சினிமா

தி.மு.க.வில் இருப்பேன் அரசியலுக்கு வரமாட்டேன்- அமெரிக்கா நெப்போலியனாக மாறிய நடிகர் நெப்போலியன்✍️முழுவிவரம்✍️விண்மீன் நியூஸ்

advertisement by google

தி.மு.க.வில் இருப்பேன் அரசியலுக்கு வரமாட்டேன்- நெப்போலியன் மாமல்லபுரம்:மாமல்லபுரத்தில் நடந்த நிகழ்ச்சியில் நடிகர் நெப்போலியன் கலந்து கொண்டார். பின்னர் அவர் நிருபர்களிடம் கூறியதாவது:-நான் நடிகர் சங்கத்தில் பொறுப்பில் இருந்த 2001 காலகட்டத்தில், வேலை கேட்டு வந்த இளைஞர்களின் நலனுக்காக முதலில் ஒரு நிறுவனமாக இதை தொடங்கினேன். பின்னர் இது படிப்படியாக சாப்ட்வேர் நிறுவனமாக வளர்ந்தது. சென்னை, அமெரிக்கா என இரண்டு இடங்களில் இயங்கும் இந்த நிறுவனம் விரைவில் திருச்சி, திருநெல்வேலி பகுதியிலும் தொடங்கப்படும்.தி.மு.க.வில் கலைஞர் கருணாநிதி எனக்கு குரு ஆவார். அவரின் ஆசியுடன் தி.மு.க.காரனாகவே இருப்பேன். அரசியலுக்கு மீண்டும் வர விருப்பம் இல்லை. அமரிக்காவில் எனது மகனை கவனிக்கும் பொறுப்பில் நானும் எனது மனைவியும் இருப்பதால் அதற்கே நேரம் சரியாக உள்ளது. அங்கு விவசாயமும் செய்து வருவதால் மகிழ்ச்சியாக வாழ்கிறேன்.சினிமாவில் வாய்ப்பு வருகிறது. தவிர்த்து வருகிறேன். எனது சினிமா குருநாதர் பாரதிராஜா, கேப்டன் விஜயகாந்த் இருவருக்கும் உடல்நிலை சரியில்லை என்பதால் அவர்களை சந்தித்து பேச உள்ளேன். முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலினை சந்திக்க நேரம் கிடைத்தால் அவரையும் மரியாதை நிமித்தமாக சந்தித்து பேசிவிட்டு அமெரிக்கா திரும்புவேன்.இவ்வாறு அவர் கூறினார்.

advertisement by google

advertisement by google

advertisement by google

advertisement by google

advertisement by google

advertisement by google

advertisement by google
advertisement by google

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button