இந்தியாஉலக செய்திகள்தமிழகம்

தமிழகம் இந்தியாஉலகம் விரிவான மதியசெய்திகள்(4.10.2019)

advertisement by google

????விண்மீன்நியூஸ்????
ஐஎன்எக்ஸ் மீடியா முறைகேடு வழக்கில் ப.சிதம்பரத்தின் ஜாமீன் மனு தொடர்பாக பதிலளிக்க சிபிஐக்கு உச்சநீதிமன்றம் நோட்டீஸ்

advertisement by google

ஐஎன்எக்ஸ் மீடியா முறைகேடு வழக்கில் ப.சிதம்பரத்தின் ஜாமீன் மனு மீதான விசாரணையை அக்டோபர் 15ம் தேதிக்கு ஒத்திவைத்தது உச்சநீதிமன்றம். சிதம்பரத்தின் ஜாமீன் மனு தொடர்பாக பதிலளிக்க சிபிஐக்கு உச்சநீதிமன்ற நீதிபதிகள் நோட்டீஸ் அனுப்பியுள்ளனர். ப.சிதம்பரத்தின் ஜாமீன் மனுவை வருகிற 15ம் தேதி பிற்பகல் 2 மணிக்கு விசாரிக்கப்படும் என்றும் நீதிபதிகள் ஆர் பானுமதி மற்றும் ரிஷிகேஷ் ராய் ஆகியோர் அடங்கிய அமர்வு தெரிவித்துள்ளது.
[10/4, 4:40 PM] விண்மீன்நியூஸ்: winmeennewsவிரைவு செய்திகள்
இந்திய பொருளாதாரத்தை சிதைத்த மோடி : ராகுல்

advertisement by google

வயநாடு : இந்திய பொருளாதாரத்தை சிதைத்தது மோடியும், பா.ஜ.,வும் தான் என காங்., எம்.பி., ராகுல் குற்றம்சாட்டி உள்ளார்.

advertisement by google

கேரளாவையும், கர்நாடகாவையும் இணைக்கும் தேசிய நெடுஞ்சாலைகளில் இரவு நேரங்களில் பயணிக்க தடை விதிக்கப்பட்டிருந்தது. நெடுஞ்சாலை 766 ல் பந்திப்பூர் புலிகள் காப்பகம் உள்ளதால் தடை விதிக்கப்பட்டது. இதற்கு எதிர்ப்பு தெரிவித்து கேரள மாநிலம் வயநாடு தொகுதிக்கு உட்பட்ட சுல்தான் பேதரி நகரை சேர்ந்த இளைஞர்கள் கடந்த 10 நாட்களாக போராட்டம் நடத்தி வருகின்றனர். இதன் ஒரு பகுதியாக இன்று உண்ணாவிரத போராட்டம் நடத்தப்பட்டது. இதற்கு ஆதரவு அளிக்கும் வகையில் வயநாடு எம்.பி.,யான ராகுல், இன்றைய போராட்டத்தில் கலந்து கொண்டார்.

advertisement by google

அப்போது பேசிய ராகுல், தேசிய நெடுஞ்சாலையில் இரவு நேரங்களில் பயணிக்க விதிக்கப்பட்ட தடையை நீக்க வேண்டும் என்பதில் அனைத்து அரசியல் கட்சிகளும் ஒன்றுபட்டு உள்ளன. இந்த தடையால் கேரளா- கர்நாடகா ஆகிய இரு மாநில மக்களும் பாதிக்கப்பட்டுள்ளனர். எங்கள் சட்ட நிபுணர்கள் குழுவுடன் இது பற்றி பேசி உள்ளேன். விரைவில் இதற்கு சட்ட ரீதியாக தீர்வு காணப்படும். இது தொடர்பாக பார்லி.,லும் குரல் எழுப்புவேன்.

advertisement by google

இந்தியாவின் மிகப் பெரிய பலமே அதன் பொருளாதாரம் தான். அந்த பொருளாதாரத்தை சிதைத்தது மோடியும், பா.ஜ.,வும் தான். எதற்காக இதை செய்தார் என்பதற்கு அவர் பதிலளித்தே தீர வேண்டும். நாட்டில் எதற்காக மிகப் பெரிய அளவில் வேலையிழப்பு மற்றும் வேலையில்லாத நிலையை உருவாக்கினார்? இதை நடத்துவதால் மோடிக்கு என்ன கிடைக்கிறது என்பது தான் மிகப் பெரிய விவாதமாக உள்ளது என்றார்.
[10/4, 4:40 PM] விண்மீன்நியூஸ்: ❇செய்தி கதம்பம்
ஹெல்மெட் தலைக்கா? பெட்ரோல் டேங்குகளுக்கா? நீதிமன்றம் கண்டனம்

advertisement by google

ஹெல்மெட் குறித்த வழக்கு இன்று சென்னை உயர்நீதிமன்றத்தில் மீண்டும் விசாரணைக்கு வந்தபோது, ‘இருசக்கர வாகன ஓட்டிகளை விட பெட்ரோல் டேங்குகள் தான் அதிகமாக ஹெல்மெட் அணிகின்றன என்று கண்டனம் தெரிவித்த நீதிபதிகள், ஹெல்மெட் தலைக்கா? பெட்ரோல் டேங்குகளுக்கா? என்று கேட்டுள்ளனர். ஹெல்மெட் சோதனையை தொடர்ந்து நடத்த வேண்டும் என்றும் உத்தரவிட்டனர்.

advertisement by google

மேலும் இந்த வழக்கை நவம்பர் 11ஆம் தேதிக்கு சென்னை உயர்நீதிமன்றம் ஒத்திவைத்து உத்தரவு பிறப்பித்துள்ளது
[10/4, 4:40 PM] விண்மீன்நியூஸ்: மதியம் 2 மணிவரை பல்வேறு மாவட்டங்களில் நடந்தவை

தஞ்சை: வல்லம் அருகே தனியார் பல்கலைக்கழக விடுதியில் பி.எச்.டி மாணவர் ரகுவரன் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார். சென்னையை சேர்ந்த மாணவர் ரகுவரன் தற்கொலை செய்தது குறித்து வல்லம் போலீசார் விசாரணை நடத்துகின்றனர்.

நாகை மாவட்டம் வேதாரண்யம் அடுத்த ஆறுகாட்டுத்துறையை சேர்ந்த 4 பேரை நெடுந்தீவு அருகே எல்லை தாண்டி வந்ததாக இலங்கை கடற்படையினர் சிறை பிடித்தனர். இதேபோல 8 படகுகளில் கோடியக்கரைக்கு தென்கிழக்கே எல்லை தாண்டி மீன் பிடித்ததாக இலங்கையை சேர்ந்த 18 மீனவர்களை இந்திய கடலோர காவல் படையினர் கைது செய்து விசாரிக்கின்றனர்.

திருச்சி லலிதா நகைக்கடை கொள்ளை தொடர்பாக திருவாரூர் சீராத்தோப்பை சேர்ந்த 5 பேரிடம் போலீஸ் விசாரணை. ஒருவர் பிடிபட்ட நிலையில்,
தப்பியோடிய சுரேஷின் தாயார் கனகவல்லி உள்பட 5 பேரிடம் விசாரணை

காஞ்சிபுரம் to செங்கல்பட்டு நோயாளிகளை ஏற்றிச் சென்ற 108 அவசர ஊர்தி வாகனத்தின் மீது தனியார் நிறுவனத்தின் பேருந்து மோதிய விபத்தில் அவசர ஊர்தியின் ஓட்டுனர் ஜெயக்குமார் சம்பவ இடத்தில் பலி .மருத்துவ உதவியாளர் தினகரன் உள்ளிட்ட சிலர் படுகாயம் . செங்கல்பட்டு அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு காயம்பட்டவர்கள் சிகிச்சைக்கு அனுமதி

நெல்லையில் பெண்ணை வீட்டில் பூட்டி வைத்து பாலியல் தொழிலில் ஈடுபடுமாறு கொடுமைப்படுத்திய 5 பேர் கைது

திருவள்ளூர் சோழவரம் சோளிபாளையத்தில் வீட்டில் பதுக்கி வைத்திருந்த 10 லட்சம் செம்மரக்கட்டைகள் பறிமுதல்

திருச்சி லலிதா ஜூவல்லரி நகைக் கடையில் கொள்ளை போனதை அடுத்து தனியார் காப்பீட்டு நிறுவன அதிகாரிகள் ஆய்வு

கோவை
பொள்ளாச்சி அருகே நூற்பாலையில் பயங்கர தீவிபத்து: பல லட்சம் பொருட்கள் சேதம்

புதுச்சேரி
காங்கிரஸ் வேட்பாளர் ஜான்குமாருக்கு ஆதரவாக புதுவை முதல்வர் நாராயணசாமி தேர்தல் பிரச்சாரம் செய்து வருகிறார்.
காமராஜ் நகர் தொகுதி காங்கிரஸ் வேட்பாளர் ஜான் குமாருக்கு ஆதரவாக முதல்வர் நாராயணசாமி, சாரம் உள்ளிட்ட இடங்களில் வாக்கு சேகரிக்கிறார்.
காங்கிரஸ் வேட்பாளருக்கு ஆதரவாக திமுக, விசிக கம்யூனிஸ்ட் கட்சிகள் மற்றும் ஆதரவு கட்சியினர் பிரச்சாரம் நடத்துகின்றனர்.

பெரம்பலூரில் தனியார் கல்லூரி பேருந்துகள் அடுத்தடுத்து மோதிக் கொண்டதில் 15க்கு மேற்பட்ட மாணவர்கள் படுகாயம் அடைந்துள்ளனர்.
பெரம்பலூர் – அரியலூர் சாலையில் சித்தளி பேருந்து நிறுத்தத்தில் தனியார் கல்லூரி பேருந்துகள் அடுத்தடுத்து மோதி விபத்து ஏற்பட்டுள்ளது.

கிருஷ்ணகிரி மாவட்டம் ஓசூரில் அருகே 2 குழந்தைகளை கிணற்றில் வீசிவிட்டு தாய் தற்கொலை செய்துகொண்டார்.
கொடகரை மலைக்கிராமத்தில் நாகம்மா என்ற பெண் தனது மகன் பிரேம்குமார்(3), மகள் பிரியம்மா(7) ஆகியோரை கிணற்றில் வீசி கொன்றுவிட்டு, தானும் கிணற்றில் குதித்து தற்கொலை செய்தார்.
கிணற்றில் வீசப்பட்டு உயிரிழந்த குழந்தைகள் மற்றும் தாய் நாகம்மா ஆகியோரின் உடல்களை மீட்க முயற்சிகள் ஏற்பட்டு வருகிறது.
அதே நேரம் நாகம்மாவின் கணவர் பசவராஜ் மற்றும் குடும்பத்தினரிடம் போலீஸ் விசாரணை நடத்தி வருகிறது.


⭐⭐⭐⭐⭐⭐⭐⭐⭐⭐
தொகுப்பு
winmeennews.com செய்திகதம்பம்

⭐⭐⭐⭐⭐⭐⭐⭐⭐⭐


[10/4, 4:43 PM] விண்மீன்நியூஸ்: ❇செய்தி கதம்பம்
சென்னையில் ஆபரணத் தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.48 உயர்ந்து ரூ. 29,088க்கு விற்பனை

சென்னையில் ஆபரணத் தங்கத்தின் விலை ரூ.48 உயர்ந்து ஒரு சவரன் ரூ.29,088க்கு விற்பனையாகி வருகிறது.

தங்கத்தின் விலை கிராமுக்கு ரூ.6 உயர்ந்து ரூ.3,636க்கு விற்பனை செய்யப்பட்டு வருகிறது.

அதே நேரம் வெள்ளி விலை கிராமுக்கு 20 காசுகள் குறைந்து ரூ.49.10க்கும், கிலோ ரூ.49,100க்கும் விற்பனையாகி வருகிறது.

கடந்த சில நாட்களாக ஏற்ற இறக்கத்துடன் காணப்பட்ட தங்கத்தின் விலை நேற்று  மீண்டும் 29 ஆயிரத்தை தாண்டியுள்ளதால் மக்கள் அதிர்ச்சியடைந்துள்ளனர்
[10/4, 4:43 PM] விண்மீன்நியூஸ்: ❇செய்தி கதம்பம்
அப்பாவு வழக்கில் உயர் நீதிமன்ற உத்தரவை எதிர்த்து இன்பதுரை உச்ச நீதிமன்றத்தை நாடியுள்ளார்

மறு வாக்கு எண்ணிக்கை நடத்துவது என்ற ஐகோர்ட்டு உத்தரவை எதிர்த்து மனு

அதிமுக எம்எல்ஏ இன்பதுரை தொடர்ந்த மனு உச்ச நீதிமன்றத்தில் இன்று விசாரணைக்கு வருகிறது
[10/4, 4:43 PM] விண்மீன்நியூஸ்: ?REAKING NEWS LIVE

ராதாபுரம் தொகுதி தேர்தலில் பதிவான தபால் வாக்குகளை மீண்டும் எண்ணும் பணி முடிந்தது!

நேரலை செய்திகள்
[10/4, 4:43 PM] விண்மீன்நியூஸ்: வேலூர் மாவட்டம் – ஆம்பூர் ரயில் நிலையம் அருகே முதியவர் ரயில் தண்டவாளத்தை கடக்க முயன்ற போது ரயிலில் சிக்கி உயிரிழந்தார்.
[10/4, 4:43 PM] விண்மீன்நியூஸ்: ❇செய்தி கதம்பம்
ரெப்போ வட்டி விகிதத்தை குறைத்தது இந்திய ரிசர்வ் வங்கி :

ரெப்போ வட்டி விகிதத்தை 0.25% குறைத்தது ரிசர்வ் வங்கி

5.40%ஆக இருந்த வட்டி விகிதம் 5.15%ஆக குறைப்பு

கடன்களுக்கான வட்டியை குறைக்கும் நிர்பந்தத்தில் வங்கிகள்

வீட்டுக்கடன், வாகன கடன்களுக்கான வட்டி விகிதம் குறையும் என எதிர்பார்ப்பு
[10/4, 4:43 PM] விண்மீன்நியூஸ்: நேரலை செய்திகள்

1508 தபால் வாக்குகள் முதலில் எண்ணப்பட்டு வருகின்றன. திமுக வேட்பாளர் அப்பாவு சார்பில் வழக்கறிஞர் என்.ஆர். இளங்கோ வாக்கு எண்ணிக்கை நடைபெறும் அரங்கில் உள்ளார்.

4 மணிநேரம் நடைபெறும் மறு வாக்கு எண்ணிக்கை

தபால் வாக்குகளை எண்ணுவதற்கு 2 மணி நேரமும், வாக்குப்பதிவு இயந்திரங்களில் பதிவான வாக்குகளை எண்ண 2 மணி நேரமும் ஒதுக்கப்பட்டுள்ளது – தேர்தல் ஆணைய தரப்பு வழக்கறிஞர் தகவல்.
[10/4, 4:43 PM] விண்மீன்நியூஸ்: ❇செய்தி கதம்பம்
உள்ளாட்சி தேர்தலுக்கான வாக்காளர் பட்டியலை வெளியிட்டார் சென்னை மாநகராட்சி ஆணையர்

தமிழ்நாடு மாநில தேர்தல் ஆணையத்தின் உத்தரவின்படி உள்ளாட்சி தேர்தலுக்கான வாக்காளர் பட்டியலை சென்னை மாநகராட்சி ஆணையர் (பொறுப்பு) லலிதா வெளியிட்டார்.

மொத்த வாக்காளர் எண்ணிக்கை – 57,97,652, குறைந்தபட்சமாக  மண்டலம் 12ல் உள்ள வார்டு 159ல் 2,921 வாக்காளர்கள் உள்ளன.

அதிகபட்சமாக மண்டலம் 10ல் உள்ள வார்டு 137ல் 54,801 வாக்காளர்கள் உள்ளனர்.

மொத்த வாக்குச் சாவடிகள் -5,714.வாக்காளர் பட்டியல் அனைத்து மண்டல அலுவலகத்திலும் பொதுமக்கள் பார்வைக்கு வைக்கப்படும்
[10/4, 4:43 PM] விண்மீன்நியூஸ்: ❇செய்தி கதம்பம்
ஐஎன்எக்ஸ் மீடியா வழக்கில் ப.சிதம்பரத்தின் ஜாமீன் மனு மீது உச்சநீதிமன்றத்தில் விசாரணை தொடங்கியது

ஐஎன்எக்ஸ் மீடியா முறைகேடு வழக்கில் ப.சிதம்பரம் தாக்கல் செய்த ஜாமீன் மனு மீதான விசாரணையை அக்டோபர் 15ம் தேதிக்கு ஒத்திவைத்தது உச்சநீதிமன்றம்
[10/4, 4:43 PM] விண்மீன்நியூஸ்: ❇செய்தி கதம்பம்
4 மணிநேரம் நடைபெறும் மறு வாக்கு எண்ணிக்கை – தேர்தல் ஆணைய தரப்பு வழக்கறிஞர் தகவல் :

தபால் வாக்குகளை எண்ணுவதற்கு 2 மணி நேரம்

வாக்குப்பதிவு இயந்திரங்களில் பதிவான வாக்குகளை எண்ண 2 மணி நேரமும் ஒதுக்கப்பட்டுள்ளது
[10/4, 4:43 PM] விண்மீன்நியூஸ்: ❇செய்தி கதம்பம்
ஐஎன்எக்ஸ் மீடியா முன்னாள் நிறுவனர் இந்திராணி முகர்ஜி விவகாரத்து பெற்றார்

இந்திராணி முகர்ஜி பீட்டர் முகர்ஜி இருவரும் பரஸ்பரம் விவாகரத்து செய்தனர்

இந்திராணி முகர்ஜி பீட்டர் முகர்ஜியை கடந்த 2002ம் ஆண்டு திருமணம் செய்தனர்

ப சிதம்பரம் கைதாக காரணமாக இருந்தவர் இந்திராணி முகர்ஜி.
[10/4, 4:43 PM] விண்மீன்நியூஸ்: ❇செய்தி கதம்பம்
கரும்பு விவசாயிகளுக்கு நிலுவைத் தொகை மற்றும் ஊக்கத் தொகையை உடனே வழங்குக:

வைகோ
[10/4, 4:43 PM] விண்மீன்நியூஸ்: ❇செய்தி கதம்பம்
தமிழக அரசின் முடிவால் பேனர் கலாச்சாரம் தொடர வாய்ப்பு” – சுபஸ்ரீயின் தாய் வேதனை..!

சுபஸ்ரீயின் மறைவுக்குப் பின் பேனர்‌ கலாச்சாரம் முடிவுக்கு வரும் என எதிர்பார்த்த நிலையில், மீண்டும் பேனர் வைக்க அனுமதி பெறப்பட்டிருப்பது கவலை அளிப்பதாக அவரின் தாய் கீதா தெரிவித்துள்ளார்.

தமிழக அரசின் முடிவால் பேனர் கலாச்சாரம் தொடர வாய்ப்புள்ளதாகக் கூறினார்.

மேலும், ‘பேனர் கலாச்சாரத்திற்கு முற்றுப்புள்ளி விழும் என்பது கேள்விக்குறி.

பேனர் வைத்துதான் பிரதமரை வரவேற்க‌ வேண்டுமா? சுபஸ்ரீயின் ஆன்மா சாந்தியடையும் என எதிர்பார்த்தோம். சுபஸ்ரீயின் மறைவே இறுதியாக இருக்கும் என நினைத்தோம்.’ எனத் தெரிவித்தார்.
[10/4, 4:43 PM] விண்மீன்நியூஸ்: ❇செய்தி கதம்பம்
உள்ளாட்சி தேர்தலுக்கான வரைவு வாக்காளர் பட்டியல் தமிழகம் முழுவதும் அந்தந்த மாவட்ட ஆட்சியர்களால் வெளியீடு
[10/4, 4:43 PM] விண்மீன்நியூஸ்: ?REAKING NEWS LIVE

ராதாபுரம் தொகுதி மறுவாக்கு எண்ணிக்கை முடிவை அறிவிக்க உச்சநீதிமன்றம் இடைக்கால தடை!

நேரலை செய்திகள்
[10/4, 4:43 PM] விண்மீன்நியூஸ்: ❇செய்தி கதம்பம்
“ராதாபுரம் தொகுதி மறுவாக்கு எண்ணிக்கைக்கு தடை விதிக்க மறுப்பு”

இன்பதுரை தொடர்ந்த மேல்முறையீட்டு வழக்கில் உச்சநீதிமன்றம் அதிரடி

வாக்கு எண்ணிக்கை முடிவுகளை அறிவிக்கக் கூடாது – உச்சநீதிமன்றம் தீர்ப்பு
[10/4, 4:43 PM] விண்மீன்நியூஸ்: ❇செய்தி கதம்பம்
ராதாபுரம் தொகுதி மறு வாக்கு எண்ணிக்கை நடந்தாலும் முடிவை அறிவிக்ககூடாது: உச்சநீதிமன்றம்

ராதாபுரம் தொகுதி மறுவாக்கு எண்ணிக்கை முடிவை அறிவிக்க உச்சநீதிமன்றம் இடைக்கால தடை!
[10/4, 4:43 PM] விண்மீன்நியூஸ்: ❇செய்தி கதம்பம்
ராதாபுரம் தொகுதியில் பதிவான 1508 தபால் வாக்குகளை எண்ணும் பணி நிறைவு பெற்றது

36 மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்களில் பதிவான 16,083 வாக்குகளை எண்ணும் பணி தொடங்கியது
[10/4, 4:44 PM] விண்மீன்நியூஸ்: JUSTIN

??நாங்குநேரி, விக்கிரவாண்டி இடைத்தேர்தலில் அதிமுகவுடன் பாஜக இணைந்து பணியாற்றும்

அதிமுக வேட்பாளர்களை வெற்றி பெறச் செய்யும் வகையில் பாஜகவினர் மிகத் தீவிரமாக செயல்படுவர்

பொன். ராதாகிருஷ்ணன்

??ஊடகதளம்
[10/4, 4:44 PM] விண்மீன்நியூஸ்: ??சென்னை, கோவை, திருப்பூரில் இருந்து சிறப்பு பேருந்துகள் இயக்கம்

ஆயுதபூஜையை முன்னிட்டு, பொது மக்கள் வசதிக்காக சென்னையில் இருந்து சிறப்பு பேருந்துகள் இன்று முதல் இயக்கப்பட்டு வருகின்றன.

கூட்ட நெரிசலைத் தவிர்க்கும் வகையில், கோயம்பேடு, மாதவரம் புதிய பேருந்து நிலையம், பூந்தமல்லி, தாம்பரம், கே.கே.நகர் என 5 இடங்களில் இருந்து பேருந்துகள் இயக்கப்பட்டு வருகின்றன. வழக்கமாக இயக்கப்படும் 2 ஆயிரத்து 225 பேருந்துகளுடன், 930 சிறப்பு பேருந்துகள் என மொத்தம் 3 ஆயிரத்து 155 பேருந்துகள் இன்று இயக்கப்படுகின்றன.

இதேபோல, நாளையும் வழக்கமாக இயக்கப்படும் 2 ஆயிரத்து 225 பேருந்துகளுடன், 765 சிறப்பு பேருந்துகள் என மொத்தம் 2 ஆயிரத்து 990 பேருந்துகள் இயக்கப்பட உள்ளன. ஆக இன்றும் நாளையும் மொத்தம் 6 ஆயிரத்து 145 பேருந்துகள் ஆயுத பூஜைக்காக இயக்கப்படுகின்றன.

இதேபோல் திருப்பூரில் இருந்து பிற ஊர்களுக்கு பயணிகள் செல்லும் வசதிக்காக 280 சிறப்பு பேருந்துகளும், கோவையிலிருந்து 717 சிறப்பு பேருந்துகளும் இன்று முதல் இயக்கப்படுகின்றன.

ஆந்திரா மார்க்கமாக செல்லக்கூடிய பேருந்துகள், மாதவரம் புதிய பேருந்து நிலையத்திலிருந்தும், ஈசிஆர் வழியாக புதுச்சேரி, கடலூர், சிதம்பரம் செல்பவர்கள் கேகே நகர் பேருந்து நிலையத்திலிருந்தும், திண்டிவனம் மார்க்கமாக திருவண்ணாமலை செல்லும் பேருந்துகள் தாம்பரம் ரயில் நிலைய பேருந்து நிலையத்திலிருந்தும், வேலூர், ஆரணி, ஆற்காடு, திருப்பத்தூர் செல்வர்கள் வசதிக்காக பூந்தமல்லி பேருந்து நிலையத்திலிருந்தும் சிறப்பு பேருந்துகள் இயக்கப்படுகின்றன.

ஆயுத பூஜை முடிந்த பின் தங்கள் சொந்த ஊர்களில் இருந்து திரும்பும் வசதிக்காக திருப்பூரிலிருந்து 266 சிறப்பு பேருந்துகளும் கோவையிலிருந்து 490 சிறப்பு பேருந்துகளும் பெங்களூரில் இருந்து 237 சிறப்பு பேருந்துகளும் இயக்கப்படும் என அரசு போக்குவரத்து கழகம் ஏற்கெனவே அறிவித்துள்ளது.

??ஊடகதளம்
[10/4, 4:44 PM] விண்மீன்நியூஸ்: ??ஆந்திர மாநிலம் கடப்பா மாவட்டத்தில் நின்று கொண்டிருந்த லாரி மீது கார் மோதிய விபத்தில் காரில் பயணம் செய்த 4 பேர் உயிரிழப்பு.

??ஊடகதளம்
[10/4, 4:44 PM] விண்மீன்நியூஸ்: ??தமிழ் பல்கலைக்கழகத்தில் தொல்பொருட்களை காலக்கணிப்பு செய்யும் ஏ.எம்.எஸ் ஆய்வகத்தை அமைக்க வேண்டும் – அமைச்சர் பாண்டியராஜனுக்கு ரவிக்குமார் கடிதம்.

??ஊடகதளம்
[10/4, 4:44 PM] விண்மீன்நியூஸ்: நீலகிரி

கோடநாடு கொலை கொள்ளை வழக்கில் குற்றம் சாட்டப்பட்டுள்ள 10 பேர் இன்று மாவட்ட அமர்வு நீதிமன்றத்தில் ஆஜர் வழக்கை விசாரித்த நீதிபதி வடமலை எதிர்வரும் 31.10 .19 அன்று அனைவரும் ஆஜராக வேண்டுமென உத்தரவிட்டார்.

??ஊடகதளம்
[10/4, 4:44 PM] விண்மீன்நியூஸ்: ??நிலத்தடி நீர் திருட்டை தடுக்கும் வகையில் புதிய வழிகாட்டும் நெறிமுறைகள் கடைபிடிக்க வேண்டும் என தமிழக அரசுக்கு சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

??ஊடகதளம்
[10/4, 4:44 PM] விண்மீன்நியூஸ்: JUSTIN

??அதிமுக, பாஜக இடையே எந்தவித கருத்து வேறுபாடுகளும் இல்லை

பாஜக மாநில தலைவர் இல்லாத காரணத்தினால் அகில இந்திய தலைமையிடம்தான் பேச முடியும்

  • பொன். ராதாகிருஷ்ணன்

??ஊடகதளம்
[10/4, 4:44 PM] விண்மீன்நியூஸ்: ??நியூட்ரினோ திட்டம் குறித்து தமிழக, கேரள தலைமைச் செயலாளர்களுடன் மத்திய அமைச்சரவைச் செயலாளர் ராஜிவ் காபா ஆலோசனை.

??ஊடகதளம்
[10/4, 4:44 PM] விண்மீன்நியூஸ்: ?? இந்திய பங்குச்சந்தைகள் வீழ்ச்சியுடன் நிறைவு

மும்பை: மும்பை பங்குச்சந்தை குறியீட்டு எண் சென்செக்ஸ் 433 புள்ளிகள் சரிந்து 37,673ல் வர்த்தகம் நிறைவுபெற்றது. தேசியப் பங்குச்சந்தை குறியீட்டு எண் நிஃப்டி 139 புள்ளிகள் சரிந்து 11ஆயிரத்து 174 புள்ளிகளாக வணிகம் நிறைவானது.

??ஊடகதளம்
[10/4, 4:44 PM] விண்மீன்நியூஸ்: JUSTIN

??தமிழக, கேரள தலைமைச் செயலாளர்களுடன் காணொளி காட்சி மூலம் மத்திய அமைச்சரவை செயலர் ராஜிவ் கவுபா, நியூட்ரினோ திட்டம் தொடர்பாக ஆலோசனை

தமிழகத்தில் நியூட்ரினோ ஆய்வக மையம் அமைப்பதில் இருக்கும் சிக்கல்கள் குறித்து பேசினார்.

?winmeennews.com?ஊடகதளம்
[10/4, 4:44 PM] விண்மீன்நியூஸ்: ??கேரள உயர்நீதிமன்ற தலைமை நீதிபதியாக நியமிக்கப்பட்ட நீதிபதி மணிக்குமாருக்கு சென்னை உயர் நீதிமன்றத்தில் பிரிவு உபச்சார விழா நடத்தப்பட்டது.

நீதிபதி மணிக்குமார் பணியிட மாற்றம் காரணமாக சென்னை உயர்நீதிமன்ற நீதிபதிகள் எண்ணிக்கை 55 ஆக குறைந்தது.

??ஊடகதளம்
[10/4, 4:44 PM] விண்மீன்நியூஸ்: PTExclusive

??திருச்சி லலிதா ஜூவல்லரி நகை கொள்ளையர்கள் பைக்கில் தப்பிச் செல்லும் புகைப்படம் வெளியானது.

?winmeennews.com?ஊடகதளம்

advertisement by google

Related Articles

Back to top button