தமிழகம்

மதிமுக கட்சியில் மகனுக்கு அதிகாரம் வழங்கவே தேர்தல்! வைகோ மீது மதிமுக அவைத்தலைவர் திருப்பூர் துரைசாமி மீண்டும் புகார்✍️ஆறு கடிதங்களை அனுப்பிய அவைத்தலைவர் துரைசாமி ”தற்போது ஏழாவது கடிதம் 28 தேதி மாவட்ட செயலாளர்களுக்கு அனுப்பி வைக்க தயார்✍️முழுவிவரம்✍️விண்மீன்நியூஸ்

advertisement by google

தன்னுடைய பேச்சை யார் கேட்பரோ அவர்களை தேர்வு செய்து, அவர்களுக்கு பதவி தர, ம.தி.மு.க., தலைவர் வைகோ முடிவெடுத்து விட்டார்,” என, ம.தி.மு.க., அவைத்தலைவர் திருப்பூர் துரைசாமி கூறினார்.

advertisement by google

சில நாளிதழுக்கும் ,ஊடகங்களுக்கும் அவர் பிரத்யேக பேட்டி அளித்து பரபரப்பை உண்டாக்கினார். இருந்தாலும் இவரின் பேச்சையும் , பேட்டியையும் மதிமுக தொண்டர்களும் , பொருப்பாளர்களும் ஒரு பொருட்டாக கண்டுகொள்ளவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.மேலும் அவைத்தலைவர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கட்சி தலைவர் வைகோ அவர்களிடம் அழுத்தம் கொடுத்து வருகிறார்கள், இருந்தாலும் துரைச்சாமி சீனியர் என்பதால் தலைவர் வைகோ மெளனம் சாதிக்கிறார் என்ற செய்தியும் குறிப்பிடத்தக்கது.

advertisement by google

கட்சியில், 2014ல் இணைந்த ஆடிட்டர் அர்ஜுனனுக்கு, உயர்நிலை குழு உறுப்பினர் பொறுப்பு வழங்கப்பட்டது. வரும் தேர்தலில் அவைத்தலைவர் பதவி கொடுக்க திட்டமிடப்பட்டுள்ளது.

advertisement by google

கட்சியின் கணக்கு விபரங்களை இவர் ஆடிட் செய்து வருகிறார் என்பதால், இவருக்கு இந்த பதவி தரப்பட உள்ளது.

advertisement by google

கட்சி துவங்கிய களத்தில் இருந்தே, மல்லை சத்யா, ஏ.கே.மணி பணியாற்றி வருகின்றனர். தற்போது, துணை பொதுச் செயலராக உள்ள இவர்கள் இருவருக்கு தான், சீனியாரிட்டி அடிப்படையில், அவைத்தலைவர் பதவி தரப்பட வேண்டும்.

advertisement by google

துரை வைகோவை விட, அதிகாரமிக்க ஒருவர் பதவிக்கு வந்து விடக் கூடாது என்பதற்காக, கட்சி துவங்கிய காலத்தில் இருந்து பணியாற்றியவர்கள் ஓரங்கட்டப்படுகின்றனர்.

advertisement by google

மூன்று ஆண்டுக்கு ஒருமுறை நிர்வாகிகள் தேர்தல் நடத்தியிருக்க வேண்டும். கடந்த, 2011ம் ஆண்டுக்கு பின், 2022 மார்ச்சில் தேர்தல் அறிவித்து, நடத்தாமல் கைவிடப்பட்டது.

advertisement by google

தன் பேச்சை யார் கேட்பரோ அவர்களை தேர்வு செய்து, அவர்களுக்கு பதவி தர வைகோ முடிவெடுத்து விட்டார். எனவே, 12 ஆண்டுகளுக்கு பின், தற்போது தேர்தல் நடத்தப்படுகிறது.

தன் மகனுக்கு முதன்மை நிலை செயலர் பதவி வழங்கி, அதிகாரம் வழங்கவே, தேர்தல் நடத்த வைகோ தயாராகி வருகிறார். எம்.பி., கணேசமூர்த்தி, தி.மு.க., சின்னத்தில் போட்டியிட்டார். அவர் தி.மு.க., – எம்.பி.,யாகத் தான் உள்ளார்.

இவ்வாறு அவர் கூறினார்.

வைகோ மகன், துரை வைகோ கட்சிக்குள் வந்தது முதல் எதிர்ப்பு தெரிவித்து வரும் அவைத்தலைவர் துரைசாமி, ‘கட்சியை தி.மு.க.,வுடன் இணைத்து விடுங்கள்’ என, வைகோவுக்கு கடிதம் அனுப்பி பரபரப்பை உண்டாக்கினார்

கட்சிக்குள் கடந்த மாதம் புகைச்சலை ஏற்படுத்தியது.இதுவரை, ஆறு கடிதங்களை அனுப்பிய துரைசாமி கூறுகையில், ”தற்போது ஏழாவது கடிதம் தயாராகி வருகிறது. இக்கடிதத்தை கட்சித் தலைமை, மாவட்ட செயலர்களுக்கு வரும், 28ம் தேதி அனுப்பி வைக்க உள்ளேன். புதிய கடிதத்தில் மேலும் பல விஷயங்களை தெரிவிப்பேன்,” என்றார்.

வைகோ மகன், துரை வைகோ கட்சிக்குள் வந்தது முதல் எதிர்ப்பு தெரிவித்து வரும் அவைத்தலைவர் துரைசாமி, ‘கட்சியை தி.மு.க.,வுடன் இணைத்து விடுங்கள்’ என, வைகோவுக்கு கடிதம் அனுப்பியது,

கட்சிக்குள் கடந்த மாதம் புகைச்சலை ஏற்படுத்தியது.இதுவரை, ஆறு கடிதங்களை அனுப்பிய துரைசாமி கூறுகையில், ”தற்போது ஏழாவது கடிதம் தயாராகி வருகிறது. இக்கடிதத்தை கட்சித் தலைமை, மாவட்ட செயலர்களுக்கு வரும், 28ம் தேதி அனுப்பி வைக்க உள்ளேன். புதிய கடிதத்தில் மேலும் பல விஷயங்களை தெரிவிப்பேன்,” என்றார். எது எப்படி இருந்தாலும் தலைவர் வைகோ கையில் தான் தீர்வு உள்ளது என்று மதிமுக தொண்டர்கள் நம்பிக்கையுடன் கட்சி பணி ஆற்றிவருகிறார்கள்.

advertisement by google

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button