கிரைம்

யூடியூபர் சங்கர் மேலும் 3 வழக்குகளில் கைது, பெண் டிஎஸ்பி அளித்த புகாரில் 5 பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு

advertisement by google

யூடியூபர் சங்கர், போலீஸ் அதிகாரிகள் மற்றும் பெண் போலீஸ் குறித்து ஆபாசமாக பேசியது தொடர்பாக கோவை சைபர் கிரைமில் வழக்குப்பதிவு செய்து தேனி விடுதியில் இருந்த அவரை கோவை போலீசார் கைது செய்தனர். அவர் தங்கியிருந்த அறையில் 409 கிராம் கஞ்சா பறிமுதல் செய்யப்பட்டது. இதுகுறித்து தேனி மாவட்டம் பழனி செட்டிப்பட்டி போலீசார் வழக்குப்பதிவு செய்து சங்கரை கைது செய்தனர். இதையடுத்து கோவை சிறையில் உள்ள சங்கரை பலத்த போலீஸ் பாதுகாப்புடன் அழைத்து வந்து மதுரை மாவட்ட போதைப்பொருள் தடுப்பு சிறப்பு நீதிமன்றத்தில் நேற்று ஆஜர்படுத்த அழைந்து வந்தனர்.

advertisement by google

அப்போது அங்கு கூடியிருந்த பெண்கள், சங்கரை நோக்கி துடைப்பங்களை வீசி எதிர்ப்பு தெரிவித்தனர். பின்னர் நீதிபதி செங்கமலச்செல்வன் முன் போலீசார் சங்கரை ஆஜர்படுத்தினர். இதையடுத்து மே 22 வரை சிறையிலடைக்க நீதிபதி உத்தரவிட்டார். இதைதொடர்ந்து கோவை சிறைக்கு சங்கர் அழைத்து செல்லப்பட்டார். இந்நிலையில், சென்னையில் என்டிடிவி பிராஃபிட் தொலைக்காட்சியின் நியூஸ் எடிட்டர் சந்தியா ரவிசங்கர், தமிழர் விடுதலைப்படையின் நிறுவனர் வீரலட்சுமி மற்றும் திருச்சியில் பெண் காவலர்கள் அளித்த புகாரில் அந்தந்த போலீசார் சங்கரை கைது செய்து உள்ளனர்.

advertisement by google

advertisement by google

advertisement by google

advertisement by google

advertisement by google

advertisement by google
advertisement by google

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button