இந்தியாதமிழகம்தமிழ்நாடு மாவட்டம்

சசிகலா நல்லாருக்கார்னா.. எதுக்கு ஐசியூவில் சேர்த்தீங்க.. தமிழ்நாடு பார்வர்டுபிளாக்கட்சி பொதுச் செயலாளர் கணேசன் சரமாரி கேள்வி✍️முழுவிவரம் -விண்மீன்நியூஸ்

advertisement by google

“சசிகலா நல்லாருக்கார்னா.. எதுக்கு ஐசியூவில் சேர்த்தீங்க.. கணேசன் சரமாரி கேள்வி

advertisement by google

சிகிச்சை முடிந்து நலமுடன் இருக்கிறார் என்று சொல்லி, சிறைத்துறைக்கு அழைத்து செல்லப்பட்டு, மறுபடியும் அடுத்த ஒரு மணி நேரத்தில் ஐசியூவில் எதற்காக சசிகலாவை சேர்க்க வேண்டும்? தமிழகத்தின் ஆகப் பெரும் அரசியல் ஆளுமையாக விளங்கும் சசிகலாவுக்கு அளிக்கப்படும் சிகிச்சையில் வெளிப்படை தன்மை வேண்டும்” என்று தமிழ்நாடு பார்வர்டு பிளாக் கட்சி வலியுறுத்தி உள்ளது.

advertisement by google

தமிழ்நாடு பார்வர்டு பிளாக் கட்சி ஒரு கோரிக்கையை விடுத்துள்ளது.. அதன் பொதுச் செயலாளர் டி. கணேசன் இது சம்பந்தமாக ஒரு அறிக்கையும் வெளியிட்டுள்ளார். அந்த அறிக்கையில் உள்ளதாவது:

advertisement by google

தமிழகத்தின் ஆகப் பெரும் அரசியல் ஆளுமையாக விளங்கும் சசிகலா அவர்களுக்கு அளிக்கப்படும் சிகிச்சையில் வெளிப்படை தன்மை வேண்டும் என தமிழ்நாடு பார்வர்டு பிளாக் சார்பாக வலியுறுத்துகிறேன். மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு 12 மணி நேரமாகியும் அவருக்கு சிடி ஸ்கேன் எடுக்கப்படவில்லை என வரும் தகவல் அதிர்ச்சியையும் வியப்பையும் அளிக்கிறது.

advertisement by google

வரும் 27ஆம் தேதி விடுதலையாகி தமிழகம் வரவுள்ள நிலையில் அவரது உடல் நிலையில் சிறைத்துறை கவனம் செலுத்தாது வேதனை அளிக்கிறது. கடந்த 7 நாட்களாக அவருக்கு காய்ச்சல் உள்ளிட்ட தொந்தரவுகள் இருந்தும் அதனை அவரது உறவினர்கள், வழக்கறிஞர்களிடம் தெரிவிக்காதது ஏன்…?

advertisement by google

சிகிச்சை முடிந்து நலமுடன் உள்ளார் என்று கூறி சிறைத்துறைக்கு அழைத்து செல்லப்பட்டு, அடுத்த ஒரு மணி நேரத்தில் மீண்டும் மருத்துவமனைக்கு அழைத்து சென்று தீவிர சிகிச்சை பிரிவில் சேர்க்க காரணம் என்ன…? என்ற கேள்வி எழுப்பாமல் இருக்க முடியவில்லை.

advertisement by google

எனவே ஒட்டுமொத்த தமிழகமும் அவரது வருகையை எதிர்நோக்கி காத்திருக்கிறது என்பதை புரிந்துக் கொண்டு, அவருக்கு அளிக்கப்படும் சிகிச்சையில் வெளிப்படைத் தன்மை வேண்டும். தமிழக மக்களுக்கு தெரிவிக்கும் வகையில் அவ்வப்போது மருத்துவ அறிக்கைகளை வெளியிட வேண்டும் என கேட்டுக் கொள்கிறேன்.. பூரண நலம் பெற்று சின்னம்மா தமிழகம் வர இறைவனை வேண்டுக் கொள்கிறேன். அவரை வரவேற்க தமிழக மக்களும், தமிழ்நாடு பார்வர்டு பிளாக் தொண்டர்களும் காத்திருக்கிறோம்” என்று குறிப்பிட்டுள்ளார்

advertisement by google
advertisement by google

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button