இந்தியாதமிழகம்தமிழ்நாடு மாவட்டம்தொழில்நுட்பம்

தமிழ்நாடு மின்வாரியத்தை பாடாய்படுத்தும் பட்டம்?கோவையில் ஒரே வாரத்தில் 25 இடங்களில்மின்தடை?முழுவிபரம் -விண்மீன் நியூஸ்

advertisement by google

மின்வாரியத்தை பாடாய் படுத்தும் ‘பட்டம்’: கோவையில் ஒரு வாரத்தில் 25 இடங்களில் மின் தடை

advertisement by google

தற்போது கொரோனா பரவலை தடுக்க கோவை மாநகரம் முழுவதும் ஊரடங்கு பிறப்பிக்கப்பட்டுள்ளது. இதனால் யாரும் வீட்டை விட்டு வெளியே வருவதில்லை. சிறுவர்கள் திறந்த வெளியில் கேரம் போர்டு, கிரிக்கெட் விளையாடினாலும் அவற்றை போலீசார் குட்டி விமானங்கள் மூலம் கண்காணித்து விரட்டி விடுகிறார்கள். இதனால் வீட்டு மொட்டை மாடியில் இருந்தவாறு பட்டம் விட்டு சில சிறுவர்கள் பொழுதை கழிக்கிறார்கள். அதிலும் தற்போது பிரச்சினை ஏற்பட்டுள்ளது.

advertisement by google

தற்போது ஊரடங்கு என்பதால் திறந்தவெளியில் பட்டங்கள் பறக்க விட முடியாது. அதுபோன்ற சமயங்களில் வீட்டு மொட்டை மாடியில் நின்று சிறுவர்கள் பட்டங்களை பறக்க விடும் போது அது சில நேரங்களில் தெருவில் உள்ள மின் கம்பங்களில் சிக்கிக் கொள்கின்றன. கஷ்டப்பட்டு செய்த பட்டம் சிக்கிக் கொண்டதே என்று கவலைப்படும் சிறுவர்கள் தெருவுக்கு வந்து சிக்கி இருக்கும் பட்டத்தில் இருந்து தொங்கும் நூலை பிடித்து இழுக்கிறார்கள். அவ்வாறு இழுக்கும் போது மின் கம்பங்களில் தனித் தனியாக தொடாமல் உள்ள இரண்டு மின் கம்பிகள் ஒன்றோடொன்று சேருகின்றன. அப்போது மின் தடை ஏற்பட்டு அந்த பகுதி முழுவதும் மின்சாரம் துண்டிக்கப்படுகிறது.

advertisement by google

இது குறித்து மின்சாரத்துறை அதிகாரி ஒருவர் கூறியதாவது:-

advertisement by google

கோவையில் கடந்த ஒரு வாரமாக மொத்தம் 25 இடங்களில் மின் தடை ஏற்பட்டுள்ளது. கோவை காந்திமாநகர், கணபதி மாநகர், ஆவாரம்பாளையம், ஹோப்காலேஜ், சவுரிபாளையம், உடையாம்பாளையம், சிங்காநல்லூர் ஆகிய பகுதிகளில் பிற்பகல் 3 மணி முதல் மாலை 6 மணி வரை தொடர்ந்து பட்டங்கள் மின்கம்பிகளில் சிக்கிக் கொள்வதால் மின் தடை ஏற்படுகிறது. அந்த நேரங்களில் தான் காற்று அதிகமாக வீசுவதால் பட்டங்கள் அதிக அளவில் பறக்க விடப்படுகின்றன.

advertisement by google

மின் கம்பங்களில் 4 கம்பிகள் இழுத்து கட்டப்பட்டிருக்கும். இதில் ஏதாவது இரண்டு கம்பிகள் ஒன்றாக சேர்ந்தாலோ அல்லது நெருங்கி வரும் போதுதோ மின் தடை ஏற்படும். அவை ஒன்றோடொன்று சேராமல் இருப்பதற்காகதத் தான் இடையில் கம்பி போட்டு கட்டப்பட்டிருக்கும். அதில் ஏதாவது ஒரு கம்பியில் பட்டம் சிக்கிக் கொண்டிருந்தால், அதை எடுப்பதற்காக பட்டத்தோடு கட்டப்பட்டு தொங்கிக் கொண்டிருக்கும் மிச்சமிருக்கும் நூலை கீழே இருந்து இழுத்தால் தனித் தனியாக கட்டப்பட்டுள்ள மின் கம்பிகள் இணையும். அப்போது மின் தடை ஏற்படும். மின் கம்பிகள் நன்றாக இழுத்துதான் கட்டப்பட்டிருக்கும். ஆனால் அவ்வளவு உறுதியாக கட்டப்பட்டுள்ள மின் கம்பியையே இணைக்கும் அளவிற்கு பட்டத்துடன் கட்டப்பட்டுள்ள மாஞ்சா நூல் வலுவானதாக உள்ளது.

advertisement by google

மின் தடை ஏற்பட்டதும் லைன்மேனை அனுப்பி எந்த இடத்தில் மின் கம்பிகள் இணைந்துள்ளது என்று பார்ப்பதற்கே பல மணி நேரம் ஆகும். அதன்பின்னர் அதை சரி செய்து மின் இணைப்பு கொடுப்பதற்கு மேலும் கால தாமதம் ஆகும். பட்டங்களை எடுப்பதற்காக சிலர் இரும்பி கம்பியை பயன்படுத்தினால் அதில் மின்சாரம் பாய்ந்து உயிர் இழப்பை ஏற்படுத்தும். சிலர் மின்சாரம் தாக்காது என்று கருதி மரக்குச்சியை பயன்படுத்தினாலும் அதில் ஆணி போன்ற ஏதாவது இரும்பு இருந்தாலும் மின்சாரம் பாய்வதற்கு வாய்ப்புள்ளது. இதுகுறித்து பட்டம் விடுபவர்களுக்கு பெற்றோர் தகுந்த அறிவுரை வழங்க வேண்டும்.

advertisement by google

இவ்வாறு அவர் கூறினார்.

advertisement by google

Related Articles

Back to top button