பயனுள்ள தகவல்மருத்துவம்விவசாயம்

எள்ளு உயிர் காக்கும் உணவு

advertisement by google

எண்ணற்ற நன்மை தரும் எள்.

advertisement by google

*எள்ளு- உயிர் காக்கும் நண்பன்..!

advertisement by google

எள்ளை உணவில் சேர்த்து கொள்வதால் ஏராளமான நன்மைகள் கிடைக்கும்.

advertisement by google

?????????

advertisement by google

எள்ளுமிட்டாய் சின்ன வயசுலயே எள்ளை அதிகம் விரும்பி சாப்பிட்டிருப்போம். பொதுவாகவே இந்த எள்ளுருண்ட சாப்பிட்ட காலம் எத்தன பேருக்கு ஞாபகம் இருக்குதுனு தெரியல. ஆனா, இத சாப்பிட்டதுனால வகை வகையான நோய்களில் இருந்து தப்பிச்சிகிட்டோம்னு சொல்லலாம்.
ஆமாங்க, இந்த எள்ளுக்குள்ள எவ்வளவு அற்புதங்கள் இருக்குனு தெரிஞ்சால் நீங்க இனி இத விட்டு வைக்க மாட்டீங்க..! முக்கியமாக, எள்ளு சாப்பிடறதலா புற்றநோய் வராமல்இருக்குமாம். அது மட்டுமில்லாம, புற்றுநோய் வந்தவருக்கும் இது அருமருந்தாக இருக்கும்னு இப்போதைய ஆராய்ச்சியில் கண்டு பிடிச்சிருக்காங்க..!

advertisement by google

முன்னோர்களின் பாதை..!

advertisement by google

எள்ளு சாப்பிடுவதால் பலவித பயன்கள் நமக்கு கிடைக்கும் என்பதாலே எந்த ஒரு பலகாரம் என்றாலும், அதில் கொஞ்சம் எள்ளை நம் முன்னோர்கள் சேர்த்து சமைக்கும் பழக்கத்தை கொண்டிருந்தனர். உதாரணத்துக்கு முறுக்கு, சீடை, ஓட்டவடை, எள்ளுருண்டை… இப்படி வித விதமான பண்டங்களில் எள்ளை சேர்க்கும் பழக்கம் அன்று முதல் இன்று வரை கடைபிடித்து வருகின்றோம்.

advertisement by google

எள்ளு- உயிர் காக்கும் நண்பன்..!

இப்படி பலவித உணவு பொருட்களில் எள்ளின் பங்கு இன்றியமையாத ஒன்றாக இருந்து வருகின்றது. எள்ளை உணவில் சேர்த்து கொள்வதால் ஏராளமான நன்மைகள் கிடைக்கும். அதில் மிக முக்கியமானது புற்றுநோயை எதிர்த்து நிற்பதே. நோய்கள் இல்லாமல் நம்மை வாழ வைக்க ஒரு பிடி எள்ளே போதுமாம்.

எதிர்ப்பு சக்தி கொண்ட எள்..!

எதிர்ப்பு சக்தி அதிகம் கொண்ட உணவுகளில் எள்ளும் ஒன்று. இந்த சிறிய விதைக்குள் இவ்வளவு மகிமைகள் இருக்குமா..? என்று மிகைத்து பார்க்கும் அளவிற்கு இதன் தன்மை உள்ளது. இதற்கு காரணம் என்னனு உங்களுக்கு தெரியுமா..?

காரணம் என்ன..?

இதில் உள்ள எண்ணற்ற ஆன்டி ஆக்சிடன்ட்ஸ், ஒமேகா 3 கொழுப்பு அமிலங்கள், கால்சியம், பாஸ்பரஸ், மெக்னீசியம், பொட்டாசியம், வைட்டமின் எ போன்றவை தான் எள்ளின் அத்தனை மகத்துவத்திற்கும் காரணம். அத்துடன் இதை சரியான அளவில் எடுத்து கொண்டால் பலன் முழுமையாக கிடைக்குமாம்.

தாய்லாந்தின் ஆராய்ச்சி..!

தாய்லாந்தின் Chiang Mai University, புற்றுநோய் மற்றும் எள் பற்றிய ஆராய்ச்சியில் பல திடுக்கிடும் தகவல்கள் வெளியிட்டது. அதில் கருப்பு எள் புற்றநோய் செல்களை உருவாக விடாமல் தடுக்கும் எனவும், மூளை செல்களை மறு உற்பத்தி செய்யும் எனவும் குறிப்பிடப்பட்டுள்ளது. புற்றநோய் வரவிடாமல் நம்மை காப்பதற்கு மிக முக்கிய காரணம் ‘Sesamin’ தான்.
Sesamin அப்படினா என்ன..?
Sesamin என்பது எள்ளில் உள்ள முக்கிய மூல பொருள். மற்ற தாதுக்களை காட்டிலும் இந்த Sesamin வேதி மூல பொருள் எதிர்ப்பு சக்தியை தூண்டி நேரடியாக புற்றுநோய் செல்களை தடை செய்கிறது.

கருப்பா..?வெள்ளையா..?

எந்த எள்ளு அதிக ஆற்றல்களை கொண்டது என்கிற கேள்விக்கு பதில், கருப்பு எள் தான். எள்ளை பற்றிய பல ஆய்வுகளில் கருப்பு எள் தான் மகத்துவம் பெற்றது என கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. வெள்ளை எள்ளை விட கருப்பு எள்ளில் தான் ஊட்டச்சத்துக்களும், தாதுக்களும் அதிகம் இருக்கிறதாம்.

அட, இதுக்கூடவா..?
நீங்கள் எள் சாப்பிடுவதால் இந்த பயனும் உங்களுக்கு கூடுதலாக கிடைக்கிறது. இதில் இரும்பு சத்து, வைட்டமின் பி, எ, ஆகியவை நிறைந்துள்ளதால் இளம் நரையை தடுக்கும். மேலும் முடி உதிர்தல், ஞாபக மறதி போன்ற பிரச்சினைகளுக்கும் முற்றுப்புள்ளி கிடைக்கும்.

அழுக்குகளை வெளியேற்ற

எள் சாப்பிடுவதால் உடலில் சேர்ந்துள்ள கழிவுகள் எளிதாக வெளியேறி விடுமாம். குறிப்பாக கல்லீரலில் உள்ள நச்சுக்களை சுத்தம் செய்து ஆரோக்கியமாக
இருக்க வைக்கும். முக்கியமாக செரிமான கோளாறு உள்ளவர்களுக்கு இதை நன்கு உதவும்.

?முக்கிய குறிப்பு?

எள்ளில் ஏராளமான நன்மைகள் இருந்தாலும் அதை அளவோடு தான் எடுத்துக்கொள்ள வேண்டும்.
தினமும் ஒரு ஸ்பூன் அளவு அல்லது ஒரு எள்ளுருண்டை என்ற விகிதத்தில் எடுத்துக் கொள்வது நலம் பயக்கும்.
அளவுக்கு அதிகமாக ஒருபோதும் எடுத்துக் கொள்ளக் கூடாது.

ரத்த போக்கு உள்ளவர்கள்
அஜீரணம் உள்ளவர்கள், காய்ச்சல் உள்ளவர்கள், வாந்தி மற்றும் வயிற்றுப்போக்கு உள்ளவர்கள் குணமாகும்வரை எள்ளை உட்கொள்ளக் கூடாது.

வேறு மூலிகை மருந்துகளை எடுத்துக் கொள்பவர்கள் எள்ளை எடுத்துக்கொள்ள கூடாது.

முக்கியமாக பெண்கள் கர்ப்ப காலத்தில்
எள்ளை அறவே எடுத்துக்கொள்ள கூடாது காரணம்
கருச்சிதைவை தூண்டும். பழங்காலத்தில் இது ஒரு இயற்கையான கருத்தடை முறையாகவும் இருந்து வந்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கதாகும்

எனவே எண்ணற்ற நன்மைகள் தரும் எள்ளை அளவோடு எடுத்துக்கொள்வோம் ஆரோக்கியத்துடன் வாழ்வோம் ??

advertisement by google

Related Articles

Back to top button