கிரைம்

சாதி மாறி திருமணம் செய்தவர்களை ஆணவக்கொலை செய்வது அதிகரித்து வருகிறது?முழுவிவரம் – விண்மீன் நியூஸ்

advertisement by google

சாதி மாறி திருமணம் செய்தவர்களை ஆணவக்கொலை செய்வது அதிகரித்து வருகிறது………

advertisement by google

கோவையில் சாதி மாறி திருமணம் மணமகனையும் அவரது பெற்றோரையும் தாக்கி விட்டு பெண்ணை தூக்கிச் சென்றுள்ள சம்பவம் கோவை துடியலூரில் பதற்றத்தை ஏற்படுத்தியுள்ளது.

advertisement by google

இடையர்பாளையத்தை சேர்ந்த கார்த்திகேயனுக்கு திருச்சியை சேர்ந்த சக்தி தமிழனி பிரபா மீது காதல், இருவரும் வேறு வேறு சாதியைச் சேர்ந்தவர்கள் என்பதால் பெண்ணின் பெற்றோரிடம் எதிர்ப்பு கிளம்பியது.

advertisement by google

வீட்டினரின் எதிர்ப்பையும் மீறி இருவரும் கடந்த 5 ம் தேதி கோவையில் சாதி மறுப்பு சுயமரியாதை திருமணம் செய்து கொண்டனர்.

advertisement by google

கார்த்திகேயனின் பெற்றோர் திருமணத்தை ஏற்றுக் கொண்ட நிலையில் சக்தி தமிழ் பிரபாவின் குடும்பத்தினர் இந்த திருமணத்தை ஏற்றுக் கொள்ளவில்லை.

advertisement by google

இந்நிலையில் திருமணத்தை முறையாக மாவட்ட பதிவாளர் அலுவலகத்தில் பதிவு செய்து விட்டு, கார்த்திகேயனின் வீட்டில் தம்பதியர் வசித்து வந்தனர்.

advertisement by google

வெள்ளிக்கிழமை இரவு சக்தி தமிழினி பிரபாவின் பெற்றோர் மற்றும் உறவினர்கள் கார்த்திகேயனின் வீட்டிற்கு வந்தனர். சமாதானம் பேசுவதற்காகத்தான் வந்திருப்பதாக இருவரும் நினைத்த போது அந்த கும்பல், கார்த்திகேயனையும், அவரது தாயார் வசந்தகுமாரியையும் தாக்கி விட்டு பிரபாவை காரில் கடத்தி சென்றனர்.

advertisement by google

இந்தசம்பவம் அருகில் இருந்த சிசிடிவி காட்சியில் பதிவாகி உள்ளது.

தாக்குதலில் காயமடைந்த வசந்தகுமாரி தனியார் மருத்துவமனையில் சேர்க்கப்பட்டு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறார்.

கார்த்திகேயன் இது குறித்து துடியலூர் காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார். தனது மனைவியை அவரது பெற்றோர் ஆணவக்கொலை செய்ய வாய்ப்பு இருப்பதாகவும், காவல்துறை தனது மனைவியை மீட்டு கொடுக்க வேண்டுமெனவும், அத்துமீறி வீட்டுக்குள் நுழைந்து தாக்குதல் நடத்திய அவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும் வலியுறுத்தியுள்ளார். துடியலூர் காவல் துறையினர் இது குறித்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

சாதி மாறி திருமணம் செய்த பெண்ணை பெற்றோர் துடிக்க துடிக்க கடத்தி சென்ற வீடியோ இப்போது கோவையில் சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது.

advertisement by google

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button