இந்தியாஉலக செய்திகள்தமிழகம்தமிழ்நாடு மாவட்டம்தொழில்நுட்பம்விளையாட்டு

காலை விரிவான செய்திகள்(6.10.2019)தமிழகம் இந்தியா உலகம்

advertisement by google

????? விண்மீன்நியூஸ்?????புதுச்சேரி முதல்வர் நாராயணசாமி:

advertisement by google

இயக்குனர் மணிரத்தினம் மற்றும் சிலர் மீது தேச துரோக வழக்கு போட்டிருப்பது என்றும் ஏற்றுக்கொள்ள முடியாது இது சர்வாதிகாரத்தை நோக்கி மத்திய அரசு கொண்டிருப்பதை காட்டுகிறது அதுமட்டுமின்றி மரியாதைக்குரிய பாரத பிரதமர் மோடியும் சென்று கொண்டிருக்கிறார்

advertisement by google

இது இந்திய ஜனநாயகத்துக்கு மிகப்பெரிய ஆபத்து

advertisement by google

மத்திய அரசுக்கு எதிராக விமர்சனம் செய்யும் அரசியல் தலைவர்கள் ,அறிஞர்கள், எழுத்தாளர்கள் அவர்கள் மீது பழிவாங்கும் நடவடிக்கைகளை மத்திய அரசு எடுத்து வருகிறது

advertisement by google

நீட் தேர்வை என்றும் ஏற்றுக்கொள்ள முடியாது இந்த நிலையில் கேம்ஸ் மற்றும் ஜிப்மர் மருத்துவமனைகளை இதற்கு கீழ் கொண்டுவருவது என்றும் ஏற்றுக்கொள்ள முடியாது

advertisement by google

சீன நாட்டு அதிபர் ஷி ஜிங்பிங் சென்னை வருவது தமிழகத்துக்கு மட்டுமல்ல இதனால் தென்னிந்தியாவை பெருமைப்படும்

advertisement by google

ஆனால் அவர்களை வரவேற்பதற்காக டிஜிட்டல் பேனர்கள் வைப்பது என்றும் ஏற்றுக்கொள்ள முடியாது புதுச்சேரியை பொருத்தவரை டிஜிட்டல் பேனர்கள் முற்றிலுமாக அகற்றப்பட்டுள்ளது என்று அவர் கூறினார்
[10/6, 7:11 AM] விண்மீன்நியூஸ்: ??ஆந்திர மாநில தொழில்துறை உள்கட்டமைப்புக் கழகத் தலைவராக நடிகை ரோஜா நியமனம்
[10/6, 7:11 AM] விண்மீன்நியூஸ்: ??“கொசு கடிக்கும் வரை உள்ளாட்சித்துறை பொறுப்பு; கடித்த பின்னர்தான் சுகாதாரத்துறை பொறுப்பு!” – சுகாதாரத்துறை அமைச்சர் விஜயபாஸ்கர்
[10/6, 7:11 AM] விண்மீன்நியூஸ்: ??தேசத்தை நேசிப்பவர்கள், பிரதமரையும் மதிப்பதால்தான் அவருக்குக் கடிதம் எழுதியிருக்கிறார்கள்.இது எப்படி தேசத் துரோகமாகும்?வியப்பு;வேதனை

advertisement by google

-வைரமுத்து
[10/6, 7:11 AM] விண்மீன்நியூஸ்: ??நீட் தேர்வுக்கு தமிழகமும், புதுச்சேரியும் விலக்கு கோரும் நிலையில் ஜிப்மர், எய்ம்ஸ் மருத்துவக்கல்வி மாணவர் சேர்க்கைக்கும் நீட் தேர்வு என்பது கண்டிக்கத்தக்கது

– புதுச்சேரி முதல்வர் நாராயணசாமி
[10/6, 7:11 AM] விண்மீன்நியூஸ்: ??என் மீதும், என் தந்தை மீதும் கூறப்படும் குற்றச்சாட்டுகள் உண்மை என்றால் நிரூபிக்க வேண்டியதுதானே – மதுரை விமான நிலையத்தில் கார்த்தி சிதம்பரம் எம்.பி. பேட்டி
[10/6, 7:11 AM] விண்மீன்நியூஸ்: ??டெல்லியில் பிரதமர் மோடியுடன் ஆந்திர முதல்வர் ஜெகன் மோகன் ரெட்டி சந்திப்பு
[10/6, 7:11 AM] விண்மீன்நியூஸ்: ??காற்று வீசியதாலேயே பேனர் விழுந்தது; காற்றின் மீதுதான் வழக்குப் போட வேண்டும்

– சுபஸ்ரீ மரணம் குறித்து அதிமுக பொன்னையன் பேட்டி!
[10/6, 7:11 AM] விண்மீன்நியூஸ்: ??இந்தியா வங்கதேசம் இடையே மூன்று முக்கிய புரிந்துணர்வு ஒப்பந்தங்கள் கையெழுத்தானது!

வங்கதேசத்துடன் ஒரே ஆண்டில் 12 புரிந்துணர்வு ஒப்பந்தங்கள் கையெழுத்தாகியிருப்பதாக பிரதமர் மோடி பெருமிதம்!
[10/6, 7:11 AM] விண்மீன்நியூஸ்: ??ஆயுத பூஜைக்காக நேற்று மற்றும் இன்று இயக்கப்பட்ட 4,450 சிறப்பு பேருந்துகளில் 2,86,775 பயணிகள் பயணித்துள்ளனர்
[10/6, 7:11 AM] விண்மீன்நியூஸ்: ??டெல்லி எய்ம்ஸ் மருத்துவமனையில் சிகிச்சை முடிந்த பிறகு மீண்டும் திகார் சிறையில் அடைக்கப்பட்டார் ப.சிதம்பரம்
[10/6, 7:11 AM] விண்மீன்நியூஸ்: ??தீபாவளி பண்டிகையின்போது கூடுதல் கட்டணம் வசூலிக்கும் ஆம்னி பேருந்துகளை கண்காணிக்க குழு: போக்குவரத்து செயலாளர் தகவல்
[10/6, 7:11 AM] விண்மீன்நியூஸ்: ??மாதத்தில் 10 நாட்கள் போஷ் ஆட்டோ மொபைல் உற்பத்தி நிறுத்தம்
[10/6, 7:11 AM] விண்மீன்நியூஸ்: ??சிவில் நீதிபதிகள் தேர்வுக்கு தடை விதிக்கக் கோரி தாக்கல் செய்யப்பட்ட மனுவுக்கு தமிழக அரசு, அரசுப் பணியாளர் தேர்வாணையம், பார் கவுன்சில் பதிலளிக்க சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவு
[10/6, 7:11 AM] விண்மீன்நியூஸ்: ??“மதிகெட்டான் சோலை விவகாரத்தில் மத்திய அரசின் பதிலுக்கு பின்னர் தான், நியூட்ரினோ திட்டம் குறித்த கேரள அரசின் கருத்தை தெரிவிக்க முடியும்” – கேரள அரசு
[10/6, 7:11 AM] விண்மீன்நியூஸ்: ??தீபாவளிக்கு பசுமைப் பட்டாசுகளை அறிமுகம் செய்தார் மத்திய அமைச்சர் ஹர்ஷவர்த்தன்
[10/6, 7:11 AM] விண்மீன்நியூஸ்: ??பிரதமர் மோடி, சீன அதிபர் சந்திப்பையொட்டி மத்திய குழுவினர், தமிழக அதிகாரிகள் மாமல்லபுரத்தில் ஆய்வு

மாமல்லபுரத்தில் நடைபெற்றுவரும் பாதுகாப்பு ஏற்பாடுகள் குறித்து அதிகாரிகள் ஆய்வு செய்து வருகின்றனர்
[10/6, 7:11 AM] விண்மீன்நியூஸ்: ??திருவள்ளூர் தெற்கு மாவட்ட தேமுதிக பொதுக்குழு உறுப்பினர் ரவி உள்ளிட்டோர் சென்னை அண்ணா அறிவாலயத்தில் மு.க.ஸ்டாலின் முன்னிலையில் திமுகவில் இணைந்தனர்
[10/6, 7:11 AM] விண்மீன்நியூஸ்: கிருஷ்ணகிரி மாவட்டம் சூளகிரி வட்டம் உத்தனப்பள்ளி உள்வட்டம் உலகம் தரப்பு ராமாபுரம் கிராமம் தென்பெண்ணை ஆற்றின் குறுக்கே கட்டப்பட்ட பாலத்திற்கு கீழே ஆயுத பூஜைக்காக பூ வாங்க வந்த ஈரோடு மாவட்டம் அந்தியூர் வட்டம் அத்தாணி கிராமத்தை சேர்ந்த பாலாஜி த/ பெ நஞ்சப்பன் வயது 36 என்பவர் தனது மகன் சிறுவன் முகில் த/ பெ பாலாஜி( வயது-8) உடன் கைகழுவும் போது தவறி விழுந்து ஆற்றில் அடித்து சென்ற சிறுவனை காப்பாற்ற சென்ற தந்தையும் அடித்து செல்லப்பட்டார். ராய கோட்டை தீயணைப்புத் துறையின் மூலம் பிரேதத்தை கைப்பற்றி 108 ஆம்புலன்ஸ் மூலம் கிருஷ்ணகிரி மாவட்ட அரசு மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைக்கப்பட்டுள்ளது.
[10/6, 7:11 AM] விண்மீன்நியூஸ்: தென்பெண்ணை ஆற்றில் மூழ்கி 2 நாளில் 4 பேர் பலி

கிருஷ்ணகிரி மாவட்டம் ஓசூர் கெலவரப்பள்ளி அணையில் இருந்து அதிக அளவில்
தண்ணீர் திறந்து விடப்படுகிறது. இதனால் தென்பெண்ணை ஆற்றில் தண்ணீர்
பெருக்கெடுத்து ஓடுகிறது. சூளகிரி அருகே கோபசந்திரத்தில் நேற்று
தென்பெண்ணை ஆற்றில் குளித்த கல்லூரி மாணவர் குருமூர்த்தி ஆற்றில் அடித்து
செல்லப்பட்டு பலியானார். அவரது உடல் இன்னும் கிடைக்கவில்லை.
நாகரசம்பட்டி அருகே தளிஹள்ளியில் சவுளூர் மின்வாரிய அலுவலகம் பின்புறம்
தென்பெண்ணை ஆற்றில் மூழ்கி 50 வயது மதிக்கத்தக்க ஆண் ஒருவர் நேற்று காலை
பலியானார். அவர் யார் என தெரியவில்லை. இந்த நிலையில் ஈரோட்டைச் சேர்ந்த
தந்தை & மகன் சூளகிரி அருகே ராமாபுரத்தில் தென்பெண்ணை ஆற்றில் மூழ்கி
பலியாகி உள்ளனர். நேற்று, இன்று என 2 நாளில் தென்பெண்ணை ஆற்றில் மூழ்கி 4
பேர் பலியாகி உள்ளனர்.

கடந்த 24ந் தேதி செவ்வாய்க்கிழமை முதல், இந்த மாதம் 1ந் தேதி வரை 8
நாளில் கிருஷ்ணகிரி மாவட்டத்தில் ஏரி, குட்டைகளில் மூழ்கி 11 மாணவ,
மாணவிகள் பலியாகி உள்ளது குறிப்பிடத்தக்கது.
[10/6, 7:11 AM] விண்மீன்நியூஸ்: ??புதுக்கோட்டை : மாத்தூர் அருகே பணம் வைத்து சூதாடிய ரமேஷ்(38), ஆனந்த்(39), பாலசுப்பிரமணி(38), பெளிக்ஸ் ஜோசப் ராஜ்(36), நிர்மல்குமார்(28), கோவிந்தராஜ் ஆகியோர் கைது – ரூ.96 ஆயிரம் பறிமுதல்
[10/6, 7:11 AM] விண்மீன்நியூஸ்: ??சென்னை:பிளாஸ்டிக் பொருட்கள் உற்பத்தி மற்றும் விற்பனை செய்த நிறுவனங்களிடம் 63 லட்ச ரூபாய் அபராதம் வசூல்

சென்னையில் நேற்று ஒரே நாளில், 680 கிலோ பிளாஸ்டிக் பறிமுதல்
[10/6, 7:11 AM] விண்மீன்நியூஸ்: ??“ஜனநாயக ரீதியாக கருத்துகளை சொல்பவர்களுக்கு எந்த சிக்கலும் இல்லை”

“தேச ஒற்றுமைக்கு எதிராக கடிதம் எழுதவில்லை எனில், வழக்கு இருந்தால் சட்ட ரீதியாக எதிர்கொள்ளலாம்” – வானதி சீனிவாசன்
[10/6, 7:11 AM] விண்மீன்நியூஸ்: ??‘பயங்கரவாதம் மனிதகுலத்தின் எதிரி’ -வெங்கையா நாயுடு காட்டம்
[10/6, 7:11 AM] விண்மீன்நியூஸ்: ??கீழடி 3ஆம் கட்ட அகழாய்வு அறிக்கையை உடனே வெளியிட வேண்டும்

கீழடி அகழாய்வில் கிடைத்தவற்றை பாதுகாக்க மதுரையில் அருங்காட்சியகம் அமைக்க வேண்டும்

– திருமாவளவன்
[10/6, 7:11 AM] விண்மீன்நியூஸ்: ??“குக்கரில் சமைத்தால் இதய நோய்” – ஸ்டான்லி மருத்துவர்
[10/6, 7:11 AM] விண்மீன்நியூஸ்: ✍✅நீலகிரி : ஊட்டி இரண்டாவது சீசனை முன்னிட்டு மேட்டுப்பாளையம்-உதகை இடையே நீட்டிக்கப்பட்ட சிறப்பு மலை ரயில் போக்குவரத்து இன்று முதல் தொடங்கப்பட்டுள்ளது.

கோவை மாவட்டம் மேட்டுப்பாளையத்தில் இருந்து உதகைக்கு தினசரி மலை ரயில் சேவை இயக்கப்பட்டு வருகிறது. காலை 7.15 மணிக்கு மேட்டுப்பாளையத்தில் இருந்து புறப்பட்டு அடர்ந்த காடுகளின் நடுவே பயணிக்கும் இந்த மலை ரயிலில் பயணித்து, ஆர்ப்பரிக்கும் அருவிகள், வானுயர்ந்த மரங்கள், வனவிலங்குகள் என கொட்டி கிடக்கும் நீலமலையின் இயற்கை அழகினை ரசிக்க இந்தியா மட்டுமின்றி பல்வேறு வெளிநாட்டினரும் இந்த மலை ரயிலில் பயணிக்க ஆர்வம் காட்டி வருகின்றனர்
முன்பதிவு செய்து பயணிக்கும் வகையில் உள்ள இந்த மலை ரயில் போக்குவரத்தானது நான்கு பெட்டிகள் மட்டுமே கொண்டதாக இருப்பதால் இதில் 150 பயணிகளுக்கு மேல் செல்ல முடியாது. தினசரி ஒரு ரயில் போக்குவரத்து மட்டுமே உள்ளதால் இதில் பயணிக்க முன்பதிவு செய்து பல மாதங்கள் சுற்றுலாப் பயணிகள் காத்திருக்கின்றனர். எனவே இந்த மலை ரயில் போக்குவரத்தில் காலதாமதமின்றி அனைவரும் பயணிக்கும் வகையில் நடவடிக்கை எடுக்க சுற்றுலா பயணிகள் ரயில்வே நிர்வாகத்திடம் கோரிக்கை வைத்திருந்தனர்.
இந்த நிலையில் பயணிகளின் கோரிக்கையை ஏற்று விடுமுறை தினமான சனி மற்றும் ஞாயிற்றுக்கிழமைகள் மட்டும் இயங்கும் வகையில், கடந்த மூன்று மாதங்களுக்கு முன் மலை ரயில் இயக்கப்பட்டது. அதன் காலக்கெடு கடந்தவாரம் முடிவடைந்த நிலையில், தற்போது மேலும் மூன்று மாதங்களுக்கு ரயில் சேவையை நீட்டித்து தெற்கு ரயில்வே அறிவித்தது.
இதனையடுத்து, தினசரி இயக்கப்படும் மலை ரயில் காலை 7.15 மணிக்கு புறப்பட்டு சென்ற பின், இந்த மலை ரயில் காலை 9.10க்கு புறப்பட்டு உதகை செல்லும் வகையில் திட்டமிடப்பட்டிருந்தது. வாரத்தின் இரண்டு விடுமுறை தினங்களான சனி மற்றும் ஞாயிறு ஆகிய இரு தினங்களுக்கு இந்த மலை ரயில் சிறப்புக் கட்டணத்தில் இயக்க உள்ளதாக தெற்கு ரயில்வே அறிவித்திருந்தது.
இந்த நிலையில், நீட்டிக்கப்பட்ட ரயில் சேவை இன்று முதல் மீண்டும் துவக்கப்பட்டுள்ளது. காலை 9.10க்கும் புறப்பட்ட மலை ரயில் 150 பயணிகளுடன் உதகை சென்றது. இன்று துவங்கியுள்ள இந்த மலை ரயில் சேவை, உதகை இரண்டாவது சீசனுக்காக டிசம்பர் மாதம் 29ம் தேதி வரை இருக்கும் என்பது குறிப்பிடத்தக்கது. தெற்கு ரயில்வேயின் இந்த நடவடிக்கையால் சுற்றுலாப் பயணிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.
[10/6, 7:11 AM] விண்மீன்நியூஸ்: ✍✅கோவை : வெள்ளப்பெருக்கு காரணமாக நிறுத்தி வைக்கப்பட்டிருந்த பரளிக்காடு சூழல் சுற்றுலா இரண்டு மாதங்களுக்கு பிறகு மீண்டும் தொடங்கியது.

கோவை மாவட்டம் மேட்டுப்பாளையத்தில் உள்ள அடர்ந்த வனப்பகுதியான பரளிக்காடு என்னுமிடத்தில் தமிழ்நாடு வனத்துறை மற்றும் பழங்குடியின மக்கள் இணைந்து நடத்தும் சூழல் சுற்றுலா கடந்த 10 ஆண்டுகளுக்கும் மேலாக நடைபெற்று வருகிறது. இயற்கை எழில் மிகுந்த மலைக்காட்டின் நடுவே அமைந்துள்ள பில்லூர் அணையின் நீர்த்தேக்க பகுதியில் நடைபெறும் இந்த சூழல் சுற்றுலாவிற்குத் தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் இருந்து மட்டுமல்லாது அண்டை மாநிலங்களான கேரளாவில் இருந்தும் ஏராளமான சுற்றுலாப் பயணிகள் வருகை தருகின்றனர்.
இயற்கையுடன் ஒரு நாள் இணைந்திருக்க விரும்புவோர் பலரும் இந்த சூழல் சுற்றுலாவுக்கு வனத்துறையிடம் ஆன்லைன் மூலம் முன்பதிவு செய்து குடும்பத்துடன் காத்திருக்கின்றனர். வார விடுமுறை நாட்களான சனி மற்றும் ஞாயிறு ஆகிய நாட்களில் நடத்தப்படும் இச்சூழல் சுற்றுலாவில் அடர்ந்த காட்டின் நடுவே அமைந்துள்ள பில்லூர் அணையின் நீர் தேக்கப் பகுதியில் பயிற்சி பெற்ற பழங்குடியின மக்களுடன் பாதுகாப்பான பரிசல் பயணம், ஆற்றுக்குளியல், பழங்குடியின மக்கள் தயாரித்து வழங்கும் சுவையான இயற்கை உணவு, அடர்ந்த காட்டில் ட்ரக்கிங் ஆகியவை வனத்துறையினரின் கண்காணிப்பில் நடத்தப்பட்டு வருகிறது.
இந்நிலையில், கடந்த இரு மாதகாலமாகவே மேற்குத்தொடர்ச்சி மலைக்காடுகளில் பெய்து வரும் கனமழை காரணமாக பில்லூர் அணைக்கான நீர்வரத்து தொடர்ந்து அதிகரித்தபடி இருந்தது. பில்லூர் அணை கடந்த மாதத்தில் மூன்று முறை முழு கொள்ளளவை எட்டியதால் அணையில் இருந்து உபரி நீர் திறக்கப்பட்டது. மேலும், அதிகப்படியான நீர் அணையில் தேங்கி இருப்பதனால், இந்த சூழல் சுற்றுலா நடைபெறும் இடமான பரளிக்காடு பகுதி முழுவதும் தண்ணீருக்கடியில் மூழ்கி வெள்ளக்காடாக மாறியது.
மேலும், சூழல் சுற்றுலா நடத்தப்பட்டு வந்த பகுதிகளில் தண்ணீரின் வேகம் அதிகரித்து காணப்பட்டதால் பரிசல்கள் இயக்க முடியாத நிலை ஏற்பட்டது.
இந்த நிலையில் அணைக்கு வரும் நீர்வரத்தின் வேகம் குறைந்ததால் இன்று முதல் மீண்டும் பரளிக்காடு சூழல் சுற்றுலா தொடங்கப்பட்டுள்ளது.
ஏற்கனவே முன்பதிவு செய்து காத்திருந்த சுற்றுலாப் பயணிகள் தற்போது நடைபெறும் இந்த சூழல் சுற்றுலாவில் பங்கேற்றுள்ளனர். பருவமழைக்குப் பின் பசுமை திரும்பியுள்ள வனப்பகுதிகளை கண்டும் அணையில் தேங்கியுள்ள புது வெள்ள நீரில் பரிசலில் பயணித்து சுற்றுலாப் பயணிகள் பெரும் மகிழ்ச்சி அடைந்தனர்.
[10/6, 7:11 AM] விண்மீன்நியூஸ்: ??புரோ கபடி லீக்: தபாங் டெல்லியை வீழ்த்தி பிளே ஆப் சுற்றுக்கு முன்னேறியது யுபி யோதா
[10/6, 7:11 AM] விண்மீன்நியூஸ்: ✍✅கோவை : தமிழகத்தில் எங்கும் இல்லாத வகையில் கோவை – அவினாசி சாலையில் 9.5 கி.மீ தூரத்திற்கு வெளிநாடுகளில் இருப்பதை போல பாலம் அமைக்கும் பணி விரைவில் துவங்க இருப்பதாக அமைச்சர் எஸ்.பி.வேலுமணி தெரிவித்தார்.

கோவை புலியகுளம் மாநகராட்சி பள்ளி வளாகத்தில் முதலமைச்சரின் சிறப்பு குறைதீர்ப்பு முகாம் மற்றும் அரசு நலத்திட்ட உதவிகள் வழங்கும் விழா நடைபெற்றது. இதில் உள்ளாட்சி துறை அமைச்சர் எஸ்.பி.வேலுமணி பங்கேற்று 894 பயனாளிகளுக்கு 3.71 கோடி மதிப்புடைய நலதலதிட்ட உதவிகள் வழங்கினார்.

இந்த நிகழ்ச்சியில் கோவை தெற்கு சட்டமன்ற உறுப்பினர் அம்மன் அர்ஜூனன், மாவட்ட ஆட்சியர் ராசாமணி உட்பட முக்கிய பிரமுகர்கள் கலந்து கொண்டனர். சிறப்பு குறை தீர்க்கும் முகாமினை துவக்கி வைத்த பின்னர் பேசிய அமைச்சர் எஸ். பி.வேலுமணி, இந்த திட்டத்தை பயன்படுத்தி மக்கள் தங்கள் பிரச்சினைகளை தீர்த்துக்கொள்ள வேண்டும் எனவும் தெரிவித்தார்.
மனு வாங்கத்தான் இந்த நிகழ்ச்சி நடத்தப்படுகின்றது என தெரிவித்த அவர், இது போன்ற கூட்டங்களில் ஏதாவது ஒரு பிட்டை போட்டு கோரிக்கையை வைப்பது தெற்கு தொகுதி எம்.எல்.ஏ அம்மன் அர்ஜூன்னின் வழக்கம் என கிண்டலாக தெரிவித்தார். .
மனு வாங்கத்தான் இந்த நிகழ்ச்சி நடத்தப்படுகின்றது என தெரிவித்த அவர், இது போன்ற கூட்டங்களில் ஏதாவது ஒரு பிட்டை போட்டு கோரிக்கையை வைப்பது தெற்கு தொகுதி எம்.எல்.ஏ அம்மன் அர்ஜூன்னின் வழக்கம் என கிண்டலாக தெரிவித்தார்.
கோவை தெற்கு தொகுதியில் மகளிர் கல்லூரியை கொண்டு வர வேண்டும் என அவர் கோரிக்கை வைத்துள்ளார் எனவும் முதல்வரிடம் இந்த கோரிக்கையை அவர் வைத்திருக்கின்றார் எனவும் அவர் தெரிவித்தார்.
கோவை மாவட்டத்திற்கு ஏற்கனவே 4 கல்லூரியை பெற்றுக் கொடுத்து இருக்கின்றோம் என தெரிவித்த அவர், கோவை நகரில் சாலைகள் விரிவாக்கம் செய்யப்பட்டு, பாலங்கள் வேலை வேகமாக நடந்து வருகின்றது எனவும், அவினாசி சாலையில் 9.5 கி.மீ தூரதரதிற்கு பாலம் அமைக்கப்பட இருக்கின்றது எனவும் தெரிவித்தார்.
தமிழகத்தில் இது போன்ற பாலம் எங்கும் இல்லை என தெரிவித்த அவர் தாய்லாந்து, பெங்களூர் போன்ற இடங்களில் இருப்பதை போல இந்த பாலம் வடிவமைக்கப்பட்டு இருப்பதாகவும் அவர் தெரிவித்தார்.
மேலும், கோவையில் மெட்ரோ ரயில் கொண்டு வருவதற்கான பிள்ளையார் சுழியை போட்டுள்ளோம் என தெரிவித்த அவர், மக்களின் பொழுது போக்கிற்காக உக்கடம் குளம் மெரீனா பீச் போல மாற்றப்பட்டு வருகின்றது எனவும் தெரிவித்தார். நாங்கள் ஆட்சியில் இருக்கும் போது என்னென்ன திட்டங்கள் கொண்டு வர முடியுமோ அனைத்து திட்டங்களும் இங்கு கொண்டு வரப்படும் எனவும் அமைச்சர் எஸ்.பி.வேலுமணி தெரிவித்தார்.
இதனை தொடர்ந்து பொது மக்களிடம் மனுக்களை பெற்று கொண்ட அமைச்சர் வேலுமணி அதிகாரிகளிடம் அவற்றிக்கு உடனடி தீர்வு காண அறிவுறுத்தினார்.
[10/6, 7:11 AM] விண்மீன்நியூஸ்: ✍✅கோவை மாநகரில் காவலர் வீர வணக்க நாள் குறித்து பொதுமக்களிடையே விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில் மாநகரின் பல்வேறு பகுதிகளில் தெருக்கூத்து நடைபெற்றது.

காவல்துறையில் பணியாற்றி, பணியின் போது இறந்த காவலர்களின் வீரத்தினை நினைவூட்டும் வகையில் ஆண்டுதோறும் அக்டோபர் 21ம் தேதி வீர வணக்கம் நாளாக அனுசரிக்கப்பட்டு வருகிறது.
இந்த நிலையில், இன்று கோவை மாநகர காவல் துறை சார்பில் கடந்த 1985ம் ஆண்டு கொள்ளையில் ஈடுபட்ட குற்றவாளிகளால் கொலை செய்யப்பட்ட காவலர் ராஜரத்தினம், 2011ம் ஆண்டு விபத்து ஏற்படுத்திய லாரியை பிடிக்கச் சென்ற போது அந்த லாரியால் உயிரிழந்த காவலர் சந்திரசேகரன், கோவையில் 1997ம் ஆண்டு தடை செய்யப்பட்ட இயக்கத்தைச் சேர்ந்த மூவரால் பொதுமக்கள் முன்னிலையில் கொடூரமாக கொலை செய்யப்பட்ட முதல்நிலை காவலர் செல்வராஜ் ஆகிய 3 காவலர்களுக்கு அஞ்சலி செலுத்தப்பட்டது.
இதைத்தொடர்ந்து காவலர் வீர வணக்க நாள் குறித்து பொதுமக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில் தெருக்கூத்தும் நடத்தப்பட்டது. பறை இசை நடனம் என நடைபெற்ற இந்த நிகழ்வானது பார்வையாளர்களை வெகுவாக கவர்ந்தது.
மேலும், காந்திபுரம் பேருந்து நிலையத்தில் தொடங்கிய இந்த நிகழ்வு, சிங்காநல்லூர் பேருந்து நிலையம், சுங்கம் வீதி, சுந்தராபுரம், உக்கடம் ஆகிய இடங்களில் அடுத்தடுத்து நடைபெற்று வருகிறது.

advertisement by google

Related Articles

Back to top button