்தின்போது மோடி குடும்ப பெயரை பயன்படுத்தியதாக சூரத் நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது. இந்த வழக்கில் இரண்டு ஆண்டுகள் தண்டனை வழங்கப்பட்டது.தண்டனை வழங்கப்பட்டதும் பாராளுமன்ற மக்களவை செயலகம் ராகுல் காந்தியை எம்.பி. பதவியில் இருந்து நீக்கி உத்தரவிட்டது. மேலும், அதற்கான உத்தரவு நகலை குடியரசுத் தலைவர் மற்றும் தேர்தல் ஆணையத்திற்கு அனுப்பி வைத்திருந்தது.இந்த நிலையில், உச்சநீதிமன்றம் ராகுல் காந்தியின் சிறைத்தண்டனையை நிறுத்தி வைத்துள்ளது. இதனால், அவரை பதவி நீக்கம் செய்த உத்தரவை திரும்பப்பெற வேண்டும் என்று காங்கிரஸ் தலைவர் ஆதிர் ரஞ்சன் சவுத்ரி சபாநாயகர் ஓம் பிர்லாவை சந்தித்து வலியுறுத்தியுள்ளார்.மேலும், உச்சநீதிமன்றத்தின் தீர்ப்பு உண்மைக்கான வெற்றி. உண்மை வெற்றிபெறும் என்பதை நாங்கள் எப்போதுமே நம்புவோம்” என்றார்.

advertisement by google

அவதூறு வழக்கில் ராகுல் காந்தியின் 2 ஆண்டு சிறை தண்டனையை நிறுத்தி வைத்து உச்ச நீதிமன்றம் தீர்ப்பு அளித்துள்ளது.இதற்கு வரவேற்பு அளித்து முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தனது டுவிட்டர் பக்கத்தில் பதிவு ஒன்றை வெளியட்டுள்ளார்.அந்த பதிவில் கூறப்பட்டுள்ளதாவது:-நீதி வென்றுள்ளது..! ராகுல் காந்தியை வயநாடு தக்கவைக்கிறது..!ராகுல் காந்தியின் தண்டனையை நிறுத்தி வைத்த உச்சநீதிமன்றத்தின் தீர்ப்பை வரவேற்கிறோம்.குற்றவியல் அவதூறு வழக்கில் இந்த முடிவு, நீதித்துறையின் வலிமை, ஜனநாயக விழுமியங்களைப் பாதுகாப்பதன் முக்கியத்துவம் ஆகியவற்றின் மீதான நமது நம்பிக்கையை இந்த தீர்ப்பு மீண்டும் உறுதிப்படுத்துகிறது.இவ்வாறு அதில் குறிப்பிடப்பட்டுள்ளது

advertisement by google

advertisement by google

advertisement by google

advertisement by google

advertisement by google

advertisement by google
advertisement by google

Related Articles

Back to top button