இந்தியா

ஆட்டம்கண்ட அமித்ஷா மேகாலயா பயணம் ரத்து?

advertisement by google

♦ஆட்டம் கண்ட அமித்ஷா – மேகாலயா பயணம் ரத்து

advertisement by google

?குடியுரிமை சட்டத் திருத்த மசோதாவிற்கு எதிர்ப்பு தெரிவித்து வடகிழக்கு மாநிலங்களில் தீவிரப் போராட்டம் நடைபெற்று வருவதால் மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷாவின் மேகாலயா பயணம் ரத்து செய்யப்பட்டுள்ளது.

advertisement by google

?இந்தியாவில் குடியேறிய முஸ்லிம்கள் தவிர்த்து ஹிந்துக்கள், சீக்கியா்கள், பெளத்தா்கள், சமணா்கள், பாா்சி இனத்தவா்கள், கிறிஸ்தவா்கள் ஆகியோருக்கு நிரந்தர குடியுரிமை வழங்குவதற்கு குடியுரிமை சட்டத்தில் திருத்தம் மேற்கொள்ளப்பட்டது.

advertisement by google

?தொடர்ந்து, குடியுரிமை சட்டத் திருத்த மசோதாவுக்கு குடியரசுத் தலைவா் ராம்நாத் கோவிந்த் வியாழக்கிழமை ஒப்புதல் அளித்தாா். இதற்கிடையே, குடியுரிமை சட்டத் திருத்த மசோதாவுக்கு நாடெங்கும் கடும் எதிர்ப்பு கிளம்பியுள்ளது.

advertisement by google

?குறிப்பாக வடகிழக்கு மாநிலங்கள் போராட்ட களமாக மாறியுள்ளன. இது வெள்ளிக்கிழமை டெல்லியிலும் பரவியது. இதனால் நாடெங்கும் அசாதாரன சூழ்நிலை உருவாகியுள்ளது.

advertisement by google

?இதன் காரணமாக, மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷாவின் மேகாலயா பயணம் ரத்து செய்யப்பட்டுள்ளது. வருகிற 15ம் தேதி ஞாயிற்றுக்கிழமை அமித் ஷா, மேகாலயா தலைநகர் ஷில்லாங்கிற்கு செல்லவிருந்தார். ஆனால், தற்போது நிலைமை சீராக இல்லாததால், அமித் ஷாவின் பயணம் ரத்து செய்யப்பட்டுள்ளதாக உள்துறை அமைச்சக தரப்பில் இருந்து தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது.

advertisement by google

advertisement by google
advertisement by google

Related Articles

Back to top button