கிரைம்

ரெயிலில் நண்பருடன் சேர்ந்து ரெயிலில் பயணம் செய்த பெண்ணை பலாத்காரம் செய்த டிக்கெட் பரிசோதகர் கைது ,பரபரப்பு✍️ முழு விவரம்✍️விண்மீன்நியூஸ்

advertisement by google

லக்னோ

advertisement by google

உத்தரப்பிரதேச மாநிலம் சம்பலில் உள்ள சந்தவுசி ரெயில் நிலையத்தில் இரவில் 32 வயது பெண், தனது 2 வயது மகனுடன் ரெயிலுக்காக காத்திருந்தார்.பிரயாக்ராஜில் உள்ள உறவினர் வீட்டிற்கு செல்வதற்காக அவர் நின்று உள்ளார்.அவர் ரெயிலின் முன்பதிவு இல்லாத பெட்டியில் ஏற டிக்கெட் வாங்கி இருந்தார். அந்நேரம் அப்பெண்ணுக்கு தெரிந்த ராஜு சிங் என்ற டிக்கெட் பரிசோதகர் அங்கு வந்தார்.

advertisement by google

அவர் அப்பெண்ணிடம், `ஏன் தனியாக பொதுப்பெட்டியில் ஏறுகிறாய், அதில் அமர இடம்கூட கிடைக்காது. என்னுடன் வா, ஏ.சி.ரெயில் பெட்டியில் இடம் ஏற்பாடு செய்து தருகிறேன்” என்று கூறி ஏ.சி. பெட்டிக்கு அழைத்து சென்றார்.

advertisement by google

டிக்கெட் பரிசோதகர் அப்பெண்ணுக்கு நான்கு ஆண்டுகளாக தெரியும். எனவே அவர் அழைத்ததால் அவருடன் சென்றார். சிறிது நேரத்தில் டிசி ராஜு சிங்கும் அவரது மற்றொரு நண்பரும் அங்கு வந்து, தங்களிடமிருந்த தண்ணீரை அப்பெண்ணிடம் கொடுத்தனர். அப்பெண்ணும் தண்ணீரை குடித்தார். ஆனால் அதனை குடித்த சிறிது நேரத்தில் அப்பெண்ணிற்கு லேசான மயக்கம் ஏற்பட்டது. உடனே அப்பெண்ணுடன் உறங்கிக்கொண்டிருந்த அவரது 2 வயது மகனை அடுத்த படுக்கைக்கு மாற்றிவிட்டு இரண்டு பேரும் சேர்ந்து அப்பெண்ணை கூட்டு பாலியல் வன்கொடுமை செய்தனர்.ராஜ்காட் முதல் அலிகார் ரயில் நிலையம் வரை இந்த சம்பவம் நடந்துள்ளது

advertisement by google

அப்பெண் அரை மயக்கத்தில் சத்தம் போட்டு கத்த முயன்றார். ஆனால் அவரால் முடியவில்லை. இருவரும் கூட்டு பாலியல் வன்கொடுமை செய்துவிட்டு தப்பிச்சென்றுவிட்டனர்.

advertisement by google

மறுநாள் காலையில் அப்பெண் தான் செல்லவேண்டிய இடத்திற்கு சென்றார். நடந்த சம்பவம் குறித்து யாரிடமும் கூறவில்லை. செல்லவேண்டிய இடத்திற்கு சென்றுவிட்டு தனது சொந்த ஊருக்கு வந்த போது நடந்த சம்பவம் குறித்து தனது கணவரிடம் அப்பெண் தெரிவித்தார்.

advertisement by google

உடனே அவர்கள் இது குறித்து ரெயில்வே ஹெல்ப்லைன் மூலம் புகார் செய்தனர். பின்னர் ரெயில்வே டிக்கெட் பரிசோதகருக்கு எதிராக எழுத்து மூலமும் புகார் செய்தனர்.

advertisement by google

ரெயில்வே போலீஸ் எஸ்பி அபர்னா குப்தா உடனே பாதிக்கப்பட்ட பெண்ணிடம் வாக்குமூலம் பெற்றார். அதோடு இது குறித்து ரெயில்வே உயர் அதிகாரிகளுக்கும் தகவல் கொடுத்தார். அதன் அடிப்படையில் அரசு ரெயில்வே போலீசார் ராஜுசிங் வீட்டில் ரெய்டு நடத்தி அவரை கைது செய்தனர்.

அதோடு அவர் பணியிலிருந்து சஸ்பெண்ட் செய்யப்பட்டார். அவருடன் சேர்ந்து பெண்ணை பாலியல் வன்கொடுமை செய்தது யார் என்பது குறித்து விசாரித்து வருகின்றனர். ரெயில்வே டிக்கெட் பரிசோதகரே ரெயிலில் பயணம் செய்த பெண்ணை பாலியல் வன்கொடுமை செய்தது அனைவருக்கும் அதிர்ச்சியை ஏற்படுத்தி இருக்கிறது.

advertisement by google

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button